உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 341


சருவசீவர்களுள் மனிதரீராயசகலரையும் இம்சிக்குங் குணமுடையவர்கள் டிப்பிரஸ் கிளாஸ், யாதொரு வித்தையுமற்றக் கடைச்சோம்பேறிகள் டிப்பிரஸ் கிளாஸ், ஒருவர் சொன்னதை விசாரிணையின்றி நம்பித் திரிவோர் டிப்பிரஸ் கிளாஸ், மேலும் மேலும் பொருளை சம்பாதித்துப் பிறர்க்குதவாது பூமியில் புதைப்போர் டிப்பிரஸ் கிளாஸ், துன்மார்க்கத்திலேயே தொண்டு பூண்டொழுகுவோர் டிப்பிரஸ் கிளாஸ், சாதிபேதமென்னும் பொறாமெயுடைத்து மனிதரூபிகளை மனிதர்களாகப் பாவிக்காது மிருகங்களினுங் கேடாக நடத்துவோர் டிப்பிரஸ் கிளாஸ். தன் தாரமிருக்கப் பிறர் தாரத்தைக் கெடுப்போர் சுப்பிரஸ் கிளாஸ். அன்னியர் பொருளை அடுத்துக் கைப்பற்றுவோர் சுப்பிரஸ் கிளாஸ், சீவராசிகளைக் கொன்றும் மக்களை வதையாமல் வதைத்தும் துன்பஞ்செய்கின்றவர் டிப்பிரஸ் கிளாஸ், பொய்யைச்சொல்லி வஞ்சித்து பொருள்பறிப்பவர் டிப்பிரஸ் கிளாஸ். இதுவே உலகிலுள்ள விவேகமிகுத்தவர்களால் ஓதிவைத்துள்ள இழிந்த பெயர்களாகும்.

அதாவது மக்களுருகொண்டும் இழிந்த செயலை யடைதலால் கீழ்மக்களென்றும், தாழ்ந்த சாதனமுடையவர்களாதலால் தாழ்ந்த சாதியோரென்றும், பொறாமெய் வஞ்சினம், குடிகெடுப்பு முதலிய துற்செயல்கள் நிறைந்துள்ளபடியால் துன்மார்க்கர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள். இத்தகைய டிப்பிரஸ் கிளாசை சீர்திருத்துவோர் மேற்கூறியுள்ள அய்யர் கிளாசென்னும் மேன்மக்களே யாவர். மற்றவர் சீர்திருத்தப்போகின்றார்களென்பது மரக்கட்டையில் இரும்பைத் திருத்துவதற்கொக்கும்.

ஏழைகளை சீர்திருத்துவோர் தனவந்தர்களும் யீகையுள்ளோருமாயிருத்தல் வேண்டும். அவிவேகிகளை சீர்திருத்துவோர் தனவந்தர்களும், விவேக மிகுத்தவர்களுமாயிருத்தல்வேண்டும். அங்ஙனம் தன்னிடம் தனமில்லாது ஏனையோரிடமிரந்து சீர்திருத்துகிறோமென்பதும் தனக்கறிவில்லாது ஏனையோருக்கறிவுறுத்தப் போகின்றேனென்பதும் பேரிழிவேயாம். ஆதலின் ஒவ்வோர் சங்கதிகளையும் ஆய்ந்தோய்ந்து செய்வதே அழகைத்தரும். ஆயாது செய்வது இகழைத்தருமென்பது திண்ணம்.

- 4:47: மே 3, 1911 -


206. பிரிட்டிஷ் ராஜாங்க உதவிபெறுங் கலாசாலைகளில் மதசம்மதபோதமும் சாதிசம்மந்த போதமும் போதிக்கலாகாது

கலாசாலைகளில் மற்றும் யாது சம்மந்தபோதம் போதிக்கவேண்டு மென்னில், சந்திரகலையானது நாளுக்குநாள் வளர்ந்து பூரணமுற்று சகலருக்கும் சுகப்பிரகாசமளிப்பதுபோல் கலை நாற்களை போதித்து விருத்தி யடையச்செய்து சகலசீவர்களையும் சுகவாழ்க்கை பெறச் செய்விக்கவும், வித்தியா நூற்களை போதித்து அரிய வித்தைகளை விருத்தி செய்து மக்களை வித்தியா விவேகிகளாக்கி தாங்கள் சுகம் பெறுவதுடன் தங்களை யடுத்த மக்களையும் சுகம் பெற செய்விக்கவும், விவசாய நூற்களை போதித்து பூரிகளின் குணாகுணங்களையறிந்து நீர்வசதிகளை யுண்டுசெய்யவும், மண்ணைப் பண்படுத்தவும் பயிறுகளை விளைவித்து தாங்களும் தங்கட்குடும்பத்துடன் மற்றய சீவராசிகள் யாவரும் சுகப்புசிப்பெடுத்து ஆனந்த வாழ்க்கைச் செய்விக்கவுமாகிய போதங்களே உலக சீர்திருத்த விசேஷ போதங்களாகும்.

உலகத்தில் தோன்றியுள்ள மக்கள் கலைநூல் விருத்தியாலும், வித்தியா நூல்விருத்தியாலும், விவசாய நூல் விருத்தியாலும், விருத்தி பெறுவார்களன்றி ஏனைய மத நூல் சாதி நூல் விருத்திகளால் ஒருக்காலும் விருத்திபெற மாட்டார்கள். இதற்குப் பகரமாய் அறிவினை விருத்தி செய்யுங் கலை நூற்களைக் கற்றுள்ளதினால் ஐரோப்பிய விவேகிகளும், அமேரிக்க விவேகிகளும், ஜப்பானிய விவேகிகளும் நாளுக்குநாள் எவ்வளவோ பேரானந்த ரகசியங்களை விளக்கி மக்களை சுகச்சீர் பெறச்செய்துவருகின்றார்கள். வித்தியாவிருத்திகளில் இரயில்வே டிராம்பே, டெல்லகிராப், போனகிராப், பொட்டகிராப்,