சமூகம் / 611
தேக நிறத்தையும்; இவர்களுடைய முகக் குறிகளையும், இவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், அவர்களுடையப் புசிப்பின் வகைகளையும், பேருண்டியையும், இவர்களுடைய பெண்களின் நடையுடைச் செயல்களையும், அவர்களுடையப் பெண்களின் நடையுடைச் செயல்களையும்; இவர்கள் அக்கினியை அவியாமற் தொழுது வரும் செயல்களையும்; இவர்களுடைய பெண்களுக்கு சூதகங்கண்டவுடன் 7 நாள் புறம்பே வைத்துவிடும் செயல்களையும் அவர்களுடையப் பெண்களை சூதக்காலங்களில் நீக்கிவைக்கும் செயல்களையும் உமது கண்களால் காண்பீராயின் இவர்களது மாறுவேஷந் தெள்ளற விளங்குமென்று கூறியவுடன், நந்தன் கொலுமண்டபத்தில் வந்திருந்த வேஷபிராமணர் யாவரும் வெளியேறி நந்தனை தங்கள் தேசம் போய்ப் பார்க்காவண்ணம் சிதம்பச்சிலையமைத்து அரசனைக் கொன்றுவிட்டதாக அஸ்வகோஷர் அவர்கள் எழுதியுள்ளதற்கு ஆதரவாக நந்தனென்னும் அரசனை பிராமணர்கள் கொன்றுவிட்டதாக ரெவரெண்டு ரேனியஸ் என்பவர் தான் எழுதியுள்ள இந்துதேச சரித்திரத்திலும் எழுதியிருக்கின்றார்.
இவ்வகையாக மிலேச்சர்கள் தங்கள் மிலைச்ச செயல்களுக்கும், வஞ்சகத்திற்கும், மாறுவேஷத்திற்கும் பயந்து தாங்கள் கேட்பதை யாரார் கொடுத்துவருகின்றார்களோ அவர்கள் யாவரையுந் தங்கள் வசமாக்கிக்கொண்டு தங்கள் மாறுவேஷத்தைக் கண்டித்தும், தங்கள் பொய்மொழிகளையும், பொய்ப்போதனைகளையும் நம்பாது மற்றவர்களையும் நம்பவிடாது விலக்கி வந்த விவேகிகளைக்கொன்றும், சத்திய சங்கங்களை அழிக்கத்தக்க உபாயங்களைச் செய்தும், அவர்கள் முன்னிலையிற் கிடைக்கும் தன்ம நூற்கள் யாவையும் பாழ்படுத்தியும் வந்தார்கள்.
இவற்றுள் பௌத்ததன்ம ஞானசாரமானது கோடி மக்களில் ஒருவருக்கு இருவருக்கு விளங்கக்கூடியதும் மற்ற அஞ்ஞான மிகுத்தோர்க்கு விளங்காதது மாயதால் பொருளாசையும் வஞ்சினமுஃமிகுத்த மிலேச்சர்களின் செயலை மெய்யென நம்பி மோசம் போனவர்கள் பலராகிவிட்டார்கள்.
புருசீகதேசத்தோரின் பொய்யாகிய வஞ்சகவார்த்தைகளை மெய்யென நம்பி மோசம்போனவர்கள் பெருங்கூட்டமாகிவிட்டபடியால் ஆதியில், பயந்து இத்தேசத்தில் பிச்சை இரந்துண்ட மிலேச்சர்கள் பௌத்த சங்கத்திற் சித்திப்பெற்ற பிராமணர்களென வேஷமிட்டுக்கொண்டு இரண்டாவது, அதிகாரத்துடன் பிச்சை இரந்துண்ண ஆரம்பித்துக் கொண்டார்கள். மூன்றாவது, பௌத்த சங்கங்களை ஏற்படுத்தி அவைகள் அழியாதிருந்து சங்கத்தோரை போஷித்து வருவதற்கு அரசர்களாலும், குடிகளாலும் வேண உதவிபுரிந்து வருவதுபோல் தங்கள் வேஷபிராமணக் கூட்டங்களும் ஒவ்வோர் இடங்களில் தங்கி சுகமாக சீவிப்பதற்கு ஓர் கைம்பெண்ணை வஞ்சித்து தங்களுக்கென்று கட்டிக்கொண்ட விவரத்தை அஸ்வகோஷர் நன்குவிளக்கி யிருக்கின்றார்.
அதாவது இம்மிலேச்சராம் ஆரியக்கூட்டத்தோர் புருசீகதேசத்தோரென்று அறிந்துக்கொள்ளுவதற்காக இவர்கள் இத்தேசத்தில் கட்டியதுள்ள ஓர் கட்டிடத்தின் சாயலையும், புருசீக தேசத்தின் கட்டிடங்களின் சாயல்களையும் கண்டறிந்துக்கொள்ளும்படியாகப் போதித்துள்ள இடத்தில் புன்னாட்டிற்கு வடக்கே சகல சம்பத்தும் நிறைந்த மீனாட்சி என்னும் ஓர் கைம்பெண்ணிருந்ததாகவும், அவளிடம் இவ்வேஷபிராமணர்கள் அணுகி நாங்கள்தான் பிராமணர்களெனச் சில சகடபாஷா சுலோகங்களைச் சொல்லி, அம்மா, நீங்களிறந்துபோனால் உங்கள் பெயராலும் ஓர் பெரிய கட்டிடங்கட்டி பிராமணர்களுக்கு முப்பொழுது அன்னமிட்டு உங்கள் பெயர் என்றும் அழியாதிருக்கச் செய்கின்றோம், உங்கள் பூமிகளையும் சொத்துக்களையும் அக்கட்டிடத்தின் பெயரால் கற்களில் வரைந்துவைத்துவிடுங்கோளென்று வஞ்சித்தெழுதி அவள் மரணமடைந்தவுடன் மீனாட்சி என்னும் கைம்பெண்ணினுடைய சகல சொத்துக்களையும் வேஷ பிராமணர்கள் பற்றிக்கொண்டு தங்கள் கூட்டத்தோருடன் சுகம்பெற ஆரம்பித்துக் கொண்டார்களாம்.