பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 75 திருமால் அவர்களை அடித்துத் திருத்திய வரலாறுகள் நாடு அறிந்த வரலாறுகள் அல்லவா! அவற்றுள் ஒன்றி ரண்டு காண்போம் வால்மீகி சொல்லாத இரணியன் வரலாற்றைத் தம் இராமாயணத்தில் கம்பர் புகுத்தியுள்ளார். வீடணன் இராவணனுக்கு அறிவுறுத்தும் வகையில் இரணியன் கதை யினைக் கூறி அத்தகைய பெருந்தெய்வமே இன்று, 'ஆல மும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான், என விளக்கும் வகையில் அல்வரலாறு அமை கின்றது. எனினும் இராமனாகிய திருமாலின் கையிலேயே இராவணனும் கும்பகர்ணனும் அமைய விரும்பியமை யால் வீடணன் சொல்லுக்கு இசையவில்லை. தன்னை இராமனுடன் வந்துசேர அழைத்த வீடணனுக்குக் கும்ப கர்ணன் இராமன் கையால் மாள்வதே எனக்குப் பொருள் என்கிறான். 'உலைவிலாத் தருமம் பூண்டாய் உலகுள r தனையும் உள்ளாய் தலைவநீ உலகுக்கெல்லாம் உனக்கது தக்கதே யால் புலையுறு மரணமேனும் எனக்கது - பொருளதேயால்' என்கின்றார் கம்பர். அப்படியே கும்பகர்ணனும் இரா வணனும் இராமனுடைய அம்பினாலேயே உய்தி பெறு கின்றனர். மற்றவர்களையெல்லாம் இலக்குவன் முதலி யோர் சாய்க்க இவ்விருவரையும் இராமனே ஏற்று அருள் புரிகின்றான் அவன் வைகுண்டத்தில் செய்த தவற்றுக்கு அடித்துத் திருத்தலே இராமாயணம். இரணியனும் அவன் தம்பியும் திருமாலின் வெவ்வேறு அவதாரங்களால் திருத்தப் பெறுகின்றனர். தம்பி உலகினைப் பாயாகச் சுருட்டிச் செல்ல, அவனை வராக