பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 23

அவைகளை அநுசரித்து இவர்கள் வாசஞ்செய்யும் சேரிகளில் ஒவ்வோர் பெண் தேவதியை வைத்து நாளதுவரையில் சிந்தித்து வருகிறார்கள்.

க்ஷெந்திராந்தம்

நீதியார் வேதநூலினெறியலாவறங்கணாலு
மோதியோரைந்து சீல முடையராயுடல மூடிப்
போதி நீண்மரத்தின் மேவு புத்தர் நால்வரினும் வைத்து
சாதி தானிலாத கொள்கை சௌந்திராந்திகன் முன் சாற்றும்

என்று புத்தமதத்தில் சாதிபேதமில்லாமலிருக்க வேண்டுமென்று போதித்துள்ள கட்டளைப்படிக்கு பலவகைக் கால்வாய்களில் ஓடிவரும் அசுத்தசலங்களெல்லாம் - சமுத்திரத்தில் விழுந்து சுத்தமடைவது போல பிராமணனென்பவன் வந்தாலும் செட்டி என்பவன் வந்தாலும் முதலி என்பவன் வந்தாலும் நாயுடு என்பவன் வந்தாலும் அவர்களை வேறு சாதி என்ற வித்தியாசம் பாராமலும் சத்துருக்களென்று சங்கை கொள்ளாமலும் தன்னவர்களைப்போல் ஆதரித்து சுத்த இதயமுண்டாகச் செய்வார்களே அல்லது இன்னசாதி இனியசாதி என்று புறங்கூறி தள்ளமாட்டார்கள். ஒவ்வொரு அநுபவங்களும் செய்கைகளும் புத்தமதத்தைத் தழுவி வந்த போதிலும், பேதமைகுணத்தினால், குலகுருவின்பேரில் வைத்திருந்த அன்பைக் கொண்டு தாயை பரிகொடுத்த பிள்ளையானது எவ்வகையாகப் பலரை தேடியலையுமோ அதுபோல், துலுக்கர் கோவில்களுக்கும் கிறிஸ்தவர் கோவில்களுக்கும் வைஷ்ணவர் கோயில்களுக்கும் சைவர் கோவில்களுக்கும் போய்த் தங்களுடைய மதம் இன்னது தானென்று நிலையில்லாமல் திகைத்து நிற்கின்றார்கள் தாயை மறந்துவிட்டப் பிள்ளையானது தாயின் நிறத்தையும் தாயின் அங்கபாகத்தையும் தாயை மறந்துவிட்ட இடத்தையும் உய்த்து நிதானிக்குமானால் இடந்தெரிந்து தாயும் பிள்ளையை ஏந்திக்கொள்ளுவாள் பிள்ளையுந் தாயால் சுகமடையும்.

அதுபோல் குலகுருவை மறந்துவிட்ட இவர்கள் மதசம்மதமான நிலையில்லா மலிருக்குங் காரணமென்னவென்றும் அந்தந்த மதஸ்தர்களுக்கு கோவிலென்றும் குருக்களென்றும் நிலையங்களிருக்க சோதிடத்திலும் வைத்தியத்திலும் ஞானத்திலும் நீதியிலும் வல்லமை பெற்று பரம்பரை அநுபவமாயிருக்கும் நமக்கு கோவிலென்றுங் குருவென்றும் சொல்லும்படியான ஓர் நிலையுமில்லாமற் போனதற்கு ஏதுவென்ன வென்று உய்த்து நிதானிப் பார்களானால் குலகுரு இன்னாரென்று கண்டடைந்து குருவின் கருணையும் மதசம்மத ஒற்றுமையும் பெற்று வாழ்வார்கள்.

பிராமணர் என்று வழங்கும் புருசீகருக்கும் பறையரென்று வழங்கும் சாக்கையருக்கும் பூர்வமுதல் நாளது வரையில் ஓர்வகை விரோதமிருப்பதை எளிதிற் தெரிந்துக் கொள்ளலாம்.

பிராமணர் என்பவர்கள் பறையரென்று சொல்லும்படியானவர்களை சகல சுகங்களிலுந் தலையெடுக்கவிடாமல் தாழ்த்தி வரும் செய்கைகளினாலும்.

பிராமணரென்று சொல்லும் படியானவர்களை மற்ற சாதியோர்கள் குருவென்றும் மேலான சாதியென்றும் புகழ்ந்துக் கொண்டிருக்க பறையர்களென்று சொல்லும்படியானவர்கள் மட்டிலும் அவர்களை உயர்ந்த சாதியென்றாயினும் குருக்களென்றாயினு மதியாமல் தங்கள் கிராமங்களுக்குள் வந்து விடுவார்களானால் அவர்களை அடித்துத் துரத்திவிட்டு வீதியின் கடைசியில் சாணச் சட்டியைக் கொண்டுபோய் உடைத்து வருங்கிரியையினாலும் உள்ளப்பகை விளங்கும்.

புத்தமதத்தால் உண்டாகிய பூர்வ பகையானது நாளது வரையநுபவத்தில் இருந்தபோதிலும் அதன் விருத்தாந்தத்தை பூர்வமாக விசாரியாமலும்.

பூர்வ அரசர்கள் முதல் வைசியர் வேளாளரென்ற மூன்று தொழிலாளர்களுக்கும் இவர்கள் குருக்களாகவும் கருமத்தலைவர்களாகவும் மேன்மைப் பெற்றிருந்ததை சகல சரித்திரங்களிலும் வரைந்திருக்க நம்மை தாழ்ந்த சாதியாக இழிவு கூறிவருகிறார்களே அதன் மர்ம்மமென்னவென்று