பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 273

சத்தங் கேட்டவுடனே அன்னமளித்து அனுப்பிவிடும்படி உத்திரவு செய்யவேண்டியது. உத்தமக்கள் பிச்சாபாத்திரத்திற் கொண்டுவந்த அன்னத்தை ஐம்மக்களும் புசித்து மிகுதியை ஏழைகளுக்கும், மற்ற சீவராசிகளுக்கும் பரிமாறிவிடவேண்டியது.

அருங்கலைச்செப்பு - அகலேந்தி அறமோதி பிச்சையன்ன மேற்றல்

அம்பொற்கலத்துளடு பாலமர்ந்துண்ணாவரிவை அந்தோ
வெம்பிப்பசி நலிய எவ்வினையின் வேறாயோ ரகல்கையேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சை எனக் கூறிநிற்பாட் கண்டு
நம்பன்மின் செல்வ நமரங்காணல்லறமே நினைமின் கண்டீர்.

எவ்வகைப் பதார்த்தங்களேனும் அன்னமேனுங் கொஞ்சமும் அதிகமும் இல்லாமல் முற்பகல் உதயாதி முதல் பதினைந்து நாழிகைக்குள்ளாகப் புசித்துத் தீறல் வேண்டும்.

பிற்பகல் முதல் இரவு முழுவதும் ஜலபானமின்றி மற்றக் கடினவஸ்துக்களைப் புசிக்கலாகாது. ஐம்பத மாக்களும் மழை காலங்களில் வியாரங்களை விட்டு யாத்திரைப் போகலாகாது. குடும்பிகளை அட்டமி, பௌர்ணமி, அமாவாசை இம்மூன்று நாளும் வியாரத்துள் வரவழைத்து பஞ்சசீலம் நிலைக்கச் செய்யவேண்டியது. இவ்வகை சுஷ்கச் செய்யவேண்டிய காரணம் யாதென்பீரேல் அதிக புசிப்பை விரும்பியகாலத்திலுண்டாய மமதையும், முற்றும் புசிப்பை அகற்றியிருந்தகாலத்தில் உண்டாய அமைதியையும் ததாகதர் உணர்ந்தவராதலின் அதிகமுங் கொஞ்சமும் இல்லா மிதாகாரத்தில் நிலைக்கச்செய்தார். அத்தகைய மிதாகாரத்தை அதிகமுங் கொஞ்சமும் இல்லாமல் முற்பகல் முழுவதும் புசித்து பிற்பகலும் இரவும் யாதொரு கடின வஸ்துக்களும் இராது ஜலபானமட்டிலும் அருந்த வேண்டிய காரணம் யாதென்பீரேல் மிகு புசிப்பால் மதோன்மத்தம் உண்டாம் அதி நித்திறை கொண்டு காமனிடஞ்சிக்கி அயர்ந்து போவார்கள். ஆதலின் இரவு புசிப்பை தவிர்த்து நல்விசாரிணையிலும் சுகத்தியானத்திலும் விழித்திருப்பார் களாயின் இரவு பகலற்ற இடத்தில் தூங்காமற் தூங்குவார்கள். இவர்களையே 2-வது விதரண மக்களென்னப்படும்.

பின்கலை நிகண்டு

பகவனது சங்க வரிசையில் பூணு நூற் புனைந்த விவரம்.
காப்புக்கு முன்னெடுக்குங் கடவுள் தான் மாலேயாகும்
பூப்புனை மலரின் செல்வி புனைபவனாதலானும்
காப்பவனாதலானுங் கடவுளர் முதல்வனாகி
வாய்ப்பதா மதாணி பூநூல் வரிசையிற்புனைதலானும்

இவர்கள் அதிதீவிர விதரணக்குறைவால் தூங்காமற்றூங்கும் நிலை தவரி நோக்கி நோக்கி நழுவியும், விழித்து விழித்து பேருரக்கங் கொள்வார்களாயின் தன்னை மறந்து பிறவிக்காளாவார்கள் என்று உணரும் அறஹத்துக்கள் விதரணமக்கள் அதி தீவர நோக்கற்றிருப்பதற்கிரங்கி உபநயனமாம் உள்விழியைத் திறந்து ஊனக்கண் பார்வையைத் தவிர்த்து ஞானக்கண் பார்வையிலிருத்தி உபநயனம் பெற்றவனென்று உலகோர் அறிந்து வேண்டிய உதவி புரிந்துவருதற்கு மதாணி பூணு நூலென்னும் ஓர் அடையாளந் தரித்து கடைத்தேறற் செய்யவேண்டும். இவர்களையே 3-வது உள்விழிமாக்களென்னப்படும்.

சீவக சிந்தாமணி

அட்டமீ, அமரவாசி, பூரணவாசி, ஒடுக்கம்.

ஒவாவிரண்டுவ்வு மட்டமியும் பட்டினிவிட்டொழுக்கங்காத்த
றாவாததவமென்றார் தண் மதிபோன் முக்குடைக்கீழ் தாதைபாதம்
பூவே புகைசாந்தஞ் சுண்ணம் விளக்கிவற்றாப் புனைதனாளு
மேவா விவை பிறவும் பூசனையென்றீண்டிய நூல் கரைகண்டோரே.

பின்கலை நிகண்டு

விஞ்ஞையர் சாரணரென்போற் செய்கை.

நீரினாற்பூவில் வானில் நினைந்திட மொதுங்குகின்ற
சாரணரெண்மராவர் சமணரிற் சித்தி பெற்றோர்