294 / அயோத்திதாசர் சிந்தனைகள்
சீர்திருத்தமும் சுகமும் உண்டோ, அதுவும் கிடையாது. இச்சாதியாசாரத்தால் இஸ்திரிகளுக்கு ஏதேனும் சுகமுண்டோ, இல்லை. முற்றும் கேடேயாம்.
அதாவது, ஓர் இஸ்திரீயானவள் விவாகஞ்செய்யப்பட்டு புருஷனுடன் கலந்து வாழினும் கலக்காமல் ஒழியினும் அவள் விருத்தாப்பியமுற்று மரணமடையும் வரையிற் சீர்கெட்டு அலைய வேண்டியதேயாம். புருஷனோ அறுபதுவயது செல்லினும் அவன் பிரியம்போல் மாற்றி மாற்றி பெண்களை விவாகம் செய்துக்கொள்ளலாம். இஸ்திரீகளோ தனது மங்கைப்பருவகாமிய இச்சையால் சாதியாசாரத்தை ஒழித்து கள்ளபுருஷர்களை விழித்து துள்ளி விளையாடப்பெற்றப் பிள்ளைகளை முறித்து வேலிகளிலும், ஆறுகளிலும் விட்டெறிந்து மருளமருள விழிக்குங்கால் அதிகாரிகளால் பிடிபட்டு கடூர தண்டனைக்கு உட்பட்டு வெறுமனே கைம்பெண்ணாயிருந்த கண்கலக்கத்தினும் அதிக கண்கலக்கமுண்டாகி அல்லலடைந்து மடிகின்றார்கள்.
அருமெயாகப் பெற்றெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தப் பெண் குழந்தைகளுக்கெல்லாம் சதா துக்கத்தை வளர்த்துவரும் சாதியாசாரமும் ஓர் ஆசாரமாமோ. இதைக் கட்டியழுவதும் ஓர் கீர்த்தியாமோ, இல்லை. அல்லது சாதியாசாரம் இருக்கவேண்டுமென்பதில் ஓர் மலமெடுக்கும் தோட்டியை அழைத்து உனக்கு சாதியாசாரம் உண்டா எனில், உண்டென்கின்றான். ஓர் பாப்பானை அழைத்து உனக்கு சாதியாசாரம் உண்டாயெனில் அவனும் உண்டென்கின்றான். இவ்விருதிரத்தோர் சாதியாசாரத்தில் ஏதேனும் கனதன சிறப்புண்டோ, இல்லை. தோட்டிக்கும் சாதியாசாரமில்லை தொண்டமானுக்கும் சாதியாசாரம் இல்லையெனுமிடத்திற் சிறப்புண்டேயன்றி தோட்டிக்கும் சாதியாசாரமுண்டு தொண்டமானுக்கும் சாதியாசார முண்டென்னுமிடத்திற் சிறப்பில்லை யென்பது துணிபு.
ஆதலின் சுதேசியமென்னும் வெறும் ஆசைக்கொண்டுள்ளோர் உள் சீர் திருத்தமாம் மதபேத வூழல்களையும், சாதிபேத ஊழல்களையும் முன்பொழித்து பின்பு புறசீர்திருத்த சுதேசியத்தை நாடுவது அழகாம்.
- 4:21: நவம்பர் 2, 1910 -
166. இந்தியதேச முழுவதும் அன்பினாலும் அதி யூகத்தாலும் ஆளும் வல்லபம் பிரிட்டீஷாருக் குரியதேயன்றி ஏனையோர்க்கு ஆகாவாம்
காரணமோவென்னில் அவர்கள் எத்தேசத்திற்குச் சென்றபோதினும் தங்களைப்போல் ஏனைய மக்களையும் மங்குலத்தோர் என்றெண்ணி அவர்களுக்கு நேரிட்ட ஆபத்தை தங்களுக்கு நேரிட்டதைப்போல் முயன்று காக்கும் அன்பின் மிகுதியேயாம்.
இரண்டாவது, அவர்கள் செல்லும் தேசங்களிலெல்லாம் தாங்கள் சுகத்தை அநுபவிப்பதுபோல ஏனைய மநுமக்களும் அநுபவிக்கவேண்டிய அதியூகத்தால் இரயில்வே சுகம், டிராம்பே சுகம், தபாலாபீசுகளின் சுகம், தந்தியாபீசுகளின் சுகம், ஒரு தேசத்தில் பஞ்சம் பீடித்தால் மறுதேசத்தைக்கொண்டு ஆதரிக்கும் சுகம், புருஷவைத்திய சாலைகளின் சுகம், இஸ்திரீ வைத்திய சாலைகளின் சுகம், ஒரு தேசத்திலில்லா சரக்குகளை மறுதேசத்தினின்று கொண்டுவரக்கூடிய சுகம், நடமாடும் பாதைகளின் ககம், இரவில் உலாவவேண்டிய தீப சுகம், குடிகளுக்கு ஓராபத்துவராது காக்கக்கூடிய போலீசு சுகம், பொய்யர்களையும் கள்ளர்களையும் குடியர்களையும் தீயர்களையும் கொலைஞர்களையும் அடக்கக்கூடிய நியாயஸ்தல சுகம், சகல மநுமக்களும் வண்டி குதிரைகளி லேறிச் செல்லும் சுகம், சகல மநுமக்களும் பேதமின்றி தண்ணீர் மொண்டு அருந்தும் சுகம், பூமிகளை விருத்திச் செய்யும் நீர்ப்பாய்ச்சல்களின் சுகம், தூர தேச கப்பல் யாத்திரை சுகம், காட்டு மிருகாதிகளின் உபத்திரவங்களை நீக்சி ஆதரிக்கும் சுகம், மற்றும் சுகங்களையும் அளித்து சகல மநுமக்களையும் ஆடை சுகம் ஆடாரண சுகம், புசிப்பின் சுகத்திலிருத்தி ஆதரித்து வருகின்றார்கள். இத்தியாதி பேரானந்த சுகங்களை அளித்துவருவதுடன் சகல ஏழை