பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அம்மையும் அப்பனும் என்று சேக்கிழார் இடத்துக்கு ஏற்ற வகையில் நாயனா ருக்கு ஏற்றம் தந்து போற்றுகின்றார். இவ்வாறே இறை வனாம் சிவனுடைய அடித்தலையும் அணைத்தலையும் காட்டக் கோடிகோடி சான்றுகள் உள்ளன. எனினும் இந்த அளவொடு நின்று, முருகன், திருமால் ஆகிய முதல்வர்கள் அடித்து அணைத்த வரலாறுகள் ஒரு சில கண்டு அமைவோம். - - வைகுண்டத்தே திருமாலின் சந்நிதியில் வாயில் காவலராக இருந்தவர்கள் இருவர். அவர்கள் ஒருகால் அங்கே நாரத முனிவரை மதியாமையால், அவர் இவர் களை உலகில் பிறக்கச் சாபமிட்டார். இதை அறிந்த திருமால் அவர்களைக் கடிந்து கொண்டார். அவர்களும் சாப நீக்கம் தந்தருள முனிவரை வேண்டினர். அவரோ கொடுத்த சாபத்தை நீக்க முடியாதென்றும், வேண்டு மாயின் இரண்டு வழிகளில் ஒன்றைக் கொள்ளலாம் என்றும் கூறினார். ஒன்று திருமாலுக்கு அடியராகஅன்பராக நூறு பிறவி எடுப்பது, மற்றொன்று திருமாலுக்கு நேர் விரோதியாக மூன்று பிறவி எடுப்பது, இதில் எது வேண்டும்? எனக் கேட்டார். இருவரும் நூறு பிறவி எடுத்து நெடுங்காலம் வைகுண்டத்தை விட்டு நீங்கி இருப்பதைக் காட்டிலும் விரோதியாக மூன்று பிறவி எடுத்து விரைந்து திரும்பவே விரும்பினர். மேலும் உற்றவரைக் காட்டிலும், விரோதியே பகைவரை எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார் என்றும், எனவே திருமாலை மறவாத மாற்றுப் பிறவியாய மூன்றுமே வேண்டும் எனவும் கூறினர். முனிவரும் அவ் வாறே ஆகுக என ஆசி வழங்கினார். அவர்களே முதற் பிறவியில் இரணியாட்சன், இரணியகசிபு என்றும், இரண்டாவது பிறவியில் கும்பகர்ணன், இராவணன் எனவும், மூன்றாவது பிறவியில் கம்சன், சிசுபாலன் எனவும் உலகில் பிறந்து திருமாலாலே திருத்தப்பெற்று, பின் வைகுண்டம் சேர்ந்தனர். இந்த மூன்று பிறவிகளிலும்