பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அச்சமற வாளுமதி வேந்தனவனம்மே.
வேந்தன் முகத்தார்வேந்தன் வீரவாகம்மே - வீரவாகம்மே,
ஏந்தலொன்பான் மேலோன் மண்முகவாகம்மே.
மண்முகவா கீன்றமைந்தன் சித்தார்த்தரம்மே - சித்தார்த்த ரம்மே,
அண்ணலவன் ஆதியந்த மறைகிறேன் கேளம்மே.

பின்கலை நிகண்டு
மண்முகன் மாயாதேவி சுதனகளங்கமூர்த்தி.

மலர்கலியுலகத்து 1616சித்தார்த்தி வருடம் மகதநாட்டுத் தலைத்தார்வேந்தர் களாக வழங்கி வந்த கலிவாகு, வள்ளல் வாகு, இட்சுவாகு, வீரவாகென்னும் சக்கிரவர்த்திகளின் வம்மிஷவரிசையில் மண்முகவாகென்னும் சக்கிரவர்த்திக்கும், மாயாதேவி என்னும் இராக்கினிக்கும் மகவாகத் தோன்றி தனது பேரானந்த ஞானத்தால் ஒலிவடிவிலிருந்த மகடபாஷையை வரிவடிவாக்கி சகலமக்களுக்கும் சகடபாஷையையுந் திராவிட பாஷையையும் அருளி நீதிநெறி ஒழுக்கங்களில் அமைத்து எண்ணருஞ் சக்கரவாளமெங்கணும் அறிய சங்கங்களை நாட்டி சகல கலைக்கியானங்களையுமூட்டி தனது தந்தைக்கே குருவானது போல் உலகத்தில் தோன்றியுள்ள சகல மதங்களுக்கும் போதனாபீடமாகவும், உலகரட்சகனாகவும், ஜகத் குருவாகவும் விளங்கிய ஒப்பிலா அப்பன் புத்தரது சிறந்த சரிதத்தையும், அவரது அளவுபடா ஞானபோதத்தையும், அதனால் மனுக்கள் அடைந்த ஆனந்த சுகத்தையும் எனது நாவினாற் கூறுதற்கும் கரத்தால் வரைவதற்கும் அசக்தனாயினும் கூடியவரையில் எமதுகுலமரபோர் இடத்து சிதலுண்டது நீங்கி எஞ்சிய நூற்களாகும் அருங்கலைச்செப்பு, அறநெறிச்சாரம், நிகழ்காலத்திரங்கல், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி, சிலப்பதிகாரம், திரிக்குறள், திரிமந்திரம், திரிகடுகம், யாப்பருங்கலை, திரியறக்கலை செய்யுட்களைக்கொண்டும் சமண முநிவர்களில் சித்தி பெற்றோராகும் சித்தர்களால் இயற்றியுள்ள சித்து நூற்களின் ஆதாரங்களைக் கொண்டும் சாக்கைய வம்மிஷவரிசையோர் தங்கள் தங்கள் கர்ணபரம்பரையால் வழங்கிவந்த சுருதிகளைக்கொண்டும் சென்னை சாக்கைய புத்தசங்கத்திற்கு வந்திருந்த மாண்டலே, யு. சாந்தவாராவென்னும் சமண முநிவராலும், ஹேரன்னா சிலோன், யு. வினயலங்காராவென்னும் சமண முநிவராலும், மோல்மென், யு. பிரஞ்ஞா வென்னும் சமண முநிவராலும், என் சடா யு. தேஜோவன்ஸா வென்னும் சமணமுநிவராலும் பாலிபாஷையிலுள்ள அபிதம்மத சங்கஹ, பட்தானா, தம்மசங்கினி, சம்ஹிதசுத்தா என்னும் தன்ம நூற்களை மொழிபெயர்த்தும், அறவாழி அந்தணனது திவ்விய சரித்திரத்தை கலியுலகம் 500 வது வருடம் புத்தர் பிறந்த 3393 வது வருடம் கிறிஸ்து பிறந்த வருடம் 1907 மகம்மது பிறந்த 1325 வருடம் நமது தமிழன் பத்திரிகையில் வெளியிட ஆரம்பித்து நாளதுவரையில் வெளியிட்டுள்ள சரித்திர நீதிநெறி ஒழுக்கங்கள் யாவையும் புத்தக ரூபமாகத் திரட்டி வெளியிட்டுள்ளோம்.

இதனுள் அடங்கியுள்ள சரித்திரங்களும், நீதிநெறி ஒழுக்கங்களும், ஞானசாதனங்களும், அதனதன் பலன்களும் ஓதாமல் உணர்ந்த முநிவன் கண்டளித்த, பிறப்புப் பிணி மூப்பு சாக்காடென்னும் நான்கு வாய்மெகளும், பிறப்பை ஜெயித்து பிணியை ஜெயித்து மூப்பை ஜெயித்து மரணத்தை ஜெயித்து நிருவாணமுற்ற துக்கநிவர்த்தியும், அதன்பின் இருபிறப்பாளனாகி சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பூரணானந்தமாம் பரிநிருவாணமும் சாதனமற்ற அன்னிய மதத்தர்களால் வரைந்து வைத்துள்ள பௌத்த நூற்களுக்கு மாறுபட்டே நிற்கும்.

அதாவது பாலி நூற்களிலிருந்து மொழிபெயர்த்ததினால் உண்டாம் பேதங்களும், செய்யுட்களிலிருந்து பொருள் பிரித்த பேதங்களும் இத்தேசத்திற்கு வந்துள்ள யாத்திரைக்காரர்வசம் எழுதி அளித்துள்ள பேதங்களும் பேரானந்த புத்ததன்மத்திற்கு மாறுதலடைந்து பலவகையாய சந்தேகத்தில் ஆழ்த்தி திகைக்க வைத்திருக்கின்றது.

அத்தகையத் திகைப்புகளுக்கு ஆதாரம் பாலிபாஷையின் மொழி பெயர்ப்பே என்பது எவ்வாறெனில் : சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தியார் பிணியாளன்