முன்னுரை / xlix
அங்கே தெளிவில்லை என்றே குறிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆராய்ச்சியாளர் இத் தொகுப்புகளை அயோத்திதாசரின் மூல எழுத்துகளின் உண்மைப் பிரதியாகவே தயங்காமல் கொள்ளலாம். பண்டிதரின் மொத்த எழுத்துகளில் பெரும்பான்மையானவை - ஏறக்குறையதொண்ணாறு விழுக்காடு எனலாம், இவ்விரு தொகுப்புகளில் அடங்கியுள்ளன, மிஞ்சியவையும் எஞ்சியவையும் இயலும் போது மூன்றாம், பின்னிணைப்புத் தொகுதியாக வெளியிடப்படும். அயோத்திதாசர் வெறும் எழுத்தாளராக மட்டும் இராமல் ஓர்பெரும் தமிழ் - பௌத்தமறுமலர்ச்சி இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவரது காலத்திற்குப் பின்னும் ஏறக்குறைய கால் நூற்றாண்டளவுக்கு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டது. இயக்கத்தின் தேவைகளுக்காக பண்டிதரின் கட்டுரைகள் தொகுக்கப்பெற்று கோலார் தங்க வயலிலிருந்து, சித்தார்த்த புத்தக சாலையார் மூலம் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன. அவைகளில் பண்டிதரின் கருத்துகள் இயக்கத்தின் தேவைகளுக்கேற்ப சிலது கூட்டியம் குறைத்தும் வெளியிடப்பட்டன. அவ்வாறு பண்டிதரின் காலத்திற்குப் பின் அவர் பெயரால் வெளியிடப்பட்ட புத்தகங்கள், இத்தொகுதிகளின் ஆதாரமாக அமையவில்லை. பண்டிதரால், அவர் மூலம் வெளியிடப்பட்ட தமிழன் இதழ்களை மட்டுமே ஆதாரமாக இத்தொகுதிகள் கொண்டுள்ளன. அயோத்திதாசர் உயிருடன் இருக்கும்போது தமிழனில் தொடர்கட்டுரையாக வெளிவந்து பின்பு அவரது மேற்பார்வையிலேயே 1912இல் வெளியிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஆதிவேதம் என்னும் நூல் மட்டும் வசதி கருதி நேரடி ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பண்டிதர் தமிழ் எழுதிய காலம் தமிழ் உரைநடை முழுமையாக நவீனத்துவமோ, நிலைநிறுத்தலோ பெறாத காலம். ஆகவே இப்போதிருக்கும் நிலையிலிருந்து படிப்போருக்குச் சில எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் மாறுபட்டிருப்பது தோன்றும். மொழி ஆராய்ச்சியாளரின் பயன் கருதி ஏறக்குறைய முழுமையாகவே பண்டிதரின் தமிழிலேயே தொகுப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
தொகுப்பாளரின் பணி எழுத்துகளைக் கோவைப்படுத்தி பதிப்பிப்பதில் முடிந்துவிடுவதில்லை. காலக்குறிப்புகள், விளக்கங்கள், வாழ்க்கைக் குறிப்புகள் இத்தியாதிகளை அளிப்பதும் அவரது கடனே. ஆயினும் பண்டிதர் போன்ற பேரறிஞரின் ஆழமும் அகலமும் ஒருங்கே அமைந்த எழுத்துகளுக்கு அடிக்குறிப்பு தருவது சுலபமான காரியம் இல்லையென்பது வாசிப்போருக்கு உடனே விளங்கும். அதற்கு வரலாறு, இலக்கியம், சமயம், சமூகம், அரசியல் இன்னும் பல்வேறு கலைகளில் பாண்டித்தியம் தேவை. மேலும் பண்டிதர் மேற்கோள் காட்டும் இலக்கிய நூல்கள் எளிதில் கிடைப்பனவாயில்லை. கிடைப்பனவும் மாறுபட்டும் வேறுபட்டுமே உள்ளன. இன்னமும், முறையாக குறிப்பு, விளக்கங்களுடன் பதிப்பிக்க வேண்டின் வெளியிட வேண்டிய காலம் தள்ளிக்கொண்டே போகும். இவை கருதியே இம்முதல் பதிப்பின் முக்கிய நோக்கம், பண்டிதரின் சிந்தனைகளை விரைவில் அச்சேற்றி தமிழக மக்களுக்கு அதைப் பொதுச் சொத்தாக்கிவிட வேண்டும், பதிப்பின் பலவீனங்களை சிறுகச் சிறுக அடுத்தடுத்த பதிப்புகளில் நீக்கிக் கொள்ளலாம் என்பதே.
இதற்குமுன் அயோத்திதாசரால் தொடங்கி வைக்கப்பெற்ற தமிழ்-பெளத்த மறுமலர்ச்சி இயக்கம் பற்றிய எனது ஆராய்ச்சிக்கும் அதன்பின் அயோத்திதாசரின் மூல எழுத்துகள் கொண்ட இத்தொகுப்புகளுக்கு வேண்டிய ஆதரவும், வசதியம் அளித்து இடைபறாது ஊக்குவித்து வந்தவர் Christian Institute for the Study of Religion and Societyயின் இயக்குநர் சரல் சட்டர்ஜி அவர்கள். அவருக்கு எனது நன்றி மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே நன்றிக் கடன்பட்டுள்ளது.
இத்துடன், இதுகாறும் பெரும்பாலும் குடும்பச் சொத்தாகவே இருந்து வந்த தமிழன் இதழ் இப்போது தமிழகத்தின் பொதுச் சொத்தாக மாறியிருக்கிறது என்றால் அதற்கு அன்புபொன்னோவியம் அவர்களின் கொள்கைப் பற்றும் தாராள பண்புமே காரணம். இத்தொகுப்புகளுக்கு ஆதாரம் அவர் அன்புடன் அளித்த தமிழன் இதழ் கோப்புகளே. அவரது கோப்புகளில் இருந்த குறைவுகளை