பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தற்காலமுள்ள வைராக்கிகளைமாயிந்துமகந்துவென வழங்கிவருகின்றார்கள். வெங்கடவியாரத்தை நூதனமாக பற்றிக்கொண்ட பைராக்கிகள் அவ்விடமுள்ள சிலைகளுக்கு சந்தனப்பூச்சு நெற்றியிலிட்டு பஜேகோவிந்தம் பகவான் பஜேகோவிந்தமென சிந்தித்து வந்து இராமானுஜர் காலத்திற்குப்பின்பு அவ்விடமுள்ள சிலைகளுக்கு (நாமமென்னும்) பொருளற்றச் சின்னங்கள் இட்டு வைஷ்ணவர் கோவிலென்று சொல்லும்படியாய் ஆரம்பித்துக் கொண்டார்கள். அத்தகைய வைணவர்களால் ஆழ்வார் தீர்த்தமென்னும் அசப்பிய மொழி பரவியவுடன் யதார்த்த சநிநீர் மறைந்து ரோகம் நீங்கும் அற்புதங்களும் பரந்துவிட்டது.

அதனுடன் பூர்வ சமணமுனிவர்களைப்போல் மொட்டை அடித்து மஞ்சளாடை அணிந்து நாளதுவரையில் நடத்தி வருகின்றார்கள் அஃது பௌத்த மடமே என்பதற்கு இன்னும் அனந்த ஆதாரங்களுமுண்டு. பௌத்த மடம் அல்லவென்று எதிர் தோன்றுவாராயின், அதையும் நிரூபிக்கக் கார்த்திருக்கின்றோம்.

- 4:8; ஆகஸ்டு 3, 1910 –

52. உபநயனம்

வினா : உபநயனம், உபநயனமென்று வழங்குகின்றார்களே அதன் பொருளும் செயலும் விளங்கவில்லை.

வே. வடிவேலு, வேலூர்.

விடை : உபநயனமென்னு மொழி வடமொழியாகும். அதன் பொருள் உதவி விழியென்று கூறப்படும். ஊனக்கண்ணென்றும் ஞானக்கண்ணென்றும் வழங்கும் இருவகைப் பெயருள் ஞானக்கண்ணிற்கே உபநயனமென்று கூறியுள்ளார்கள்.

பௌத்த மடங்களில் உள்ள சமணமுநிவர்களுக்கு அறஹத்துக்களாம் தென்புலத்தோர் ஞானக்கண் உணர்த்திய அடையாளத்திற்காய் மதாணிப் பூணூலென்னும் முப்பிரி நூலணிந்து வருவது வழக்கமாயிருந்தது. அந்நூலணையும் வழக்கமும் யாதுக்கென்னில் உபநயன மென்னும் ஞானக்கண் பெற்ற மாணாக்கன் வேறுதொழில் யாதுமின்றி தன்னைப்பார்க்கும் சாதனமே தொழிலாகக் கொண்டவனைக் கண்ட உபாசகர்கள் வேண உதவி புரிந்து ஞானமகனை ஈடேற்று வதற்கேயாம்.

இத்தகைய ஞானக்கண் பெற்ற மக்களை ஆதரிக்கும் புருஷர்களை ஞான தந்தைகளென்றும் இஸ்திரீகளை ஞானத்தாயார்களென்றுங் கூறப்படும்.

ஞானநிலை யுசாவல்

ஊனக்கண் அன்றென் றுளக்கண்ணளித்தபின்
ஞான வனுபவ முறையென் றரைத்தது.

கைவல்யம்

அசத்திலெம்மட்டுண்டம் மட்டும் பராமுகமாகினாய்
நிசத்தி லுளவிழி பார்வை யிப்படி நிறந்தர பழக்கத்தால்
வசத்திலுன் மனம் நின்று சின் மாத்திர வடிவமாகிடின்மைந்தா
கசத்த தேகத்திலிருக்கினும் ஆனந்தக்கடல்வடி வாவாயே.

பின்கலை நிகண்டு

காப்புக்கு முன்னெடுக்குங் கடவுடான் மாலேயாகும்
பூப்புனை மலரின் செல்வி புனைபவ னாதலானும்
காப்பவனாதலானுங் கதிர்முடி கடகத்தோடு
வாய்ப்பதா மதாணி பூனூல் வரிசையிற் புனைதலானும்.

இத்தகையாய் பௌத்த வியாரங்களிலுள்ள சமணமுனிவர்களின் பரிபக்குவம் அறிந்து ஞான விழியாம் உபநயனம் உணர்த்தியபின்னர் உலகோர் யாவரும் அவனைக் கண்டவுடன் அவனுக்கு வேண்டிய உதவி புரிந்து யாதொரு கவலையுமின்றி ஞானவிழிப் பார்வையில் நிலைத்துப் பற்றறுப்பதற்காக அவனை உபநயனம் பெற்றோனென்றறிந்து உதவுவதற்கு மதாணி என்னும் பூணூல் அணிந்து வந்தார்கள்.