உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

650 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அடித்துத் துரத்தி தங்களது பொய்ப்பிராமண வேஷங்களையும், பொய்ப்போத கோஷங்களையும் பலருக்கும் பறைந்து பதிவிட்டகலச்செய்துவந்தப் பேரறிவாளராம் பெளத்த உபாசகர்களைத் தீயர்களென்றும் மிலேச்ச வஞ்சநெஞ்சம் மிகுத்தக் கொடும் பாபிகளாகியத் தங்களை நியாயரென்றும் மேற்படுத்திக்கொண்டு அரசர்களது மதியை மயக்கி தீய சாதியோரென்றும், நியாய சாதியோரென்றும் இரு பிரிவினைகளை உண்டு செய்து தங்களை அடித்துத் துரத்தி தங்கள் துற்கிரித்தியங்களை சகலருக்கும் விளக்கிவந்த மேன் மக்களாம் விவேக மிகுத்தோரை, தீய சாதிகளென வகுத்து அவர்களை தேசத்துள் வரவிடாமலும் குடிகளிடம் நெருங்கி பேசவிடாமலும் குடிகளைக் கண்டவுடன் தூர விலகி ஓடிவிடும்படியான சட்டதிட்டங்களை வகுத்துவிட்டு மிலேச்சர்களாகிய தங்களை நியாயநம்பிகள், நியாயனார், நியாய பிராமணர்களென்றும் கொடுந்தமிழ் விவேகமிகுத்த மேன்மக்களை தீயசாதிகளென வகுத்து தேசத்துள் நுழையவிடாத ஏதுக்களை செய்து வருகின்றார்கள்.

இத்தகைய வஞ்சனெஞ்ச மிகுத்த மிலேச்சர்கள் தங்களை யாரடிக்கினும் தங்களை யார் வையினும் அவைகள் யாவையுங்கருதாது சிற்றரசர்களையும், பெருங்குடிகளையும் தங்கள் வயப்படுத்திக்கொள்ளும் நோக்கத்திலேயே ஊக்கமுடையவர்களாயிருந்து இத்தேச விவேக மிகுத்தவர்களைத் தாழ்ந்த சாதிகளென்றும் மிலேச்சர்களாகியத் தங்களையும், தங்களைச் சார்ந்தவர்களையும் உயர்ந்த சாதிகளென்றும் ஏற்படுத்திக்கொண்டு தங்கள் சுயப்பிரயோசனத்தையே மேலெனக் கருதிச் செய்துவரும் செயல்களைக் கண்டுவரும் இத்தேசத்திய மராஷ்டக வேஷப் பிராமணர்களும் ஆந்திர வேஷப் பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் தங்கள் சோம்பலைப் பெருக்கிக்கொண்டு வஞ்சினத்தாலும் சூதினாலும் பொய்யாலும் சீவிக்கத்தக்க ஏதுக்களில் நின்றுவிட்டபடியால் பெளத்த தன்மத்தை சார்ந்த யதார்த்த பிராமணர்களாம் அரஹத்துக்களுக்கும். சங்கங்களிற் சேர்ந்துள்ள சமணமுனிவர்களுக்கும், பௌத்தக் குடும்பிகளுள் விவேகமிகுத்திருந்த உபாசகர்களுக்கும் பலவகை இடுக்கங்களுண்டாகி சத்தியதன்ம சாதனங்களும், சத்தியதன்ம போதகங்களும், சத்தியதன்ம நூற்களுமழிந்து பாழுற்று அசத்தியசாதனங்களும், அசத்திய போதங்களும், அசத்திய நூற்களுந் தோன்றுதற் கேதுவாய்தன்றி இவ்வேஷப் பிராமணர்களுள் மாறுதல்களையும், வேஷப்பிராமணர்களின் பொய்ப் போதங்களையும், வேஷப்பிராமணரது நாணமற்றச்செயல்களையுங் கண்டறிந்து குடிகளுக்குப் பறைந்துவரும் விவேகமிகுத்தவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்ததுமன்றி அவர்களை அரசாங்கத்தோரிடத்தும் அந்தஸ்த்துள்ளக் குடிகளிடத்தும் நெருங்கவிடாமலும், பேச விடாமலும் தங்கள் பொய் வேஷப்பிராமணத்தைப் பரவச்செய்யும் முயற்சியிலும், தங்கள் பொய்வேஷங்களைச் சகலருக்கும் பறைந்துவரும் விவேகமிகுத்த மேன்மக்களை தாழ்ந்த சாதியென்று கூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமற் செய்துவரும் ஏதுக்களிலும் முயற்சிகளிலுமிருந்தபடியால் அறப்பள்ளிகளில் சமணமுனிவர்களால் கற்பித்துவந்தக் கல்விகளும் சீரழிந்து கைத்தொழில்களும் பாழடைந்து தேசமக்கள் ஒவ்வொருவருக்கும் சோம்பற் பெருகி அஞ்ஞானத்தில் ஆழ்ந்துகிடக்கும்வழி நேர்ந்துவிட்டது.

இதற்கு உபபலமாக தாங்கள் சுகசீவ வாழ்க்கைப் பெருவதற்கும் இத்தேசக்குடிகள் தங்கள் தங்கள் முயற்சியாம் முன்னேறுவதை விடுத்து, சுவாமி கொடுப்பார், சுவாமி கொடுப்பாரென்னுஞ் சோம்பலால் சீரழிவதற்கான சில மதங்களையும் உண்டு செய்ய ஆரம்பித்துக்கொண்டார்கள். அதாவது, புத்தபிரான் புழுக்கீடாதி முதல் மனிதரீராக சருவசீவர்கள்மீதிலும் அன்பு பாராட்டி, ஆதரிக்கும் அகிம்சாதன்மத்தைப் போதித்தவராதலின் பாலிபாஷையில் ஸிவனென்னும் ஓர் பெயராலும் அவரை சிந்தித்துவந்தார்கள். ஈதன்றி அவரது ரூபாகாயமாய பயிரங்கத் தை தகனஞ்செய்தபோது அஸ்தியையும் சாம்பலையும் ஏழு அரசர்கள் எடுத்துச்சென்று தங்கள்