பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


(76) பேசாமல் ருத்து வேற்றுமையா?ருஷ்யாவின் பிரபல நடிகர் போரிஸ் மார்ஷலாவ் என்பவர் ஒரு சமயம், அமெரிக்கா சென்றிருந்தபோது மக்கள் பிரதிநிதி சபையான காங்கிரஸைக் காணச் சென்றார்.

அதைப் பார்த்த பிறகு அவர் கூறியதாவது.

"இந்தக் காங்கிரஸ் சபை மிகவும் அதிசயமாயிருக்கிறது. அதிலே ஒருவர் பேச எழுந்திருக்கிறார். ஆனால், அவர் ஒன்றும் பேசுவதில்லை. எவரும் செவிசாய்த்துக் கேட்பதும் இல்லை. பிறகு, அத்தனை பேரும் கருத்து வேற்றுமை கொண்டு விடுகிறார்கள்” என்றார்.(77) வர்களிடமும் சொல்லுங்கள்அமெரிக்க அரசின் வீரர்களும் புரட்சிக்காரர்களும் ஒரு சமயம் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட போரிட்டுக் கொண்டிருந்தனர்.

மதப்பற்று மிக்க பிரபல பாதிரியாருக்கு அது மிகுந்த வருத்தத்தை அளித்தது. அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்களிடம் சென்று,

“நம் கர்த்தரின் ஒய்வுநாளில் கூட இவ்வாறு போர் புரியலாமா?” என முறையிட்டார் பாதிரியார்.