பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
57
 


மறுநாள் புத்தகத்தை செல்வந்தரிடம் கொண்டுபோய்க் கொடுத்தான். ஆனால், அவரோ இளைஞனைக் கடிந்து, புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

பிறகு, ஒரு வழியாக, தம்முடைய தோட்டத்தில் மூன்று. நாட்கள் உழைக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இளைஞனும் அவ்வாறே மூன்று நாட்கள் உழைத்தான்.

புத்தகப் பிரியனான அந்த இளைஞன் யார்?

அவரே புகழ் பெற்ற ஆபிரகாம் லிங்கன்!(62) குதிரையிலே போய் விட்டாராம் !கர்னல் டேவிஸ் என்பவர் எதைச் சொன்னாலும் சற்று மிகைப்படுத்தியே கூறுவது அவருடைய வழக்கம்.

ஒரு நாள் சில நண்பர்களிடம், “எனக்கு இந்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியோடு போட்டியிடுவது என்றால் மிகவும் பிரியம். தினந்தோறும் குதிரைப் பந்தய மைதானத்தில் என்னுடைய குதிரைமீது சவாரி செய்தபடியே, வடகோடியிலிருந்து தென்கோடி வரைக்கும் எக்ஸ்பிரஸ் வண்டியோடு ஒடுவேன். இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு தடவையும் என் குதிரையே வெற்றிபெறுகிறது” என்று கர்னல் கூறினார்.

ஒரு நண்பர் அதை நம்பவில்லை. “உங்கள் குதிரையால் அது முடியவே முடியாது; நிரூபிப்பீர்களா? நூறு டாலர் பந்தயம் கட்டுகிறேன்” என்று சவால் விட்டார்.