பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
87
 


போன்ற செல்வாக்கு மிக்கவர்களுடையவையாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லவே இல்லை.

கட்டிடத்துக்கு முதல் கல்லை வைத்த கொத்தனார் எல்லோரையும் விட அதிக நாட்கள் உழைத்த தொழிலாளி, மிகத் திறமையாய் வேலை செய்த கொல்லர் முதலான பற்பல தொழிலாளர்களின் சிலைகளே அவை! ஆச்சரியமாக இல்லையா?(94) த்தகைய ச்சரிக்கைஅமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில், பஸ் கார்களுக்காக நடப்பட்டிருந்த சாலை எச்சரிக்கையில்,

“பள்ளிக்கூடம் -- குழந்தைகளைக் கொல்லாதே" என்று முதல் வரியில் எழுதப்பட்டிருந்தது. அடுத்த வரியில், “ஆசிரியருக்காகக் காத்திரு” என எழுதப்பட்டிருந்தது.(95) சாதுர்யமான தில்மார்க் ட்வைன் என்பவர் அமெரிக்காவின் நகைச்சுவை எழுத்தாளர்; பத்திரிகாசிரியர்.

ஒருமுறை, வியாபாரியான சந்தாதாரர் ஒருவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

“இன்று தபாலில் வந்த தங்கள் பத்திரிகையை வாங்கிப் பிரித்துப் பார்த்தவுடன் அதன் மத்தியில் சிலந்தி வலை