பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 301

தருமராஜனானவர் தன்மபாத போதத்தை இருவகையால் விளக்கி ஒவ்வொருவர் இதயமும் உருகி அன்பு ததும்ப போதித்தபோது சருவ சீவர்களின் உள்ளங்கள் யாவும் பரவசம் உற்றதுமன்றி அவர் பாதம் படிந்திருந்தக் கல்லும் உறுகி கமலபாத ரேகைப்பதியப்பெற்றது.

அருங்கலைச்செப்பு - சொற்சுவைபத்து

கல்லு முருகிக் கமலத்தைப் பெற்றதெனில், சொல்லு முருகாததென்.

உதயகாலத்தில் உச்சிமலை ஏறி பதினைந்து நாழிகை வரையில் தன்மபாதத்தை விளக்கியபோது அவரை சுற்றிலும் இருந்த மக்கள் யாவரும் தங்கள் தங்கள் சிந்தைகள் யாவையும் வேறு செலுத்தாது ததாகதர் போதத்தை நோக்கி நின்றவர்களாதலின் அவர்போதம் நின்றவுடன் கலைந்து தாகவிடாயின் மிகுதியால் தவிக்கலாயினர்.

அவர்கள் தவிப்பை உணர்ந்த அண்ணல் தனது ஏகசடையைக் கரத்திலேந்தி நீட்டியபோது அதனின்று பெருகிய நீர்ப் பிரவாகமாய்ப் பரந்து சகல சீவர்களும் பருகி விடாய்தீர்ந்ததுகள்.

வீரசோழிய உதாரணச் செய்யுள்

குறியாரெனவே புனலின் மீ / துறுதா மரைமேல் உரைவார் தா
நெறியார் சடையாய் நின்பாதம் / அறிவார் இனி யார் அறிவாரே.
புரிவுள சடையும் புரிவுள / சடைமேற் புனலும் பிறழுமே.

அருங்கலைச்செப்பு - காக்கல்பத்து

வினைதீர்த்தான்தாகவிடாய் தீர்த்தான் கங்கை
முனைபேர்த்தானன்றே முநி.

சீவக சிந்தாமணி

இலங்க வாழியி நான்களிற்றீட்டம்போல்
கலங்கு தெண்டிரை மேய்ந்து கண மழை
பொலங்கொள் கொன்றையினான் சடை போன் மின்னி
விலங்கல் சேர்ந்து விண்ணேறி விட்டார்த்தவே.

பாறை எங்கும் கங்கைப்பிரவாகமுற்றிருப்பதைக் கண்ட கருணாகரன் அங்குள்ள அன்பர்களைக் கொண்டு அவ்விடம் பரவும் அருவி நீரோடையை அடிவாரத்தில் கொணர்ந்து சகலசீவர்களுக்கும் உதவும்படி துவாரமிட்டு மலையின் அருவிநீர் பூமியில் வற்றாமல் ஓடி சீவர்களைக் காக்கும்படி செய்துவிட்டார்.

அம்மலையில் செய்த ஜலதாரை வழிக்கு பகவன் பெயரில் ஒன்றாகிய அறித்துவாரமென்னும் பெயரைக்கொடுத்ததுமன்றி அக்கங்கை நதி பெருகி ஓடுதற்கு கங்கை நதி என்றும் புத்தபிரானே அதற்கு ஆதாரமாய் இருந்தபடியால் அவரை கங்கை ஆதாரனென்றும் போற்றினார்கள்.

வீரசோழிய உதாரணச் செய்யுள்

அம்பொற் பணைமுகத்துத் திண்கோட்டணிநாகம்
வம்புற்றவோடை மலர்ந்திலங்க - வும்பர்
நவம்புரியு நாண்மதியுங் கங்கையு நண்ணி
தவம்புரிவார்க்கு இன்பந்தரும்.

சிலப்பதிகாரம்

போதித்தானம் புரிந்தறங் கொள்ளவு,
மென்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மெயி
னன்னீர்கங்கையாடப்போந்தேன்
வாடகமாடத் தரிது யில் அமர்ந்தோன்
சேடங்கொண்டு சிலர் நின்றேத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச்சேவடி மணிமுடி வைத்தல்
முடி வளையுடைத்தோன் முதல்வன் சென்னி என்
றிடையுடைப் பெருமழை தெய்தா தேகப்.

மணிமேகலை

செங்கதிர்ச்செல்வன் திருவறம் விளக்குங்
கஞ்சை வேட்கைக் கரந்தாண்ட
அமரர் முநிவன் அகத்தியன் தனாது.