பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தான் கண்டு களித்த ஞானத்தைத் தன் மட்டிலும் அனுபவித்துக் கொள்ளாது நமக்கும் போதிக்க ஆரம்பித்தபடியால் இப்பாடுவந்து நேர்ந்தது. ஆதலின் நமக்காகப் பாடுபட்டாரென்னு மொழி நாளது வரையில் நிறைவேறி வருகின்றது. ஒருவன் செய்த பாவத்தை மற்றொருவர் நீக்கமுடியாது அவனவன் செய்த பாவத்தை அவனவனே அனுபவித்துத்தீரல் வேண்டும். “அளந்ததே அளக்கப்படு" மென்பது நீதிமொழியாம்.

- 3:38; மார்ச் 2, 1910 –

46. புத்ததன்மமும் ஆரியமதமும் ஒன்றாமோ

ஒருக்காலும் ஆகாவாம் காரணமோவென்னில், புத்ததன்மமென்பது பாலிமொழி சமஸ்கிருதத்தில் சத்தியதருமமென்றும், திராவிடத்தில் மெய்யறமென்றும் கூறப்படும். இத்தியாதி சிரேஷ்ட நிலையைப் பெற்றுள்ள புத்ததன்மத்துடன் மிலேச்சமாம் ஆரிய மதத்தை ஒப்பிடுவது ஒருக்காலும் பொருந்தாதென்று கூறினோம்.

ஆரியரென்பதற்குப் பொருள் மிலேச்சர்களென்று திவாகரத்திலும், நிகண்டிலும் பொருட்கூறியுள்ளவற்றிற்குப் பகரமாய் சூளாமணி யென்னும் பூர்வ காவியத்தில் இம்மிலேச்சர்கள் வந்து குடியேறியுள்ள இடத்தையும், அவர்கள் குணாகுணக் குறிகளையும், நாணமற்றச் செயல்களையும் பரக்க வரைந்து வைத்துள்ளார்கள். அத்தகைய மிலேச்சர்களாம் ஆரியர்கட் செயலுடன் புத்ததன்மத்தை ஒன்றுபடுத்துவது பொருந்தா வீண்பொருத்தமேயாம்.

புத்ததன்மமாம் மெய்யறமானது உலகெங்கும் பரவி உலகிலுள்ள விவேகிகள் யாவராலும் கொண்டாடிவந்தபோதிலும் அந்த சத்தியதருமத்தின் காட்சியும் அநுபவமும் சித்தார்த்தி திருமகன் பிறந்து வளர்ந்த குருகுல வம்மிஷவரிசையோராம் சாக்கையர்களுக்கே தெள்ளற விளங்குமன்றி ஏனையோர்க்கு எட்டுவது கஷ்டமேயாம். பூர்வ புத்ததன் மமானது சாதிபேதமென்னும் சத்துருபேத மில்லாமல் வாழ்ந்து வந்ததுபோல் குருகுல வம்மிஷவரிசையோரும் சாதிபேதமென்னும் ஒற்றுமெய்க் கேடில்லாமல் களங்கமற்ற நெஞ்சினர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். அத்தகையக் களங்கமற்றோர்களுடன் களங்கமுள்ளோர் சேருவார்கள் என்பது ஓர் சுயகாரிய தந்திரமாயிருக்கலாம்.

தங்களுக்குத் தாங்களே தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக ஏற்படுத்திக்கொண்டு தங்கள் சுயகாரியங்கள் சுகமாக நிறைவேறிவருமளவும் பொய்சாதிக் கட்டுக்கதைகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காய் அந்தசாதி அப்படியிருக்கவேண்டும் இந்தசாதி இப்படி இருக்கவேண்டுமென்னும் கற்பனைகளை எழுதிவைத்துக்கொண்டு இளித்தவாயர்களை ஏமாற்றிவந்தார்கள். தற்கால பிரிட்டிஷ் துரைத்தன கல்வி விருத்தியால் மேற்சாதி யென்பான் யார், கீழ்ச்சாதி யென்பவன் யார், மேற்சாதி யென்பவனால் உலகத்திற்கு உண்டாகும் சுகமென்ன, கீழ்ச்சாதி என்பவனால் உலகத்திற்கு உண்டாகுந் சுகமென்ன, மேற்சாதி யென்போனுக்கு உண்டாகியுள்ள அடையாளமென்ன. கீழ்ச்சாதி யென்போனுக்குண்டாகும் அடையாள மென்னவென்று கேழ்க்க ஆரம்பித்துக் கொண்டதின்பேரில் ஆ, ஆ, நமது சாதிபேதக் கட்டுகளாகும் பொய் மூட்டைகள் அவிழ்ந்து விடுவதற்குக் காலம்வந்து விட்டது. இனி நாம் சும்மாவிராது தாழ்ந்த வகுப்போர் யாவரையும் நமது சாதிகளுடன் கலந்துக்கொள்ள வேண்டுமென்று கலந்து சிலநாட் சென்றபின் தங்கள் காரியங்கள் கைகூடிவிடுமாயின் "பழைய குருடி கதவைத் திறவடி' என்னும் பழமொழிக்கிணங்க பழையசாதிப்பிரிவே பிரிவு, பழையசாதி ஆசாரமே ஆசாரமெனத் தங்களை சிறப்பித்துக்கொண்டு ஏனையோரை அடக்கும் வழியைத் தேடினும் தேடுவர்.

குதிரை வகுப்புடன் நாயையும், பன்றி வகுப்புடன் முயலையும் சேர்க்கப் பொருந்துமோ, ஒருக்காலும் பொருந்தா. குதிரைவகுப்புடன் குதிரைகளைப் பொருந்த வைக்கலாம். ஒருகாலத்தில் தங்கள் சுயப்பிரயோசனத்திற்காய் தங்களைப் பெரிய சாதியென்று உயர்த்திக்கொண்டு தங்களுக்குள்