பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


80
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
 


மறைத்துக் கொள்கிறேன். சம்மதமா?” என்றார் மார்க் ட்வைன்.

நண்பர் அதற்கு இணங்கினார். அவருக்குத் தெரியாமல் மார்க் ட்வைன் ரயில் நிலையத்துக்குப்போய், இரண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டார். -

ரயில் வந்தது. நண்பர் மார்க் ட்வைன் இருக்கைக்குக் கீழே புகுந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து, டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

மார்க் ட்வைன் அவரிடம் இரண்டு டிக்கெட்டுகளைக் காண்பித்தார்.

'இன்னொருவர் எங்கே?" என்று கேட்டார் பரிசோதகர்.

மார்க் ட்வைன் தலையை அசைத்தவாறு, "இது என் நண்பருடைய டிக்கெட்! அவர் கொஞ்சம் ஒரு மாதிரி! இருக்கைக்கு அடியில் உட்கார்ந்து வருவதே அவர் வழக்கம்” என்று கிண்டலாகக் கூறினார்.(87) டாக்டரின் ச்சரிக்கைடாக்டர் ஒருவர், மளிகைக் கடைக்கு வெகு நாட்களாக பாக்கி வைத்திருந்தார்.

"அந்த டாக்டரிடம் போய், அவரை நான் வரச் சொன்னதாகத் தெரிவி” என தன்னுடைய வேலையாளை அனுப்பினார் மளிகைக் கடைக்காரர்.