பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அந்தணர் தமிழரையு மடுமைகொண்டுக்
ககனமாண்டப் பிரபோத சிம்மம்
அவனியிற் பதினெட்டு விருதுடைதீட்டிலா
னழகு முன்னூல் பூண்டவன்
அவை வென்ற வெள்ளானை யேறிப் பிரதிட்டைவரு
மகழங்கஞானவீரன்.

எனவும் சென்னை புரசவாக்கத்தில் வசித்துக்காலஞ்சென்ற ம-அ-அ-ஸ்ரீ ஏகாம்பரப்புலவரவர்களியற்றியுள்ள,

கீர்த்தனை சுருக்கம்

சகலவிருதும் பெற்ற சத்துவசீலரை
பகலிற் பறையரெனப் பகட்டு ம்பாதகர்க்கு
இகத்து சுகமதற்று பரத்திற் பவங்களுற்று
நுகத்துத் தடிகளேற்று நொய்வர்நொய்வர்மிகு.

- 3:39; மார்ச் 9, 1910 –

இத்தகைய பூர்வ சரித்திரங்களை மறந்து பராயர் மதவிசாரிணையிலும் அவர்கள் செயலிலும் பழகி தன்மகன்ம குருக்களென விளங்கும் வள்ளுவர்கள் மணவரையில் உட்கார்ந்து தன்மகன்ம குருக்களின் செயல்களைச்செய்து வருகின்றார்கள். அதாவது, புருடர்களுக்கு உத்தம குணத்தையும், பெண்களுக்கு பத்மினி குணத்தையும் பெருக்கி வாழ்க்கைத்துணை நலங்காட்டும் மந்திரங்களை மறந்து (சுக்கிலாம்பரதரம்) தேங்கா கொண்டுவா, (சசிவர்ணம்) வாழைப்பழம் கொண்டுவா, (அட்சயா நமா) தட்சணைக் கொண்டுவா, (பிரபவாநமா) தாம்பூலம் கொண்டுவா வெனத் தங்கள் வரவைப் பார்த்துக்கொண்டு போய்விடுகின்றார்கள்.

தன்மகன்ம குருக்களாகிய வள்ளுவர்கள் மணவரையில் மணமக்களை நிலம்பெறச் செய்து ஓமகுண்டத்தில் அகில், சந்தனம் தக்கோல முதலிய கந்த சுள்ளிகளிட்டு, பசுநெய்விட்டு சோதியை வளர்த்து, மணமகள் கரத்தில் நவதானியங் களைக் கொடுத்து பெண்ணை யாதொருகுறைவுமின்றி நடத்துவதற்கு தன்மகன்ம மந்திரஞ் சொல்லப்போகின்றேன் அதைக் கவனித்து என்னுடன் சொல்லி தானியத்தை சோதியிலிட வேண்டுமென்று எச்சரித்து மணமகனைநோக்கி இப்பெண்ணை இன்று முதல் என் மனைக்கும் என் சுகத்திற்கும் ஆளாக்கிக் கொள்ளப்போகின்றேன், இவளுக்கு யாதாமொரு துரோகமும் நான் செய்யமாட்டேன், இவளையன்றி நான் வேறு இஸ்தீரிகளை இச்சிக்கமாட்டேன், இவளுக்கு சுகபூஷணங்களை என்னாற் கூடியவரையிற் செய்து சுகமாக பாதுகார்ப்பேன், இவளுக்குண்டாகும் பிணி வாதைகளை எனக்குண்டாகும் வாதைபோல் எண்ணி சுகமடையச் செய்வேன், என் அறிவை மயக்கும் கள் முதலிய லாகிரிவஸ்துக்களைக் குடித்து இவளை மனநோகச் செய்யமாட்டேன், அன்னியர்களை வஞ்சித்தும் அவர்கள் பொருட்களைக் களவு செய்தும், இவளை போஷிக்காமல் என்தேகத்தையும் மனத்தையும் வருத்தி சம்பாதித்து இவளை போஷிப்பேன், பொய்யான வார்த்தைகளைச் சொல்லி இவளை வஞ்சிக்க மாட்டேன், சீவப்பிராணிகளைத் துன்பப்படுத்தி அதினாற் பொருளை சம்பாதித்து இவளை போஷிக்கமாட்டேன். இவளுக்கு வேண்டிய சுகங்களுக்குப் புருடனாகவும், காப்பாற்றுவதில் காவலாளியுமாக இருந்து இவளை அன்புடன் ஆதரிப்பேன். இதுவே சத்தியம் சத்தியம், சத்தியமென ஒவ்வொரு வார்த்தைகள் முடியும் போதும் நவ தானியத்தை சோதியிலிடச்செய்து புருடனை உறுதிமொழி கூறவைப்பர்.

பெண்ணின் கரத்தில் நவதானியத்தைக் கொடுத்து இன்றைய திகதியில் என் தந்தையானவர் எனக்கு அருகிலிருப்பவரை பத்தாவாக நியமித்து அவருக்கு என்னை தத்தஞ் செய்துவிட்டபடியால் இன்று முதல் இவரையே என் தெய்வமாகவும் என் குருவாகவும் எண்ணி என்மனைத் தொழிலை நடத்திவருவேன். இவர் வாழும் இல்லத்தை மடமாகவும், இவரை தெய்வமாகவும், இவருக்குச் செய்யும் பணிகளை நற்கிரியைகளாகவும், இவருக்கு வட்டிக்கும் பதார்த்தங்களை நெய்வேத்தியங்களாகவும், இவரை