பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 405

அந்தஸ்தான உத்தியோகங்களிலும் அமர்த்தி சகலசாதியோர்களைப்போல் இவர்களையும் முன்னேறச் செய்திருக்கின்றார்கள். அத்தகையோர் கூட்டங்களிளேனும் கலாசாலைகளிலேனும் தாழ்ந்த சாதியோரை உயர்த்தப் போகின்றோமென்னும் வார்த்தைகளேனும் சப்தங்களேதேனுமுண்டா, இல்லை.

வெறுமனே வெறுங்கையில் முழம்போடும்படியானக் கூட்டத்தோர் கூடியவரிடத்தும் பொருள் கிடையாது, ஏழைகளை ஆதரிக்க முன்பணம் அளிப்போருங் கிடையாது. மதக்கடைகளை பரப்பி என்சாமி பெரிது, என்சாமி பெரிதென்று கூறி சீவிப்பதுபோல் கீழ்ச்சாதி, மேற்சாதியென்னுங் கூட்டங்களை உறுதிபடுத்தி சாதிக்கடை பரப்பி அதனாலும் சீவிப்பதற்கு முயன்றிருக்கின்றார்கள். கீழ்ச்சாதியோரை உயர்த்தப்போகின்றோமென்பதும் ஓர் சீர்திருத்த மொழியாமோ, இல்லை. நாளெல்லாம் கீழ்சாதியோர் கீழ்சாதியோரென்று சீர்கெடுக்கும் மொழியேயாம்.

கருணை தங்கிய மிஷநெரிமார்கள் அமைத்துள்ளக் கலாசாலைகளில் சாதிபேதமற்ற ஏழைப்பிள்ளைகள் வந்து வாசிப்பார்களாயின் அவர்களுடன் கலந்து வாசிக்கமாட்டோமென்று கூறிவந்த சாதிபேதமுள்ளக் கருணையற்றவர்கள் தாங்களே கலாசாலை வைத்து ஏழைகளை ஆதரிக்கப் போகின்றோமென்பது கருணை நிறைந்த யதார்த்தமொழியாமோ. இதையுமோர் சுயகாரிய சீவனமாகக்கெண்டு நடாத்துகின்றார்களன்றி வேறன்று. யதார்த்தமாக ஏழைக் குடிகளின்மீது கருணையுள்ளவர்களாயின் சுத்தநீரை மொண்டுகுடிக்க விடாது விரட்டுவார்களா. அவர்கள் கஷ்டங்களை அறிந்த ரெவரென்ட் பாண்டியனென்பவர் கிணறுகள் தோண்டுதற்கு ஏற்படுவாரா. யதார்த்தத்தில் ஏழைகளை முன்னுக்குக் கொண்டுவரவேண்டுமென்னும் எண்ணம் இவர்களுக்குப் பூர்த்தியாயிருக்குமாயின் இவர்களது பண உதவியும் பிரயாசையும் வேண்டியது கிடையா. ஏழைக்குடிகளின் முன்னேற்றத்தைத் தடுக்காமலும், கெடுக்காமலும் இருப்பார்களாயின் அதுவே பேருபகாரமாகும். அவர்கள் முன்னேறுவிடங்களைத் தடுப்பதும், அவர்களை சீர்பெறவிடாமற் கெடுப்பதுவே இவர்களது ஜென்மத்தொழிலாயிருக்கக் கீழ்சாதிகளை உயர்த்தப்போகின்றோமென்னு மொழியைக் கனவிலும் நம்பலாமோ, ஆடுகள் நனையுதென்று புலிகள் புரண்டழுவதுபோல் பேசுகின்றார்களன்றி வேறன்று.

திண்டிவனம், பாஞ்சாலம் முதலிய கிராமங்களிலுள்ள ஏழைக்குடிகள் பூமி வேண்டுமென்று விண்ணப்பங் கொடுத்தால் அவைகளைத் தடுத்தும் பெறவிடாமற் கெடுத்தும் பாழ்படுத்திவருவது பிரத்தியட்ச அனுபவமாயிருக்க அத்தகைய கூட்டத்தோருள் சிலர் ஏழைகளை உயர்த்தப் போகின்றார்கள் என்பது யதார்த்தமாகாவாம். யதார்த்தமாக ஏழைகளை சீர்த்திருத்துவோர் கருணை நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியேயாம். ஆதலின் சாதிபேதமற்ற ஏழைக்குடிகள் பிரிட்டிஷ் ஆட்சியேயென்றும் நிலைக்கக் கோரி அவர்களது அன்பையும் ஆற்றலையும் பெற்றுய்யும்படி வேண்டுகிறோம்.

- 5:46; ஏப்ரல் 24, 1912 -


253. இந்தியதேசச் சிறப்பும் அதன் சீர்கேடும்

இந்திரர் தேசமானது இந்திரர்திருவென்றும், இந்திரர் விழாவென்றும், இந்திரர் விழாக்கோல் என்றும், புத்தபிரானைக் கொண்டாடியும், புத்ததன்மத்தை அநுசரித்தும், புத்தகங்க சமண முநிவர்களாம் தென்புலத்தோரை விருத்திசெய்தும், காலமழைப் பெய்தும் வந்தகாலத்தில் பௌத்த அரசர்களது வெள்ளைக் குடை பறக்கவும், குடிகள் ஒருவருக்கொருவர் அன்பிநிலை சிறக்கவும் ஒவ்வோர் குடும்பிகளும் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் செழிக்கவுமாய் இருந்தபடியால் அவர்களது முயற்சிகள் யாவும் வித்தையிலும், விவசாயத்திலுமே நிலைத்திருந்தது.

அத்தகையோர் முயற்சி குன்றாது தேசம் சிறப்புற்றிருந்ததுடன் குடிகளும் ஆனந்தசுகத்தில் இருந்தார்கள். அச்சுகானந்தத்தையும், கலை நூல்