பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 அம்மையும் அப்பனும் அவதாரத்தில் நிலை மாற்றினார். இரணியனை நரசிங்க மாக நின்று, அவனைத் தானே மடிமீது வைத்து ஏற்று அருள் புரிந்தார். இவை இரண்டும் அவர்கள் செய்த பிழைகளை அடித்துத் திருத்தியதேயாம். இறைவன் தன் மையினைப் பிரகலாதன், - 'உலகு தந்தானும் பல்வேறு உயிர்கள் தந்தானும் உள்ளுற்று உலைவிலா உயிர்கள் தோறும் அங்கங்கே உறைகின் றானும் மலரினில் மணமும் எள்ளில் எண்ணெயும் போல எங்கும் அலகில்பல் பொருள்கள் பற்றிமுற்றிய அரிகாண் அத்தா' என்று கூறுகின்றான். மேலும், 'சாணினும் உளன் ஒர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன் மாமேருக் குன்றினும் உளன் இந்நின்ற தூணினும் உளன் நீசொன்ன சொல்லிலும் உளன் இவ்வுண்மை காணுதி விரைவில் என்றான். அருகில் உள்ள து னி லும் உளன் என்பதைக் கேட்டதும் இரணியன் எளிமையில் அதைப் பற்றிக் கொண்டு தனக்கும் வழிதேடிக் கொண்டான். இப்பாட லில் கம்பர் அன்றே அணுவைப் பிரிக்க முடியும் என்றும் காட்டி, பல ஆயிரமாயிரம் துகளாக அணு பிரிக்கக் கூடிய தொன்று எனக் காட்டி, அதன் மிக நுண்ணிய அந்தச் சிறுகூறுக்குக் கோன் எனப் பெயரும் கொடுத்துள்ளார் என்பதை எண்ணத் தமிழகம் அறிவு நிலையில் அன்றே முன்னேறி இருந்தது என மகிழ வேண்டியுள்ளது. அணு