பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 143

அதாவது தற்காலம் B.A. பட்டம் பெற்றவர்களென்று அறிந்துக் கொள்ளுவதற்கு ஓர் அறிகுறியாக நீண்ட கருப்பு செட்டை ஒன்றளித்திருப்பது போல் சமணருக்குள் உபநயனமாம் உள்விழிபெற்று புலன் தென்பட்ட தென்புலத்தார் என்றறிந்துக் கொள்ளுவதற்கோர் அறிகுறியாக மதாணி என்னும் பூணு நூலை மார்பில் அணிந்து வந்தார்கள். -

தென்புலத்தோர் என்று உலகோர் அறிந்துக் கொள்ளுவதுடன் அந்நூலை அணிந்துக்கொண்டவனும் முத நூல், உழி நூல், சார்பு நூல் மூன்றினையும் ஓதுதற்கும், ஓதிவைப்பதற்கும் மாறாக்கியாபகம் பதிந்து நிற்பதற்காய் முப்பிரிநூலாகவும் அணிந்திருந்தார்கள்.

அருங்கலைச்செப்பு - மதாணி பூணூல் பத்து

ஒப்புடனோதி யுணர்ந்தா ருள நிறைந்தார்முப்பிரிநூலின் முதல்
இதாதி புலத்தை யுணர்ந்தா ரிறையறிந்தார் மதானு நூலின் மணம்
துப்பறு முந்நூல் வழிநூற் சார்பும் முப்புரிநூலின் முதல்.

மணிமேகலை

புரிநூன் மார்பிற் றிரிபுரி வார்சடை மரவுரியாடையன் விருச்சிக னென்போன்

இதுவே உபநயனமென்பதின் பொருளும் செயலுமாகும். தற்காலம் இத்தேசத்தில் உபநயனமளிக்கும் ஆசிரியனுமில்லை , உபநயனம் பெறும் மாணாக்கர் களுமில்லை. ஆதலின் யதார்த்த பிராமணனுமில்லை என்பதாயிற்று.

- 4:9; ஆகஸ்டு 10, 1910 –

53. கர்மத்தால் உண்டாம் பிறவி

இந்திரதேயத்தோர்களாகும் பௌத்தர்கள் பிறவியால் உண்டாந் துக்கங்களையும், பிறவியால் உண்டாம் சுகங்களையும் செவ்வனே விளக்கிப் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வாய்மெகளை வகுத்துவைத்திருக்கின்றார்கள்.

ஓர் மனிதன் பிறக்கும்போதே கூன், குருடு, சப்பாணி, பேடுடன் பிறப்பதுபெருந் துக்கம். அத்தகைய கூன், குருடு, சப்பாணி, பேடின்றி சுகதேகியாய் பிறப்பது சுகம். ஓர் மனிதன் பிறந்தது முதல் தனச்செல்வம், தானியச்செல்வமற்று அவன் எண்ணுந்தொழில் யாதுங் கைகூடாது பிச்சை இரந்துண்பது துக்கம், பிறக்கும் போதே தனச்செல்வம், தானியச் செல்வமுடையவனாய் வளர்ந்து முன்போன்ற பிச்சையிரப்போர்க்கு ஈய்ந்து புசிப்பின் கவலையற்றிருப்பது சுகம். இத்தகைய சுகத்தையுந் துக்கத்தையும் அநுபவிக்குங் காட்சியாக விளங்குகின்றது.

இத்தகைய அநுபவங்களைக் கண்காட்சியாகக் கண்டவர்களும் அதன் அனுபவங்களை உணர்ந்தவர்களும் இம்மெயில் புண்ணிய விருத்திச் செய்தவர்கள் மறுமெயில் சுகத்தை அனுபவிப்பார்களென்றும், இம்மெயில் பாவவிருத்திச் செய்தவர்கள் மறுமெயில் துக்கத்தை அனுபவிப்பார்களென்றுங் கூறி பாவச்செயல் களையும், புண்ணியச் செயல்களையும் விளக்கி சீவகா ருண்ய வாழ்க்கையில் வாழும்படி செய்திருக்கின்றார்கள்.

இத்தகையப் பிறவியால் உண்டாந் துக்கங்களை செயித்து பிறவியற்ற சுகநிலையை தன்னிற்றானே கண்டடைந்த ததாகதர்தான்பெற்ற நித்தியசுகத்தை உலகத்தில் தோன்றும் சருவசீவர்களும் பெற்று பிறவியின் துக்கத்தை ஒழிப்பதற்காக பாவத்தைப் போக்கும் வழிகளையும், நன்மெய்க் கடைபிடிக்கும் வழிகளையும் மனமாசு கழுவும் வழிகளையும் விளக்கி சுருக்கத்தில் ஆசையாம் பற்றுக்கள் இருக்கும் வரையில் மாறா பிறவியின் துக்கமும் அசையாம் பற்றுக்களற்றவிடத்து பிறவியற்ற சுகமும் உண்டாமென்று தனதனுபவக் காட்சியையும் விளக்கியுள்ளார். இதையே கன்மத்திற்கேற்ற ஜென்மமென்றும் விட்டகுறை தொட்டகுறையென்றும் பிறவியின் செயலைக் கூறுவதுடன் ஆதியில் இப்பிறவியைஜெயித்து நித்திய சுகமடைவதற்காகப்பகவன் போதித் துள்ள நீதிமொழிகளாம் கட்டளைகளை மீறி நடந்தவர்கள் துக்கச்செயல் அதிகரிக்கும்போது என் தலைவிதி என் தலைவிதியென்று முன் நீதிபோதத்தை வழுவி நடந்தவற்றால் உண்டாகியக் கேட்டை விளக்கிவருதலும் இயல்பாம்.