பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
61
 


பட்டியல்களின் பிரதிகள் தயாராகி விட்டன. வரப்போகும் தேர்தல் பற்றிய பேச்சு அந்தச் சமயத்தில் தீவிரமாக எழுந்தது.

பட்டியலின் பிரதி ஒன்றை குடியரசுக் கட்சிக்கு 350 டாலருக்கு விற்றார்.

பாரபட்சம் இல்லாமல் ஜனநாயகக் கட்சிக்கும் பட்டியலின் ஒரு பிரதியை 500 டாலருக்கு விற்றார்.

மீதி இரண்டு பிரதிகளையும் ஒரு வண்டியில் போட்டு, அரசு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி விட்டார் இயக்குநர்.

“இன்னும் அவை அங்கேதான் இருக்கும். யார் கேட்டாலும் விலைக்குக் கிடைக்கும். இலக்கியச் சங்கத்தாருக்கு விருப்பமானால் வாங்கிக் கொள்ளலாமே” என்றார் அந்த இயக்குநர்.(66) ணி ன்ன னால் ன்ன?பிரபல விஞ்ஞானி தாமஸ் எடிசன் புதிதாகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்தார்.

சுவர்க் கடிகாரம் ஒன்று வாங்கி தொழிற்சாலையில் பொருத்தினார். தொழிலாளர்கள் எல்லோரும் அந்தக் கடிகாரத்தையே ஓயாமல் பார்க்கத் தொடங்கினார்கள். ஆதனால் வேலை தாமதமாயிற்று. எடிசனும் நல்ல உழைப்பாளி.