பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
51
 


தம்முடைய கடிதத்துக்குப் பஸ் முதலாளியிடமிருந்து பதில் வராததால், மறுபடியும் கடுமையான வார்த்தைகளை உபயோகித்து கடிதம் எழுதினார் கிப்ளிங், ஆனால், அதற்கும் பதில் வரவில்லை.

மறுநாள் கிப்ளிங், மிகுந்த கோபத்தோடு சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று, மன்னிப்புக் கடிதம் எழுதாமைக்காக முதலாளியைக் கடிந்து கொண்டார்.

முதலாளி கிப்ளிங்கிடம் மன்னிப்புக் கேட்டபடியே “நான் வேண்டும் என்றேதான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதவில்லை. ஏனென்றால், நான் உங்கள் கடிதத்துக்குப் பதில் எழுதாவிடில் நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பீர்கள். அந்தக் கடிதங்களை எல்லாம், பிரமுகர்களின் கையெழுத்து வேட்டைக்காரர்களுக்கு விற்றால் எனக்கு நல்ல வருமானம் கிடைக்கிறதே" என்றார்.(55) சோதிடரின் டுக்கம்இந்த உலகையே ஒரு சமயம் பரபரப்பு அடையச் செய்த நாஜித் தலைவர் ஹிட்லர் ஒரு நாள் சோதிடரிடம் நான் எப்போது இறப்பேன்!" என்ற விசித்திரமான கேள்வி ஒன்றைக் கேட்டார்.

திடீரென ஹிட்லர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டவுடன் சோதிடர் கொதிப்படைந்தார். ஏறுமாறாக ஏதேனும் சொல்லி வைத்தால், ஹிட்லரின் சினத்துக்கு ஆளாக நேரிடுமே என