பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
9
 


டார்வின் அதை வாங்கி நன்றாகப் பார்த்தபின் “இதைக் கொல்வதற்கு முன்னால், இது ரீங்காரம் செய்ததா? இல்லையா? என்று கேட்டார்.

"ஆமாம்” என்றனர் சிறுவர்கள். "பலே இதுதான் அசல் ஹம்பக்" என்றார் டார்வின். ஆங்கிலத்தில் ஹம் என்றால் ரீfங்காரம் என்றும் பக்' என்றால் பூச்சி என்றும் அர்த்தம். -

ஆனால், 'ஹம்பக்' என்று இரண்டையும் சேர்த்து ஒரே சொல்லாகச் சொன்னால் "முழுப்பொய்" என்று அர்த்தம்.

ஏமாற்றப்பார்த்தவர்கள் ஏமாந்தார்கள்.


((6) டம் பார்த்ததற்குக் கூலியா?பிரபல நடிகர் வில்ஸன் பாரட் தம்முடைய வீட்டைப் புதுப்பித்து, அலங்கரித்தார்.

தொழிலாளர்கள் அங்கே வேலை செய்தனர். அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினார் நடிகர்.

தொழிலாளர்களுக்கெல்லாம் தான் நடித்த "லண்டன் தீபங்கள்" என்ற படத்துக்கு இலவச டிக்கெட்டுகள் கொடுக்கத் தீர்மானித்தார் நடிகர். .