பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 375


22. கன்ம காதை

ஓ! சகோதிரர்களே! கன்மங்கள் மூன்று விதமாக செய்யப்படுகின்றன.

1. லோபம் அல்லது பேராசையால் செய்யப்படும் கன்மங்கள் 2. பகையால் செய்யப்படும் கன்மங்கள் 3. செறுக்கால் செய்யப்படும் கன்மங்கள்

ஓ! சகோதிரர்களே! ஒருவன் பேராசையால் செய்யப்படுகின்ற கன்மங்களானது பேராசையிலிருந்து உதிக்கின்றன. அவைகள் பேராசையால் சம்பவிக்கின்றன. பேராசையால் உண்டு செய்துக்கொள்கின்றன. எங்கெங்கு இவனிருக்கின்றானோ அங்கங்கு அவனது கன்மங்கள் பக்குவப்படுகின்றன. எங்கு பக்குவப்படுகின்றனவோ அங்கு அவைகளின் பலன்களை அநுபவிக்கின்றான்.

ஒருவன் பகையால் செய்யப்படுகின்ற கன்மங்களானது பகையிலிருந்து உதிக்கின்றன, அவைகள் பகையால் சம்பவிக்கின்றன, பகையால் உண்டு செய்துக்கொள்கின்றன, எங்கெங்கு இவனிருக்கின்றானோ அங்கங்கு அவனது கன்மங்கள் பக்குவப்படுகின்றன. எங்கு பக்குவப்படுகின்றனவோ அங்கு அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றான்.

ஒருவன் செறுக்கால் செய்யப்படுகின்ற கன்மங்களானது செறுக்கிலிருந்து உதிக்கின்றன, அவைகள் செறுக்கால் சம்பவிக்கின்றன, செறுக்கால் உண்டு செய்துக்கொள்கின்றன, எங்கெங்கு இவனிருக்கின்றானோ அங்கங்கு அவனது கன்மங்கள் பக்குவப்படுகின்றன. எங்கு பக்குவப்படுகின்றனவோ அங்கு அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு விதையை காற்று உஷ்ணம் இவைகளால் சேதப்படுத்தாதபடிக்கும், அழிக்காதபடிக்கும் இருக்கும்படியான ஒரு செழிப்பான தோட்டத்தில் விதைத்தபின்னர் சரியான காலத்தில் மழை பெய்தால் எவ்விதமாக வளர்ந்து பலனைத்தருமோ அதுபோல பேராசையால் செய்யப்படுகின்ற கன்மங்களானது பேராசையிலிருந்து உதிக்கின்றன, அவைகள் பேராசையால் சம்பவிக்கின்றன, பேராசையால் உண்டு செய்துக்கொள்கின்றன. எங்கெங்கு இவனிருக்கின்றானோ அங்கங்கு அவன் கன்மங்கள் பக்குவப்பட்டு அங்கங்கு அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றான்.

பகையால் செய்யப்படுகின்ற கன்மங்களானது பகையால் கன்மங்கள் பக்குவப்பட்டு அங்கு அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றான். செறுக்கால் செய்யப்படுகின்ற கன்மங்களானது செறுக்கால் கன்மங்கள் பக்குவப்பட்டு அங்கு அவைகளின் பலன்களை அனுபவிக்கின்றான். சகோதிரர்களே! இவ்வகையாக மூன்றுவித கன்மங்கள் செய்யப்படுகின்றன.

இவைகளன்றி வேறு மூன்றுவித கன்மங்கள் செய்யப்படுகின்றன.

1.ஆலோபா அல்லது பேராசையற்று செய்யப்படும் கன்மங்கள். 2.ஆதோசா அல்லது பகையற்று செய்யப்படும் கன்மங்கள். 3. ஆமோஹா அல்லது செறுக்கற்று செய்யப்படும் கன்மங்கள்.

ஓ! சகோதிரர்களே! ஒருவன் பேராசையற்று செய்யப்படுகின்ற கன்மங்களானது பேராசையினின்று உதிக்காதும், பேராசையால் சம்பவிக்காதும், பேராசையே உதிக்கச்செய்யாது. அதாவது பேராசையே அற்றுவிடுகின்றது. பேராசையற்றபோது கன்மங்கள் அற்றுவிடுகின்றன. அக்கன்மங்கள் பனைமரத்தை வேறோடே பெயர்த்துவிட்டால் எப்படி திரும்ப முளையாதோ அதுபோல் பேராசை முற்றும் அற்றவிடத்து கன்மங்களுடன் தோன்ற ஏது கிடையா.

ஒருவன் பகையற்று செய்யப்படுகின்ற கன்மங்களானது பகையினின்று உதிக்காதும், பகையால் சம்பவிக்காதும், பகையே உதிக்கச்செய்யாது. அதாவது பகையே அற்றுவிடுகின்றது. பகையற்றபோது கன்மங்கள் அற்றுவிடுகின்றன. அக்கன்மங்கள் பனைமரத்தை வேறோடே பெயர்த்துவிட்டால் எப்படி திரும்ப முளையாதோ அதுபோல் பகை முற்றும் அற்றவிடத்து கன்மங்களுடன் தோன்ற ஏதுகிடையா.