பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

518 / அயோத்திதாசர் சிந்தனைகள்

செயல்களாகும். இதனால் தேசமும் தேசமக்களும் சீர்கெட்டுவரும் ஒவ்வோர் விஷயங்களை விளக்குவதாயின் உலகமக்களே நகைப்புறுவதற்கு ஏதுண்டாகிப்போம். இச்சாதிபேதமாயக் கட்டுக்கதைகளும் அதன் செயல்களும் தென்னிந்தியாவில் மட்டும் விருத்தியேயன்றி உலகெங்குங்கிடையாவாம்.

இச்சாதிபேத விருத்தியே தென்னிந்திய விவசாய விருத்திக்கு முதற்கேடாயிற்று, வைத்திய விருத்திக்கு இரண்டாங் கேடாயிற்று, வித்தியா விருத்திக்கு மூன்றாங்கேடாயிற்று, ஒற்றுமெ விருத்திக்கு நான்காங் கேடாயிற்று. மற்றும் விருத்தி கேடுகளை அவரவர்களே உணர்ந்துக் கொள்ளலாம். மத விருத்தியோ அவரவர்கள் சுயப்பிரயோசனங்களுக்காய பொய் சாமிகளையும் பொய் வேதங்களையும் பொய் வேதாந்தங்களையும் பொய்ப் புராணங்களையும் அவரவர் தேவப்பெயர்களுக்குத் தக்கவாறு எழுதி வைத்துக்கொண்டு மதக்கடைகளை பரப்பி அதனால் வயிறு பிழைக்கும் பெருஞ்சோம்பேறிகளே மலியும் விருத்தி பெற்று நாளுக்குநாள் தென்னிந்தியம் சீர்கெட்டுவருவதுடன் மக்களும் அறிவுமயங்கி பாழடைந்து போகின்றார்கள்.

இத்தகைய வித்தையும் புத்தியுமற்றதேசத்தோருக்கு சுயராட்சியமளித்து விடுவதாயின் தேசமும் தேச மக்களும் என்ன சீர்கெட்டுப் போவார்களென்பதை விவேகிகளே தெரிந்துக்கொள்ளுவார்கள்.

- 7:42; மார்ச் 25, 1914 -


321. உள்சீர்திருத்தங்களை வரையறுத்துச் செய்ய வகையற்றக் கூட்டத்தோர் இராஜாங்க சீர்திருத்தத்திற்குச் செல்லுவது அழகாமோ?

ஓர் கிராம அதிகாரி வாசஞ்செய்யும் வீதிகளிற் குப்பை கூளங்கள் நிறைந்திருக்கவும், மல மூத்திராதிகள் அங்கங்கு எடுபடாமல் நிற்கவும், குளத்து நீர் குட்டை நீர்கள் யாவற்றிலும் பட்சிகளின் எச்சம், மனுக்களின் மலம், உதிர்சருகுகள் படிந்திருக்கவும், அக்கால் மழை பெய்துவிடுமாயின் நீர் புரண்டு வீதிகளில் நிறம்பவும் அதன் வசதியான போக்கின்றி புரண்டோடு நீருடன், மல மூத்திரங்களுடன், குப்பைக் கூளங்களும் புரண்டு வீடுகளில் நுழையவும் குடிகள் யாவரும் துற்கந்தங்களால் பீடிக்கப்பட்டு அல்லோகல்லோமடையவுமாய வாழ்க்கையில் விடுத்துள்ள கிராம அதிகாரியானவனை ஓர் தேசத்திற்கே அதிகாரியாகவும் சுகாதாரத் தலைவனாகவும் நியமிப்பதாயின் அத்தேசமும் தேசமக்களும் என்ன சீர்கேட்டை அடைவார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஏனென்பீரேல் ஓர் சொற்பகிராமத்தை சீர் திருத்தியாளுவதற்கு வழிவகையற்ற கிராமதிகாரி ஓர் தேசத்தை சீர்திருத்த இயலாதென்பதே திண்ணம்.

அவைபோல் தங்கள் தங்கள் குடும்பங்களையே சரிவர சீர்திருத்தி சுகாதாரமளிக்க வழிவகை அறியாதவர்களும் அவர்களை அடக்கியாளத் திடமற்றவர்களுமானோர் பெருங்கூட்டங்களைக் கூடிக்கொண்டு இராஜாங்க சீர்திருத்தத்தில் முயல்வது வீணேயாம். அதாவது ஐந்து வயது முதல் முப்பது வயதளவும் விதைவையாயுள்ளப் பெண்களை மறுவிவாகஞ் செய்யவிடாது வீடுகள் தோரும் அவர்கள் கண்கலங்கி உண்ண உணவும் உடுக்கவுடையும் சரிவரக்கொள்ளாது தங்களை ஒத்தப்பெண்கள் சுகவாழ்க்கையுற்று ஆனந்தத்திலிருப்பதைக் கண்டு மீளாக் கவலையுற்றிடியவும் தங்களால் அடக்கொணா இச்சையால் பரபுருஷரை இச்சித்துப்பிள்ளை வேறுண்டாகிக் குடும்பத்தோருக்கு பயந்து அவற்றைக் கொல்லவும் அவற்றை அதிகாரிகள் அறிந்து பலரறிய வெளிக்கு வந்துவிட்ட பெற்றோர் பிறந்தோர் உற்றாருரவினர் யாவரும் நாணமுற்று திகைக்கவும் ஆவலுடனீன்று சீராட்டி தாராட்டி ஆடையாபரணம் பூட்டி அன்புபாராட்டி வளர்த்தப் பெண் குழந்தைகள் அவதியுற்று நிற்பதைக்காண்போர் சகலருந்துக்கிக்க சாதிகட்டு ஜமாத்துக்கட்டு சாஸ்திரக்கட்டு சமயக்கட்டென்னும் பாழுங்குழியில் வீழ்ந்து பெண்மணிகளை பரிதவிக்க விட்டிருக்குங் கூட்டத்தோர் தங்களுக்குள்ள உட்சீர்திருத்தக் கேடுபாடுகளை ஆலோசியாது விட்டு இராஜாங்க சீர்திருத்தக்