பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


48
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


கவிஞரோ தமது வழக்கப்படிதத்துவ மேதையின் சட்டைப் பொத்தானை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, கவனத்தை எல்லாம் அருகில் நின்ற விளக்குத் தூணில் செலுத்தியபடி மணிக்கணக்காகப் பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் தத்துவ மேதையோ அவசரமாகப் போக வேண்டியதிருந்தது. தமது சட்டைப் பையிலிருந்த சிறு கத்தியை எடுத்து பொத்தானுக்கும் தமக்கும் இருந்த தொடர்பை அறுத்து விட்டு, தப்பித்தது போதும் என்று விரைந்து ஓடிவிட்டார்.

தமது அலுவலை முடித்து விட்டு, வெகுநேரம் கழித்து திரும்பி, அந்த இடத்துக்கு வந்தார் தத்துவமேதை.

கையில் ஒரு பொத்தானைப் பிடித்தவாறு, விளக்குத் தூணைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தார் கவிஞர்.(52) யர்ந்து விட்டார்


ஸிங்க்ளேர் லூயிஸ் என்ற ஆசிரியர் நோபல் பரிசு பெற்றவர்.

இளமையில் அவர், பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் விளம்பரத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு வாரச் சம்பளம் 23 டாலர்.

இரண்டாவது ஆண்டில், “இன்னும் இரண்டு டாலர் சம்பள உயர்வு வேண்டும்” என்றுதுணிவோடு கேட்டுவிட்டார் லூயிஸ்.