பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இந்துமதத்திருந்தே புத்தமதம் தோன்றிற்றென்றும், இந்துக்களிலிருந்தே சிலர் பௌத்தர்களாகிவிட்டார்களென்றும் ஆதாரமில்லாது கூறுகின்றது அஸ்திபார மற்றக் கட்டிடமேயாம்.

இந்திரர் தன்மமே புத்ததன்மமும் புத்ததன்மமே இந்திரர் தன்மமென்னப்படும்.

அங்ஙனமன்று இந்துதன்மம் வேறென்றுகூறுவாராயின் அவ்விந்து என்பவர் பிறப்புவளர்ப்பையும் அவரது சரித்திரத்தையும் வெளிக்குக் கொண்டுவரல் வேண்டும். சாத்திரமில்லை, அனாதிமதமென்பார்களாயின் இந்து மதத்தோ ரென்னும் பெயரை அன்னோர் வகிப்பதற்கு ஆதாரமில்லை என்பது துணிபு. - 3:28; டிசம்பர் 22, 1909 –

41. பூதக்கதை பூதக்கதை வேதாளக் கதையினும் விந்தையே

அன்பர்காள், பூதமென்னு மொழி பாலி, அப்பாலியிலுள்ள பூதமென்னு மொழிக்கு ஓர் குணிப்பில் அடங்காப் பொருட்களின் பெயரெனக் கூறப்படும்.

அதாவது, மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கு பொருட்களும் குணிப்பிற்கடங்காதது ஆதலின் நான்கு பூதங்களென வகுத்துள்ளார்கள் சிலர் வெறுவெளியாகிய ஆகாயத்தையும் ஓர் பூதமெனக் கூறுவதுண்டு இதுவே கலை நூற்களின் சம்மதமும், சரித்திர சம்மதமுமாகும்.

இத்தகைய பூதங்கள் ஓர் அரசனைக் கொண்டுபோய்க் காட்டில் வளர்த்ததென்றும் அவைகள் இறைதேட வெளிக்குப்போயிருந்ததென்றும் ஓர்க்கதை தோன்றுமாயின் அது கண்ணாற்கண்ட சுட்டுக்கதையாயிருக்குமா அன்றேல் கட்டுக்கதையா இருக்குமா, காணக்கூடிய உற்பனக்கதையா அன்றேல் கற்பனைக் கதையா, அதாவது மெய்ச்சரித்திரமா பொய்ச்சரித்திரமா என்று கண்டு தெளிவதே கலை நூற் கற்றதின் பலனாகும்.

கலைநூற் கற்ற விசாரிணையோ இராஜபுத்திரனை எடுத்துபோய் வளர்த்த பூதங்களின் சந்ததி தற்காலம் காடுகளில் ஏதேனும் வாசஞ் செய்கின்றதா, அவ்வகை வாசஞ்செய்யும் பூதங்களைக் கண்டு காட்டிலாக்கா உத்தியோகஸ்தர்களாகும் பாரஸ்ட் ஆபீசர்களேதேனும் அறிக்கை செய்திருக்கின்றார்களா காடுகளையும், மலைக்குகைகளையும் வெட்டி ஆராய்ச்சி செய்துவரும் ஆர்ச்சலாஜிகல் சர்வேயர்களேனும் அப்பூதங்களைக் கண்டிருப்பார்களா, இல்லையே. இல்லாதப் பொய்க்கதைகளை ஏட்டில் எழுதிக் கூட்டமிட்டுக் கூத்தாடுவது வீண்விரயமன்றோ.

கஷ்டார்ஜித சொத்தை காடைவிளக்கென்றும், மேடை சோடிப் பென்றும் சிலவிட்டாடும் நாடகத்தை விழித்திருந்து பார்த்த மக்களுக்கு ஏதேனும் பலனுண்டா. ஆட்டமாடுவோருக்குப் பணக்கேடும் அதனைப்பார்க்க ஓடுவோருக்கு பணக்கேடுடன் தூக்கக்கேடுமே கண்டபலனாகும்.

ஓர் சுபகாலங்களைக் கொண்டாடுவோர் தங்களாற் கூடிய திரவியத்தை சேர்த்து நங்குலத்து ஏழைகளுக்கு வஸ்திரதானமேனும், அன்னதானமேனும் அளித்து ஆதரிப்பார்களாயின் ஏழைகள் மனங்குளிர்ந்தளிக்கும் ஆசீரால் சகல சுகமும் பெருகுமென்பது சத்தியம்.

பணவிரயஞ்செய்து பொய்க்கூத்தாடுவோர் பெரும்பாலுங் காணும் பலன் யாதெனில், மேடைக்கு முதலாளியானோர் ஓர் கடனாளி ஆவதும், ஆட்டமாடும் வாலிபர் அருகிலுள்ளமனைவியுடன் மற்றோர் உடைந்தையைத் தேடிக்கொள்ளுவதும் கூத்து பார்க்கப்போகும் பாலியப்பெண்கள் குடி கெட்டலைவதுமே பெரும் பயனாகும்.

இத்தகையக் கேடுகளுக்குக் காரண உற்சாகக் கதைகளோவென்னில், ஓர் பால்ய ஸ்திரீயானவள் தன்னுடைய விளையாட்டில் இருக்குங்கால் ஓர் மதோன்மத்த பாலியன் அவள் மீது கல்லைவிட்டெரியவும் அதை அறிந்த காவலாளிகள் அவனை கட்டி இழுத்து நீதியதிபரிடஞ்சென்று அவர்களது தெண்டனையால் கொலைகளஞ் சென்று நின்றவன் பகவனை வணங்கக் கொலையாளர் விட்டுச்சென்றக் கட்டுக் கதையை மற்றுமுள்ள பாலியர்