அரசியல் / 237
நாளுக்குநாள் இடுக்கம் பெறுவதற்கு வழியாதென்பீரேல் இவ்வேழைக் குடிகளின் சீர்திருத்தத்திற்கென்று ஓர் பிரதிநிதியிருந்து இராஜாங்கத்தோருக்கு விளக்கிக் காண்பிக்கா குறையேயாம். இந்த சாதிபேதமற்ற திராவிட ஏழைகளுக்கென்று ஓர் பிரதிநிதி இராஜாங்க சங்கத்தில் இருப்பராயின் கனந்தங்கிய கோகேலவர்களும் மற்றுமுள்ளோரும் நெட்டாலுக்குப் போய் சீவிக்கும் ஏழைக்குடிகளைத் தடுப்பது தருமமல்லவென்றும் அப்படி தடுப்பது ஏழைகளைக் கெடுப்பதற் கொக்குமென்றும் எடுத்துக்காட்டுவார்கள். அத்தகைய ஏழைகளுக்கென்றோர் பிரதிநிதியில்லாக் குறைவால் எடுத்தக் கைப்பிள்ளை எல்லோருக்கும் பிள்ளையென்பது போலும் எழியவன் பெண்சாதி எநுமானனுக்கெல்லாம் பெண்டென்பது போலும். ஏழைமக்களை சீர்பெறவிடாது இழுத்திழவு கொள்ளுகின்றார்கள். நெட்டாலுக்குச் செல்லும் நூறு ஏழைக் குடிகளில் பத்துபேர் வியாபாரிகளாகச் செல்லுவார்களாயின் தொண்ணூறு பேர் கூலிகளாகவே உழைத்து சுகம் பெறுகின்றார்கள். இவர்களுள் பத்து வியாபாரிகளுக்காக முனைந்து கொண்டு தொண்ணூறு ஏழைக்குடிகளைக் கெடுத்துவிடலாமோ. இதுவும் பொதுவாயப் பிரதிநிதிகளுக்கழகாமோ. இந்திய சாதித்தலைவர்களால் ஏழைக்குடிகள் படுங் கஷ்டங்களில் நெட்டால் தலைவர்களால் படுங் கஷ்டம் எட்டில் ஒரு பங்கிருக்கமாட்டாதே. அத்தகைய நெட்டால் ஏழைகளுக்கென்று படுங் கஷ்டத்தில் கால்பாகம் இந்திய யேழைகளுக்கென்று நமது கோகேலவர்கள் பாடுபடுவராயின் பொதுவாய பிரதிநிதியென்றே இவரைக் கொண்டாடலொக்கும். அங்ஙனமின்றி பொய்யாகிய சாதிநாற்றத்தால் ஏழைக்குடிகள் நசிந்து நாசமாய்ப்போகினும் போகட்டும் நெட்டாலுக்குப்போய் சுகம்பெறலாகாதென்று முயல்வதால் எவ்வகையிற் பொதுப் பிரதிநிதியென்று எண்ணக்கூடும். எப்போதவர் ஏழைக்குடிகளின் Fஈடேற்றத்தைத் தடுக்க முயல்கின்றாரோ அவரை சாதித்தலைவர்கள் பிரதிநிதியென்றே கூறல்வேண்டும்.
அத்தகைய சாதித்தலைவர்களின் பிரதிநிதி வாக்கியத்தை ஏற்றுக்கொண்டு சாதிபேதமற்ற ஏழைக்குடிகளின் ஈடேற்றத்தை நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் தடுக்காமலிருக்க வேண்டுகிறோம்.
- 3:38; மார்ச் 2, 1910 -
116. பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பிரதம நோக்கம்
அதாவது நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் தற்காலந் தோன்றி வரும் இராஜத்துரோகச் செயல்களுக்கும், இராஜத் துவேஷக் கூட்டங்களுக்கும் இந்தியாவில் தோன்றியுள்ளப் பலசாதிவகுப்பாரில் எச்சாதியார் முக்கிய காரணரென்றும், இராஜாங்கப் பிரதம உத்தியோகங்கள் வேண்டுமென்றும், சுயராட்சியம் வேண்டுமென்றும் பேரவாக்கொண்டு பத்திரிகைகளில் வரைகிறவர்களும், பேசுகிறவர்களும் எச்சாதி வகுப்பினரென்றுங் கண்டறிந்துக்கொள்ள வேண்டியதே பிரிட்டிஷ் ஆட்சியின் பிரதம நோக்கமென்னப்படும்.
தற்காலம் அடுத்தடுத்துத் தோன்றிவரும் இராஜத்துரோகச் செயல்களுக்குக் காரணபூதமாக விளங்குவோர் சுயவாட்சியாம் அவாவின் பெருக்கத்தால் பிரிட்டிஷ் ஆட்சியை எதிற்கத்தக்க எத்தனங்களைச் செய்துவருகின்றார்கள். அவ்வகுப்பாரின் குணா குணங்களையும் போரவாச் செயல்களையும் உறவாடிக் கெடுக்கும் மித்திரபேதங்களையும் பத்து குடும்பங்கள் கெட்டாலும் கெட்டும் நாம்மட்டிலும் சுகமாக வாழ்கவேண்டுமென்னும் வஞ்சகர்களையும், மனித வகுப்போரை மனிதர்களாக பாவிக்காத மட்டிகளையும், தாங்களே சகல சுகங்களையும் அநுபவிக்க வேண்டும் ஏனையோர் அத்தகைய சுகங்களை அநுபவிக்கலாகாதெனத் தீங்கு செய்துவரும் பொறாமெயுள்ளோர்களையும் கண்டறிந்து குடிகளை அடக்கியாளும் உத்தியோகங்களைக் கொடாமலும்,