உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 233

மறுதேசஞ்சென்று அவ்விடத்திய பஞ்சங்களை அகற்றி சருவவுயிர்களையும் கார்த்து வியாபாரிகளையும் மிக்க தனவந்தர்களாகச் செய்துவருவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒரு தேசத்தோர் குடும்ப சங்கதிகளை மறுதேசத்தோரறிந்து கொள்ள தபால் இலாக்காக்களை உண்டு செய்துள்ளது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. அதனினுந் துரித சங்கதிகளை தந்தியிலாக் காக்களின் மூலமாக உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள செய்துள்ளது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ.

ஒருசாதியோருடன் மறுசாதியோர் சண்டையிட்டு மண்டைகள் உடைத்துக்கொள்ளுவதை சமாதானப்படுத்தி அடக்கியாளுவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. ஒருமதத்தோருடன் மறுமதத்தோர் போர்புரியும் மதகர்வத்தை அடக்கியாளுவது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. தங்கடங்கள் சுயபாஷையையே கல்லாது கையேந்தி நிற்பவர்களுக்கு இராஜாங்கத்தோர் கல்வியையும் சுயக்கல்வியையும் அளித்து இராஜாங்க உத்தியோகங்களையுங் கொடுத்து வண்டி குதிரை ஏறி உலாவச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ, வேளாளத் தொழிலாளர்கள் யாவரும் நஞ்சைபூமி புஞ்சை பூமிகளை உழுது பயிர் செய்வதற்கு ஆற்றுப்பாய்ச்சல்களையும், ஏரிப் பாய்ச்சல்களையும் செவ்வை செய்து செருக்கடையவைத்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. சருவ மக்களும் சுத்தநீரை மொண்டு குடிக்கவும், சுத்த ஆடைகளைக் கட்டவும், சுவையான பதார்த்தங்களைப் புசிக்கவும், வீதிவீதிக்கு வேதாந்த சங்கை விசாரிக்கச்செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ. மல்லு பீசுகளென்றும், உல்லன் பீசுகளென்றும், மாச்சிஸ்பெட்டிகளென்றும், வாக்சிஸ்பெட்டிகளென்றும், வாசனை சோப்புகளென்றும், பூசனை சோப்புகளென்றும், கொழுப்புக் காண்டிலென்றும், மெழுக்குக் காண்டிலென்றும் பெயர் வைத்து அதன் சுகத்தை அடையச் செய்தது பிரிட்டிஷ் ஆட்சியல்லோ.

இத்தியாதி சிறந்த செயல்களையும், செயலின் நன்றியையும் மறந்து பிரிட்டிஷ் இராஜதுரோகம் செய்வதாயின் இந்த துற்கருமம் யாரைச் சாரும். இந்தியாவையும் இந்தியக்குடிகளையே சாரும். இந்திய சோதிரர்களே, இந்திய கனவான்களே, இந்திய விவேகிகளே கருணை கூர்ந்து கண்ணோக்குங்கள்.

நீதிபின் செங்கோலைக்கொண்டு நம்மொண்டுவரும் பிரிட்டிஷ் துரைமக்கள் பத்துநாள் நமது தேசத்தை விட்டகன்று அன்னியதேசத்தில் தங்கியிருப்பார்களாயின் இருபது தீவட்டிக் கொள்ளைக்காரர் ஒருவீதியில் நுழைந்து கொள்ளையடிக்குங்கால் பத்து வீதி சுதேசிகளும் சேர்ந்து பக்கத்துணை வருவார்களோ, ஒருக்காலும் வரமாட்டார்கள். தங்கள் சொத்துக்களையும், தங்கள் உயிரையும் பாதுகாத்துக்கொண்டு பதுங்குமிடத்தைப் பார்ப்பார்கள். அதற்குதவியாக அந்த வீதிக்காரன் என்ன சாதியென ஒற்றுமெய்க் கேட்டை ஊன்றிநிற்பார்கள்.

இவர்களை ஓர் கதேசிகளென்றும், இந்த சுதேசிகள் தன்னவரைப்போல் அன்னியர்களைப் பாதுகாப்பார்கள் என்றும் எண்ணிக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் நன்றியை மறப்பது நன்றன்று. அவர்கள் செய்நன்றியை மறந்திருப்பினும், அவர்களுக்குக் கேடுண்டுசெய்யும் வழிகளைத்தேடி இராஜ துரோகிகளென்னும் பெயரை ஏற்பது அதனினும் நன்றன்று. ஆதலின்,

கொடிது கொடிது குலக்கேடு கொடிது
கொடிது கொடிது குருநிந்தை கொடிது
கொடிது கொடிது கடவுட்குறை கொடிது
கொடிதுகொடிது ராஜதுரோகங்கொடிதே.

- 3:35; பிப்ரவரி 3, 1910 -


113. அச்சியந்திரங்களின் சட்டமும், அனந்தபத்திரிகாகோஷ்டமும்

அந்தோ, வாய்கொழுப்பு சீலையால் ஒழுகின்றதென்னும் பழமொழிக்கிணங்க பத்திரிகைகளுக்கு அதிகாரங் கொடுத்துவிட்டார்களென்னும் செருக்கால் தங்கள் ஒற்றுமெய்க் கேட்டையும், எதிரிகளின் ஒற்றுமெய் சுகத்தையும், தங்களுக்குள்ள வித்தையின் குறைவையும், எதிரிகளுக்குள்ள வித்தையின் சிறப்பையும், தங்களுக்குள்ள பலத்தின் குறைவையும், எதிரிகளுக்குள்ள பலத்தின்