பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


52
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


அஞ்சினார் சோதிடர். ஆனால், அவர் கேட்ட கேள்விக்கு விடைகூறாமல் இருந்தால், அவர் விடவும் மாட்டார்.

சில சோதிட நூல்களைப் புரட்டியபடி, “நீங்கள் ஒரு யூதர் விடுமுறை நாளில் மரணம் அடைவீர்கள்” என்றார் சோதிடர்.

ஹிட்லரோ சோதிடரை விடவில்லை. “அது எந்த நாள்?” என்று மறுபடியும் கேட்டார். - .

“அது....அது.”.. என்று சோதிடர் திணறி, திக்கு முக்காடி, 'எனக்குத் தெரியாது.” என்று கூறினார் நடுக்கத்தோடு.(56) சிரிக்கவைப்பவர் ழுகிறார்டாக்டரிடம் ஒருவர் வந்தார். "எனக்கு என்னவோ மனசே சரியில்லை; தூக்கமும் வருவதில்லை; தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது” என்று புலம்பினார்.

வந்தவரை நன்றாகப் பரிசோதித்தார் டாக்டர். “நீங்கள் ஏதாவது வேடிக்கை நகைச்சுவை முதலானவற்றைப் பார்த்தால் நல்லது. நகைச்சுவை நடிகர் க்ரிமால்டி எங்கேயாவது நடித்தால் போய்ப் பாருங்கள். அதுதான் நல்லது. வேறு எந்த மருந்தும் உபயோகமில்லை” என்றார் டாக்டர்.

வந்தவர்,"ஐயோ! நான்தானே ஐயா, அந்தக் க்ரிமால்டி!" என்றார்.

மற்றவர்களைச் சிரிக்க வைப்பவர்கள் தங்க்ளுடைய சொந்த வாழ்க்கையில் அழுவதோடு, கஷ்டப்படுவார்கள் போலும்!