பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சிலப்பதிகாரம்

கண்களிமயக்கத்துக் காலதலற்றிருந்த, / தண்டமிழாசான் சாத்தனிஃதுரைக்கு.

தொல்காப்பியம்

மயங்காமரபினெழுத்து முறைகாட்டி, / மல்குநீர் வரைப் பினைந்திரர்.

மணிமேகலை

ஆயிரநாமத் தாழியன் திருவடி.

கமல சூத்திரம்

சகஸ்திரநாம பகவன்.

அவலோகிதரென்பதும், சாத்தனென்பதும், கிழவனென்பதும், இந்திர னென்பதும் பகவனுக்குரிய ஆயிர நாமங்களில் அடங்கியவைகளேயாம்.

உலக இதத்தைத் தவிர்த்து மலைவுபெறாமதுர வாக்கியங்களை ஊட்டின வராதலின் அவலோகிதரென்றும், விண்ணவரும் மண்ணவருஞ் சாற்றுதற் குரியவராதலின் சாத்தனென்றும். சகலமும் அறிந்தவராதலின் கிழவனென்றும், ஐயிந்திரியங்களை வென்றவராதலின் ஐந்திரர், இந்திரரென்றும் வழங்கப்பெற்றார்.

பூமியின்கண் நீரினே துவால் தாபரவர்க்கங்கள் தோன்றி தாபரவர்க்கங் களின் ஏதுவால் ஊறுவனங்கள் தோன்றி ஊறுவனங்களின் ஏதுவால், மட்சங்கள் தோன்றி, மட்சங்களின் ஏதுவால், பட்சிகள் தோன்றி பட்சிகளின் ஏதுவால், விலங்குகள் தோன்றி விலங்குகளின் ஏதுவால், வால்னரர் வாலற்ற நரரென்னும் மக்கள் தோன்றி ஆறாவது தோற்றம் விரிந்து நின்ற மக்களுள் வாலவயதில் அறிவின் விருத்தியினின்ற வாலறிஞன் தனக்கோர் ஆசிரியன் இல்லாமலும் வரிவடிவமாகும் அட்சரபாஷை இல்லாமலும் தனதிடைவிடா விசாரிணையின் ஏதுவால் மெய்ப்பொருளை ஓதாமல் உணர்ந்து முக்காலமும் அறிந்த முநீந்திரனென்னும் ஏழாவது தோற்ற தேவனாக விளங்கியபடியால், சகல சங்கத்தோர்களும் முன் இந்திரரை ஆதிகடவுளென்றும், ஆதிபகவன் என்றும், ஆதிநாதன் என்றும், ஆதி ஈசன் என்றும், ஆதிசிவனென்றும், ஆதிமூலமென்றும், ஆதிகுருவென்றுஞ், சகல நூற்களின் காப்புகளிலும் அவரையே தொழுதுவந்தது மன்றி மற்றுமுள்ள மக்களும் அவரை வணங்கி மெய்யறம்பற்றி தீவினையையும் அகற்றிக்கொள்ள வேண்டுமென்னும் முயற்சியிலிருக்கின்றார்கள்.

மெய்ப்பாட்டியல் சூத்திரம்

தீவினையை வெல்லும் அறவாழி தெய்வம் அஞ்சல்

குறள்

அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லார் / பிறவாழிநீந்தலறிது.

வீரசோழியம்

பீடு கொண்ட வார்தளிர் பிரங்குபோதி யானையெம்
பிரானை நாளுமேத்துவார் பிறப்பிறப்பிலார்களே.

போதிவேந்தன் சரணலால் அரண்பு கோமென்று அரசர்கள் புடை சூழவும் மற்றுமுள்ள மாக்கள் சூழநிற்கவும் ஆலமர்க் கடவுள் திரிபேத வாக்கியங்களாகுந் திரிபீடங்களை வகுத்து அதன் முதன் மொழியாகும் பாபஞ் செய்யாதிருங்கோள் என்பதை கர்மபாகையாகவும், நன்மெய்க்கடை பிடியுங்கோள் என்பதை அர்த்தபாகையாகவும், இதயத்தை சுத்திசெய்யுங்கோள் என்பதை ஞானபாகை யாகவுமுள்ள பேதத்தின் உட்பொருளை விளக்கி மகடபாஷையுள் மறைந்துள்ள மும்மறை வாக்கியங்களை அவனவன் தேகங்களில் உணருமாறு தென்மொழியில் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யன்பென்னும் அறம்பொருள் இன்பத்தை உணர்த்தி இப்பேரின்ப நிலையை அவனவன் அனுபவிக்க வேண்டியவனாதலின் அதையே அவன் முதிர்ந்த முத்தநிலை நிருவாணமென்றுங் கூறிவருங்கால் நாக சர்ப்பங்கள் அவர்தோளிலும் தாளிலும் புறண்டுலாவவும் யானைகள் தாமரை புட்பங்களைக் கொய்து வந்தர்ச்சிக்கவும் தனது மாணாக்கர்களில் சிலர் சித்துக்களை விளையாடவுங் கண்ட கருணாம்பரன் அவர்களை அருகிலழைத்து நீங்கள் செய்துவருஞ் சித்துக்கள் மெய்யறச் செயலாலும், மெய்ப்பொருள் உணர்ச்சி யாலும், மெய்யின்ப சுகத்தாலும் எண்பத்தொன்பது