அரசியல் / 507
காணோமே இது மனவாறுதல் போலும். இந்தியாவில் கருணை தங்கிய பிரிட்டிஷ் ஆட்சியோரால் பொதுப்பணத்தைக் கொண்டு சகல மனுக்களும் போக்குவருத்து காலங்களில் தங்கியிளப்பாறிப்போவதற்கு பொதுவாய சத்திரங்களைக்கட்டி வைத்திருக்கின்றார்கள். அச்சத்திரங்களில் தாழ்ந்த சாதியென வகுக்கப்பட்டோர் மழையின் கஷ்டத்தாலோ வெய்யிலின் கஷ்டத்தாலோ தனக்கு வழியில் கண்டுள்ள நோயின் கஷ்டத்தாலோ அச்சத்திரத்திற்குள் தங்குதற்குப் போவானேயானால் அவ்விடந் தங்கியுள்ள சாதிவேஷக் காவல்காரன் நீயென்ன சாதி என்ன சாதியெனக்கடிந்து துரத்திவிடுகின்றான். வழிபோக்கு ஏழையோ தங்குதற்கிடமின்றி மழையிலும் வெய்யிலிலும் நோயிலும் மரத்தடிகளில் ஒதிங்கி மடிவோர்போக பிழைத்துள்ளோர் அதிகஷ்டத்துடன் அவரவர்கள் இல்லம்போய் சேருகின்றார்கள். இத்தகைய துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் அனுபவிக்கின்றார்களோ. இக்கஷ்டங்களை காங்கிரஸ் கமிட்டியா ரறியார்களோ. கிராமங்களிலும் தாலுக்காக்களிலும் உள்ளக் கோர்ட்டுகளில் தாழ்ந்த சாதியென்போர் உள்ளே நுழையவுங் கூடாது அருகில் வரவுங் கூடாது தூரவே நின்றுக்கொண்டு அவன் பிரையாதை எவனாவது கேட்டுச் சொல்ல அவன் தீர்ப்படைவது நியாயமோ, அந்நியாயமோ, அவை அக்கோர்ட்டிற்கே வெளிச்சமாம். இத்தகைய கஷ்டத்தை செளத்தாபிரிக்க இந்தியர்களடைகின்றார்களோ. இதுவும் இக்காங்கிரஸ் கமிட்டியாருக்குத் தெரியாதோ. தாழ்ந்த சாதியானென்போன் ஏது சொற்ப குற்றஞ் செய்தபோதினும் தொழுவென்னுங் கட்டையில் இரு கைகளையுங் காலையும் மாட்டிவிட்டு வெய்யலோ மழையோ இருந்தபோதிலும் வெளியிலிட்டு ஈயும் எறும்பு மிக்கக் கொடிய துன்பத்தைச் செய்துவருகின்றார்களே. அதுபோல் செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனுங் கஷ்டப்படுகின்றார்களோ. இத்தொழுவு கட்டை தெண்டனையை இக்காங்கிரஸ் கமிட்டியாரறியார்களோ. தாழ்ந்த சாதியானென்போன் ஓர் கொடி வழியில் ஏதேனும் வந்து விடுவானாயின் அவனை வந்த வழியே திருப்பி அரைமயில் ஒரு மயில் துரத்தி அடிக்கின்றார்களே அவ்வகையான கஷ்டமேதேனும் செளத்தாபிரிக்கா இந்தியர்களடைகின்றார்களோ. இச்சங்கதியைக் காங்கிரஸ் கமிட்டியார் அறியார்களோ. தாழ்ந்த சாதியானென்போனை பொதுவாயக் குளங்களிலுங் கிணறுகளிலும் சுத்த நீரை மொண்டு குடிக்கவிடாமல் விரட்டி அடித்து புழுதியடைந்துள்ள குட்டை நீரையும் வாய்க்கால் நீரையும் மொண்டு குடிக்கவைத்து பலவகை வியாதிகள் கண்டு மடியச் செய்வதுடன் ஏதோ தெரியாமல் வந்து நீரை மொண்டு விடுவானாயின் அவனைப் பிடித்து மரத்தில் கட்டி புளிய மலார்கொண்டு முதுகிலடிப்பதுடன் தொழுவிலும் மாட்டிவதைக்கின்றார்களே, இத்தகையாயக் கொடுந்துன்பத்தை செளத்தாப்பிரிக்கா இந்தியர்கள் ஏதேனும் அநுபவிக்கின்றார்களோ. இந்த சங்கதியுங் காங்கிரஸ் கமிட்டியாரறியாததோ. ஜமீன்தார், மிட்டாதார்களென்போர் பெரும் பூமிகளை வளைத்துக்கொண்டு அவைகளை உழுது பண்படுத்தி பயிரிடுவதற்கு தாழ்ந்த சாதியோரென்போர்களையே ஆட்களாக வைத்துக்கொண்டு அவர்களிடம் நாள் முழுவதும் வேலை வாங்கி நாளொன்றுக்கு ஓர் அணா கூலி நியமித்து அவ்வணாவையுங் கையில் கொடாது ஓரணாவுக்குத்தக்கக் கம்போ, சோளமோ, கேழ்வரகோ கொடுத்துவருவதும், பெண்டுகளுக்கும் மாடு மேய்க்கும் பிள்ளைகளுக்கோ சாப்பாடு போட்டுவிடுகிறோமென்று கூறி மூன்று நாளைய கேழ்வரகின் காந்தலையோ நான்கு நாளைய கம்புக்கூழின் காந்தலையோ வார்த்து வருவதுமாயக் கொடுங்கஷ்டங்களை அநுபவித்து வருவதுடன் கஷ்டத்திற்கு பயந்தும் வயிற்றிற்குக் கஞ்சில்லாமலும் வேறு தேசத்திற்கேனும் வேறு வேலைக்கேனும் போவதற்கு முயலுவாராயின் பாட்டனுக்குக் கொடுத்த கடன் ஐந்து ரூபாயிற்கு ஐன்பது ரூபாய் வட்டியுமுதலும் கொடுக்கவேண்டுமென்றும், அப்பனுக்கு வாங்கிய நாலு ரூபாய் கடனுக்கு நார்ப்பது ரூபாய் வட்டியு முதலுங்