உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. தமிழ்பாஷையிலுள்ள நான்குவகைத் தொழிற்களின் பெயரும்
அதன் சிறப்பும்

முன்கலை திவாகரம் – வேளாள ரறுதொழில்

வேளாளரறுதொழிலுழவு, பசுக்காவ, ரெள்ளிதின் வாணிபங், குயிலுவங்,
காருகவினை, யொள்ளிய விருபிறப்பாளர்க் கேவல்செயல்.

1-வது வேளாளரென்னும் பயிரிடுந் தொழிலாளரின் சிறப்பு.
விவேக மிகுத்த ஞானிகள் விளங்குதலும் மாதவர் விருத்தியாதலும், சுபசோபனாதிகள் சிறத்தலும், செங்கோல் பிரகாசித்தலும், மநுக்கள் நெறிமுறை தவிரா வாழ்க்கையும், வர்த்தகர் விருத்தியும், சூரர் வலிமெயும், தன்மதானங்களின் பெருக்கும், ஆகம சிறப்பும், சகல கலா பெருக்கமும், மங்கையர் இன்பமும், உண்மெய் உணர்ச்சியும், கீர்த்திப்பிரதாபமும், குலங்களின் உயர்த்தியும் ஆகிய சிறப்புக்கள் யாவும் மேழிச் செல்வம் என்னும் பூமியை உழுது சீர்படுத்தி தானியங்களை விருத்திசெய்து சகலரையும் கார்க்கும் வேளாளர் செய்கை உபகாரச் செய்கையாதலின், வேளாளர் சிறப்பை விளங்கக் கூறினர்.

ஏறெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த / வேளாளர் விளைவயலுட்
பைங்கோது முடிதிருந்த / பார்வேந்தர் முடிதிருத்தும்
பொங்கோலக் களியானைப் / போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோ / ஏறடிக்குஞ் சிறுகோலோ.

முன்கலை திவாகரம் - வணிக ரறுதொழில்

வணிகரறுதொழி. லோதல், வேட்டல், யீதல், உழவு, பசுக்காவல், வாணிபம்.

2-வது வாணிபரென்னும் வியாபாரத் தொழிலாளரின் சிறப்பு.
பல தேசங்களுக்குச் சென்று தன்தேசப் பொருளுக்கும் பரதேசப் பொருளுக்குமுள்ள ஆதாயங்களைக் கண்டு மயங்காமலும் செட்டு நிலை தவிராமலும் பல சரக்குகளைக் கொண்டுவந்து முதல் வழுவாது லாபத்தினின்று சிலவுகளை சுருக்கி, நாணமில்லார்க்கும் மரியாதை அற்றோர்க்கும் கடனீயாமலும், நாணமும் நீதியும் உள்ளோர்க்குக் கடநீதலும் ஏராளப்பொருள் வளரினும் கணக்கில் ஒருகாசு வழுவாமலும் வீண் டம்பத்தில் விரயமில்லாமலும் தேசத்திற்கு ஆபத்து நேரிடுங்கால் அநந்த பொருட்களை சிலவுசெய்தலும் வட்டியாம் லாபத்தைக் குவியாமலும் மோசத்தாற் பொருளை சேர்க்காமலும் தராசு நிரையை சத்தியக் கோலாகக் கொள்ளுதலும், வியாபாரச் சிந்தையை விடாமுயற்சியில் நாட்டுதலும், லாபத்தை விரையமாகாமல் கார்த்தலும் ஆகிய இச்செய்கையுள்ளவர்களை வணிகரென்று கூறப்படும். இத்தகையத் தராசுநிரைச் செயலை வணிக சிறப்பென்பர்.

முன்கலை திவாகரம் - அரசு ரறுதொழில்

அரசரறுதொழி, லோதல், வேட்டல், புரை தீர்த்தல், யீதல்,
கறையறுபடைக்கலம், கற்றல் விசயம்.

3-வது அரசர்களென்னும் தேசமாள்வோர் சிறப்பு
குடிபடை விசேஷமும், தோள்வலிமெயும், மதிமந்திராசங்கமும், சத்தியவசனமும், கொடையிற் சாந்தமும் சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயமும் தளகர்த்தர் நியமநிதானமும் தன்பல எதிரிபல நோக்கமும் தன்னுயிர் போல் மன்னுயிரைக் காத்தலும் துட்டரை சிட்டை செய்தலும் கொடுங்கோல் அகற்றி செங்கோல் நிருத்தலும் அரணையும் அகழியையும் சீர்பெற வைத்தலும் அம்பையும் வில்லையும் சுத்தத்தில் நிருத்தலும் தானிய விருத்திக்காம் ஏதுக்களை நோக்கலும் குடிகளை ஓம்பலும் மந்திராலோசனை சங்கத்தில் பொருளாசை, பொய்ச்சாப்பு, தற்புகழ்ச்சி, குடிகெடுப்பு அமைந்துள்ள குணத்தோரை சேர்க்காமல் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் நிறைந்த விவேகிகளைச் சேர்த்தலும், விவேகமிகுத்த ஞான சங்கங்களைக் கார்த்தலும்