258 / அயோத்திதாசர் சிந்தனைகள்
நூற்றியேழு கோடியே முப்பது லட்சமென வகுத்திருக்கின்றார்கள்.
இத்தியாதி வரவுசெலவுகளில் மிகுந்த தொகை இவ்வளவென்று திட்டமாக விளங்குகின்றது. இவற்றை நம்தேசத்தோர் நன்குணராது இந்தியாவின் பணங்கள் யாவும் இங்கிலாந்திற்குப் போய் சேர்ந்துவிடுகிறதென்று கூறுவது வீண் பிரளியேயாம். இவ்வகையாய் முன் விருத்தி பின் விருத்திகளையும் முன்னேது பின்னேதுக்களையும் முன்செலவு பின்செலவுகளையும் முன்வரவு பின்வரவுகளையும் ஆராய்ச்சி செய்து பார்ப்போமாயின் இராஜாங்கத்தோர் செய்துவரும் விருத்தியின் விஷயம் தெள்ளற விளங்கும்.
இந்தியாவின் பணம் இங்கிலாந்திற்குப் போவதாகவே வைத்துக் கொள்ளினும் அவர்களது உதிரஞ் சிந்த உயிர்கொடுத்து சம்பாதித்த தேசபலனை அவர்கள் அநுபவியாது வேறு யார் அநுபவிக்கக்கூடும். கணக்குகளைப் பார்த்துப் பிதற்றித்திரியும் கையாலாகாத சோம்பேரிகள் வீணே இந்தியாவையும் இங்கிலாந்தையும் பிரித்துப் பேசுவது அழகின்மையேயாம்.
இங்கிலாந்து தேசமானது எவ்வளவு சிறப்பைப் பெருகின்றதோ இந்தியாவும் அவ்வளவு சிறப்பைப் பெருமென்பதற்கு ஆட்சேபமில்லை. காரணமோவென்னில் இந்தியாவை ஆளுகின்றவர்களே இங்கிலாந்தையும் ஆளுகின்றபடியால் ஒன்றை சீர்படுத்தி மற்றொன்றை சீர்கெடுக்கமாட்டார்கள். ஒரு மனிதனுக்கு இரண்டிடத்தில் பூமி இருக்குமாயின் அவற்றுள் ஒன்றை பண்படுத்தி பலனடைவதும், மற்றொன்றை பண்படுத்தாது பலனடைவனோ ஒருக்காலுமில்லை. பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இங்கிலாந்தை சீர்திருத்தி பலனடைந்துக்கொண்டு இந்தியாவை சீர்கெடுத்து பலனடைவர்களோ.
இந்தியாவில் நாளுக்குநாள் பெருகிவரும் கப்பல்களின் சீர்திருத்தங்களும், டெல்லகிராப் சீர்திருத்தங்களும், போஸ்டாபீசு சீர்திருத்தங்களும், விவசாய பண்ணைகளின் சீர்திருத்தங்களும், கைத்தொழில் விருத்தியின் சீர்திருத்தங்களும், வீதிகளின் சீர்திருத்தங்களும், தீபங்களின் சீர்திருத்தங்களும், நீர்க்குழாக்களின் சீர்திருத்தங்களும் கண்டுணர்வோமாயின் இந்திய தேசத்தின்மீதும் பிரஜைகளின்மீதும் பிரிட்டிஷ் துரைத்தனத்தார் எத்தகைய நோக்கமும் அன்பும் வைத்திருக்கின்றார்கள் என்பதை எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.
இத்தியாதி பிரிட்டிஷார் செய்துவரும் சீர்திருத்தச் செயல்களுக்கெல்லாம் நமது தேசத்தோரே சீர்கேட்டை உண்டுசெய்து குடிகளுக்கு இடுக்கங்களையும் மனவருத்தங்களையும் உண்டு செய்துவருகின்றார்கள்.
வித்தையினாலும், புத்தியினாலும், உழைப்பினாலும் பணம் சம்பாதிக்க சக்தியற்ற சோம்பேரிகளுக்கு இராஜாங்க உத்தியோகங்களும் அதிகாரங்களுங் கிடைத்துவிடுமாயின் வேலி பயிரைத் தின்பதுபோல் சுதேசக் குடிகளை சுதேசிகளே வதைத்தும், வஞ்சித்தும் பரிதானமாம் இலஞ்சம் பெற்றும் சீர்கெடுத்துவருகின்றார்கள். இராஜாங்கத்தோர் சம்பளத்தைப் பெற்றும் குடிகளை வஞ்சித்து இலஞ்சம் வாங்கித் தின்போரே இராஜாங்கக் கெடுதிக்கு மூலமாகவும், குடிகளுக்கு சத்துருக்களாகவும் இருக்கின்றார்கள்.
இத்தியாதி இராஜதுரோகிகளாலும் குடிகளின் சத்துருக்களாலுமே நமது தேசம் சீர்கெடுமேயன்றி பிரிட்டிஷ் ஆட்சியால் சீர்கெடுமென்பது கனவிலும் நினையலாகா. அதன் திருஷ்டாந்த தாட்டாந்தங்களை அறியவேண்டியவர்கள் துரைத்தன உத்தியோகத்தில் ஓர் ஆங்கிலேய துரைமகன் செய்துவரும் செயலையும் அன்பின் மிகுதியையும் சுதேசி செய்துவருஞ் செயலையும் இடுக்கத்தையும் நோக்குவதாயின் உள்ளது விளங்கும்.
- 3:50; மே 25, 1910 -
137. காலஞ்சென்ற ஏழாவது எட்வர்ட் இந்தியதேச சக்கிரவர்த்தியார் மாறா கியாபகக் குறிப்பு
தற்காலம் நமது இந்திய சோதிரர்கள் யாவரும் நமது காலஞ்சென்ற சக்கிரவர்த்தியார் மாறா கியாபக சின்ன (மிமோரியல்) ஒன்று அமைக்கவேண்டு