பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தங்கம் தென்னரசு மாண்புமிகு அமைச்சர், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை பொய்மையேய் வெல்லும் வாழ்த்துரை "என்றும் தமிழ் வளர்க - கலை தலைமைச் செயலகம் சென்னை - 600 009. யாவும் தமிழ்மொழியால் விளைந்தோங்குக!” -பாரதிதாசன் பிள்ளைகள் கல்வி கற்காமலேயே பெற்றோரைப் பின்பற்றித் தாமே தம் பிள்ளைப் பருவத்தில் பேசக் கற்றுக்கொள்வதுதான் வழக்குமொழி; தாய்மொழி என்பது மொழியியல் பேராசிரியர்களின் கருத்து. மொழியானது மேன்மேலும் வளர்ந்து மக்களை வாழ்விக்க வேண்டுமானால் அது பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட வேண்டும். ஏட்டிலே இடம்பெற்றால் மட்டும் போதாது. நாட்டு நடவடிக்கைகள் அதன்வழி நடைபெற வேண்டும்; மக்கள் நாவிலே வழங்க வேண்டும்; அன்றாட வாழ்விலே புழங்க வேண்டும். 'புதிய புதிய துறைகள் தோன்றுந்தொறும், ஏராளமான கலைச்சொற்கள் தோன்றுதற்கும், வழங்கும் சொற்களில் புதிய பல பொருள்கள் இணைந்து விரிவடைவதற்கான சூழ்நிலையில் அகரமுதலி மிகவும் இன்றியமையாத நூலாகிறது' என்று 1974இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை உருவாக்கிய மேனாள் மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதுபற்றி மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஒரு செயலியை உருவாக்கி, அதன்வழி பல்வேறு துறைசார்ந்த வல்லுநர் குழு அமைத்து புதிய கலைச்சொற்களைத் திரட்டி சொற்குவையில் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவிறுத்தினார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவ்வாறான வளர்ச்சிக்கு மொழியில் பிறமொழிச்சொற்கள் கலக்கலாகாது. ஆனால், இன்றைய நிலையில் பன்னெடுங்காலமாகப் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதென்பது தன்னுடைய மேதைமையைக் காட்டும் என்னும் பொய்யான கற்பனையின் அடிப்படையிலும், தனக்குத் தன் தாய்மொழியாம் தமிழ் மட்டுமின்றிப் பிறமொழியிலும் புலமையுண்டென்பதைக் காட்டுவதற்காகவும்