பக்கம்:அயற்சொல் அகராதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாய்மையே வெல்லும் பதிப்புரை நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல்தளம், எண்.75 சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர், GlGr 606-600 028. "வீறுடைய செம்மொழி தமிழ்மொழி - உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி” பெருஞ்சித்திரனார். மக்களின் எண்ணவோட்டங்களை வெளிப்படுத்தும் கருவியாக அமைவது மொழி. அம்மொழி தாய்மொழியாய் இருத்தலே சிறப்பு. தமிழ்மொழி தூய்மையாக இருக்க வேண்டும். ஆனால் வணிகம், சமயம், ஆட்சி, கல்வி, இடப்பெயர்வு ஆகியவற்றால் மொழிக்கலப்பு, கடன் வாங்கல், மொழித்திரிபு ஆகியன நிகழ்கின்றன. ஆட்சியாளர்களால் அவர்களது மொழிச்சொற்கள் ஆளப்படுவோரிடம் விரைந்து பரவுவதுமுண்டு. அவ்வாறான பரவலும், கலப்பும், திரிபும் தாய்மொழியின் சொல் வளத்தைக் குறைத்துவிடும்; குறைத்துவிடுவதோடில்லாமல் மொழி வளர்ச்சியையும் தடைப்படுத்தும். அவ்வாறு தடைப்படுத்துவதால் மொழியின் சொல்லாக்கமும், சொற்புழக்கமும் நறுங்கிவிடும். அவ்வாறான நிலை மொழியின் இயல்பு வளர்ச்சிக்கு இடையூறென்பது வெள்ளிடை மலை. அத்தகைய நறுங்குதலிலிருந்து தாய்மொழியைக் காப்பாற்றிட எல்லா மொழிவாணர்களும் மொழித்தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை உலகம் முழுவதும் காணலாம். தமிழ்மொழி ஒரு இயற்கைமொழி. எழுத்துக் கூட்டலுக்கேற்ற பலுக்கலும், பலுக்கலுக்கேற்ற எழுத்துக் கூட்டலும் அமைந்த ஒட்டுநிலை மொழி. சொல்வளம் மிகுந்துள்ள இம்மொழியில் பிறமொழிச் சொற்களின் ஊடாட்டத்தைத் தவிர்க்க விழைந்த சான்றோர்களால் தோற்றுவிக்கப்பட்டதுதான் தனித்தமிழியக்கம். இத்தனித்தமிழியக்கத்தின் முன்னோடியாக மறைமலையடிகளாரையே தலைமைப் பொறுப்பில் முன்னிறுத்துவர். அவரை அடியொற்றித் தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், அண்ணல் தங்கோ, பொன்னம்பலனார் எனப் பல பெருமக்களும் தமிழில் பிறமொழிக் கலப்பைத் தவிர்க்க வலியுறுத்தினர். பிறமொழிச் சொற் கலப்புடன் பேசும் நடையால் தமிழ்மொழியில் சொற்பெருக்கம் தடைபெற்றுப்போனதையுணர்ந்த மொழிவாணர்கள் சமற்கிருதச் சொற்கலப்பை அறவே தவிர்க்கத் தலைப்பட்டனர்.