உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394/ அயோத்திதாசர் சிந்தனைகள்

நாளுக்குநாள் தென்னிந்தியம் சீர்கேடடைந்துவருகின்றது.

இத்தகைய சீர்கேட்டை அறிந்த ராஜாங்கத்தோர் வேண சீர்திருத்தமும் பொருளுதவியுஞ் செய்துவந்த போதிலும் அங்கங்குப் பூர்வக்குடிகளாகிய உழைப்பாளிகளில்லாது வன்னெஞ்சர்ச் செயலால் விலகிநிற்பதே காரணமாகும். இத்தேசத்தியப் பூர்வக்குடிகளும் உழைப்பாளிகளும் நற்குண நற்செயலில் மேன்மக்களுமாக விளங்கினோர்களைக் கீழ்மக்களெனத் தாழ்த்தி அவர்களது சத்தியதன்மமார்க்கமாகிய புத்தன்மத்தையுங் மாறுபடச் செய்துவிட்டபடியால் தேசத்தின் சகல நன்மெகளுங் கெட்டு பாழடைந்து போய்விட்டது. கருணைதங்கிய ராஜாங்கத்தார் கைப்பொருளுதவியுங் கருவிகளின் உதவியும் விவசாயமும் வேண வரையிற் செய்து வந்த போதினும் கைத்தொழிலும் விருத்திபெறாமலே மயங்கிநிற்கின்றது.

உழைப்பாளிகள் ஊரிலுள்ள வரையில் கோதுமைப்பயிறுகளை எங்கும் விருத்தி செய்துவந்தபடியால் நகரங்களில் பெரும் இயந்திரங்களைப் பூட்டி நொய் மாவுகளை வேறுபடுத்தி உரொட்டிகள் சுடவும், மற்றும் பலகாரங்கள் செய்யவும் வேண புசிப்புகளுக்கு ஆதாரமாயிருந்தது. உழைப்பாளிகளைத் தாழ்ந்த சாதியெனத் தாழ்த்தியும் பலவகை இடுக்கங்கள் செய்தும் பாழ்படுத்திவிட்டபடியால் பூமிகளிலுழைத்துப் பாடுபடும் உழைப்பாளிகளுமற்று கோதுமைப்பயிற்றின் விளைவுகளுஞ்செற்று சீர்கேடடைந்து விட்டபடியால் அன்னியதேசத்தோர் விளைவிக்குங் கோதுமை மாவு எப்போது கப்பலை விட்டிறங்குமென எதிர்பார்த்திருக்கின்றார்கள். இத்தகைய விவசாயக்கேடுபாட்டிற்கும், கைத்தொழில் விருத்தி கேட்டிற்குக் காரணம் யாதெனில் சாதிபேதமென்னும் அநாச்சாரமாம் துன்னூற்களும் பொறாமே மிகுத்த துற்செயல்களுமேயாம்.

- 5:35; பிப்ரவரி 7, 1912 -


244. கலாசாலைகளில் மதப்படிப்பும் நல்லொழுக்கப் படிப்பும்

பூர்வம் இத்தேசத்து சமணமுநிவர்களால் வரைந்துவைத்துள்ள மநுகுல சீர்திருத்தங்களில் “ஆர்கலியுலகத்து மக்கட்கெல்லாம் ஓதலி நன்றே யொழுக்கமுடைமெ” எனக் கூறியுள்ளார்கள்.

மக்களுக்குக் கல்வியைக் கற்பிப்பதினும் நல்லொழுக்கத்திலும் சீலத்திலும் வளர்ப்பதே விசேஷமென்றும் ஒழுக்கமும் சீலமும் வளருமாயின் பின்னர் கற்கும் கல்வியின் பயனானது உலக உபகாரமாக விளங்குமென்றும் வரைந்துள்ளவைகளுக்குப் பகரமாக பூர்வமித்தேசத்தில் விசேஷக் கல்விச்சாலைகளில்லாதிருப்பினும் சகலமக்களும் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கத்தில் நிறைந்திருந்தார்களன்றி துன்மார்க்கர்கள் விசேஷங் கிடையாது. அறப்பள்ளிகளில் தங்கியிருந்த சமணமுநிவர்களால் கற்பித்துவந்த கல்வியேயன்றி வேறு கலாசாலைகளுங் கிடையாது. கற்றவர்கள் எழுதி வைத்துள்ள நூற்களிலும் நிதிநெறி ஒழுக்கங்களையே மக்களது சீர்திருத்தமாக எழுதிவைத்துள்ளார்களன்றி வேறொன்றுங் கிடையாது. கற்கும் கல்வியும் நல்லொழுக்கத்திற்கு ஆதாரமாகவே கற்பித்தும் இருக்கின்றார்கள்.

ஆதலின் நமது தேசக்கலாசாலைகளில் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கத்துக்குரிய ஒழுக்கப்படிப்பைக் கற்பிக்கவேண்டுமேயன்றி மதப்படிப்பை கற்பிக்கலாகாது. சாதிகர்வம், தனகர்வம், வித்தியாகர்வங்களுடன் மதக்கர்வமுஞ் சேர்ந்துவிடுமாயின் தேசத்தோருக்குள்ள ஒற்றுமெயும் அன்புங்கெட்டு சீரழிவதற்கு ஏதுவாகிவிடும். அத்தகைய மதப்படிப்பைக் கொடுத்து ஒற்றுமெய் கேட்டை உண்டு செய்வதினும் ஒழுக்கப்படிப்பைக் கொடுத்து ஒற்றுமெயடையச்செய்வதே உத்தமமாகும்.

மதப்படிப்பினால் சில சீர்திருத்தங்களுண்டென்று பலர் தோன்றினுந் தோன்றுவர். அஃது மதவைராக்கியமேயாம். அவரவர்கள் மதக்கதைகளின் ஊழல்களை உய்த்துணர்வார்களாயின் மக்களது சீர்திருத்தங்களுக்கும் நன்மார்க்கச் செயல்களுக்கும் அவைகள் உதவாவென்றே தீர்ப்பார்கள். அதாவது