பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
49
 


உரிமையாளரும் அவ்வாறு சம்பள உயர்வு அளித்தார். ஆனால், கொடுக்கும்போது, "லூயிஸ்,நீ நல்ல புத்திசாலியான இளைஞன்தான். ஆனாலும் அடிக்கடி சம்பள உயர்வு கேட்கிறாயே; அது சரியல்ல. இப்பொழுது, நீ பார்க்கும் வேலைக்கு இதுவே மிக உயர்ந்த சம்பளம், தெரிந்ததா?” என்று கூறினார்.

அதற்கு பிறகு, பதினைந்து ஆண்டுகள் ஆகவில்லை

நிறுவனத்தின் உரிமையாளர், அதே லூயிஸுக்கு, புதிய நாவல் ஒன்றுக்கு, அதன் கையெழுத்துப் பிரதியைக்கூடப் படித்துப்பார்க்காமல், நம்பிக்கையாக 75,000 டாலர் முன்பணம் கொடுக்க முன்வந்தார் என்றார் ஆச்சரியமாக இல்லையா?(53) பொறுக்கி டுத்த மாணவர்கள்பிரபல ஆசிரியர் ஜான் ரஸ்கின் நடத்தும் சொற்பொழிவு வகுப்புக்கு மாணவர்கள் பலர் வந்து கூடினார்கள்.

ஆனால், சொற்பொழிவை இன்னொரு நாளைக்கு ஒத்திப்போடப்பட்டிருப்பதாக அறிவிப்பு ஒட்டியிருந்தது. அதைப் பார்த்து விட்டு, மாணவர்கள் எல்லோரும் போய்விட்டனர்.

அடுத்த முறை, முன்னிலும் பாதி மாணவர்களே வந்து கூடினார்கள். அன்றும், இன்னொரு நாளைக்கு ஒத்திப் போடப்பட்டிருப்பதாக அறிவிப்பைக் கண்டு மாணவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.