பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

628 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நிமித்தகரென்றும் வகுத்துள்ளவர்களின் வம்மிஷ வரிசையோன் என்றார்.

அக்கால் அரசன் சேஷன் என்பவனை நோக்கி, ஐயா மடாதிபதிகளைத் தாங்கள் சாங்கையகுலத்தவர்களல்லவா என்றீர்களே அதன் காரணமென்ன அவற்றை விளக்குவீராக என்றான்.

சேஷனென்பவன் எழுந்து ஒரு சமஸ்கிருத சுலோகத்தைச் சொல்லி, கலைக்கோட்டார் மான் வயிற்றிலும், கௌசிகர் காசிராஜனுக்கும், ஜம்புகர் நரியின் வயிற்றிலும், கெளதமர் பசுவின் வயிற்றிலும், வால்மீகர் வேடச்சி வயிற்றிலும், அகஸ்தியர் கும்பத்திலும், வியாசர் செம்மடத்தி வயிற்றிலும், வசிட்டர் தாசியின் வயிற்றிலும், நாரதர் வண்ணாத்திவயிற்றிலும், கெளண்ட்டன்னியர் முண்டச்சி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சிவயிற்றிலும், மாண்டெளவியர் தவளை வயிற்றிலும், சாங்கையர் பறைச்சி வயிற்றிலும், கார்க்கேயர் கழுதை வயிற்றிலும், சௌனகர் நாயின் வயிற்றிலும் பிறந்தவர்களென்பதாக மனுஸ்மிருதி கூறுகிறபடியால் இவர்களை பறைச்சி வயிற்றிற் பிறந்த சாங்கியகுலமல்லவாவென்று கேட்டடேனென்றான், உடனே அச்சபையிலிருந்த நத்தனாரென்பவரெழுந்து இராஜேந்திரா இந்த புருசீக தேசத்தார் சோழபதியில் பிராமணவேஷம் அணிந்து குடிகளை ஏமாற்றிக் கொண்டு வருவதை மடாதிபர்களும் அவர்களைச்சார்ந்த உபாசகர்களும் அறிந்து இவர்களை அடித்துத் துரத்துவதுமல்லாமல் இவர்களணைந்துள்ள பிராமணவேஷ விவரங்களையும் பறைந்து வந்ததினால் தங்களுக்குள்ளாக ஒருவருக்கொருவர் மடாதிபர்களைக் காணும் போது தங்களது பொய் வேஷங்களைக் குடிகளுக்குப் பறைகிறவர்களென்றும், தங்கள் பொய்ப் போதனைகளுக்குள் சேராதப் பராயர்களென்றும், பகர்ந்து வந்தவர்கள் மடாதிபர்களைத் தங்கள் முன்னிலையிற் கண்டவுடன் பறையரென்றும், வெட்டியாரென்றும் இழிவுபடுத்த ஆரம்பித்துக்கொண்டார்கள்.

அதாவது இவர்களது பிராமண வேஷங்களையும், தந்திர உபாயங்களையும், குடிகளுக்குப் பறைவர்கள் பறைபவர்களெனக் கொடுந்தமிழில் பறைந்துகொண்டே திரிந்தார்கள். இரண்டாவது, பறைவோர், பறையோரென வழங்கிவந்தார்கள். மூன்றாவது, பறையர்கள் பறையர்களென்று சொல்லித் திரிந்ததுடன் மடாதிபர்களையும், சாக்கையர்களையும், பறையர்களென்று இழிவுபடக்கூறும்படித் தங்களை சுவாமி சுவாமியெனத் தொழுதுத் திரியும் அறிவிலிக் குடிகளுக்குக் கற்பித்து இழிவுபடுத்தி வந்தார்கள்.

அவற்றைக் கேழ்வியுற்ற மடாதிபர்கள் மிலேச்சர்களாம் ஆரியர்களை கர்வ பங்கஞ் செய்யுமாறு ‘பறையனாவதேதடா பறைச்சியாவதேதடா இறைச்சிதோலெலும்பிலே யிலக்கமிட்டிருக்குதோ’ என்னும் வேண்டியப் பாடல்களைப் பாடி மிலேச்சர்களுடன் சம்மந்தப்பட்டுள்ள கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற அரசர்களுக்கும் விளங்கும்படி செய்து வருங்காலத்தில் பௌத்தர்கள் யாவருக்கும் இப்பறையர்களென்னும் பெயரை அளித்து பாழ்படச் செய்துவிட்டு ஆரியர்களது பிராமண வேஷத்தையும் அவர்களது பொய்மதக் கோஷத்தையும் பெருக்கிக்கொள்ளுவதற்காகத் தங்களை அடுத்தக்குடிகளை அடுத்துப் பறைப்பாம்பு பாப்பாரப்பாம்பென்றும், பறைமயினா பாப்பார மயினாவென்றும், பறைப் பருந்து பாப்பாரப் பருந்தென்றும் சீவர்களுக்கில்லாப் பெயர்களை வழங்கச் செய்ததுமன்றி நாய்களிற் பறைநாய்ப் பறைநாயென மட்டிலும் வழங்கச்செய்து பறை நாயென்பதற்கு எதிர்மொழியாய பாப்பாரநாயென வழங்கினால் தங்களுக்குத் தாழ்ச்சியுண்டாமெனக் கருதி பறைநாயென்னும் மொழியைமட்டிலும் வழங்கச்செய்துவருகின்றார்கள்.

ஈதன்றி பெளத்த அரசர்களும், பௌத்த குடிகளும் சேர்ந்து வாசஞ்செய்துவரு மிடங்களுக்கு சேரி, சேரி என வழங்கிவருவது இயல்பாம். அம்மொழியையே ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வாசஞ்செய்யும் இடங்களுக்கும் பறைச்சேரி என்னும் பெயரைக் கொடுத்து தங்களைச்சார்ந்தவர்களால் வழங்கச்செய்துவிட்டுத் தாங்கள் சிந்தூரல் ஆற்றின் அக்கரையோரமாக வந்து