பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 389

இப்பிகளையும், பவழக்கொடி பாறைகளையும், சிறு சங்கினங்களையும், விளக்கி சுகசீவித வழிகளைக்காட்டி, நல்லறத்தை நாட்டி நிருவாண பாதையில் விடுத்து மகதநாட்டை அகன்று மாளவதேசஞ் சேர்ந்தார். பரவர்களில் மச்சம் பிடித்து சீவிக்கும் இச்சையுள்ளோர் நீங்கலாக மற்றுமுள்ள விவேகிகளில் சிலர் முத்து, சிப்பி, சங்கு, பலகரை, உப்பு இவற்றால் சீவித்து சீருஞ் சிறப்புமடைந்தார்கள்.

அசோதரை நெஞ்சவிடு தூது

மகாராஜாதுறவு. வலைகுறையலாந்தணித்து வன்படவுதள்ளி
குலவுகடலோடுரவு கொண்டு - நிலவலய
மாழமொடு நீள மளத்தற்கரிதாகி
யேழ்கடல் வெள்ளமெனச் சிறந்து.

அருங்கலைச்செப்பு-நெய்தற் பத்து

வலைத்தொழிலையேந்தி வருமீனைப்பற்றுங், குலத்தொழிலாம் என்றார்குடி
முப்போதுயுரை முதலழித்து போடித்தல், ஒப்பாதுலகமுமென்றான்
கொலையொழித்து போடிக்குங்கொள்ளுமுதலாம், பலப்பயிறும் பற்றும்நிதி
சூழோடங்கொண்டு சுழிநீரழுத்தி, ஆழாழி யாய்ந்தானறன்
முத்தும் பவழமுரைச்சங்குமிப்பி, நித்தங்கொலையகற்று நேர்.

25. மஹாமங்கள காதை

அருகன் அவ்விடம் விட்டு அங்கங்கு காணும் மக்களுக்கு அருள் மொழியூட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்துக்கொண்டே சாவித்திரி நகரஞ் சேர்ந்து ஜீத்தாவனத்திலுள்ள அநாதபிந்தகனது ஆச்சிரமத்திற்றங்கினார்.

அவ்வாச்சிரமவாசிகள் யாவரும் அத்தேச வாசிகளால் தேவர் சபையெனக் கொண்டாடும் நீதிநெறிவாய்மெயில் நிலைத்திருந்தார்கள்.

அவர்கள் யாவரும் அருகக்கடவுளைக் கண்டவுடன் எழுந்து தேவாதி தேவ செங்கனெடுமாலே திரிபுறமிதித்தோய், தேவரீர் தெரிசனஞ்சென்றுந் திரும்பக் கிடைத்தவெங்கள் பாக்கியமே பாக்கியம் பஞ்சசீல சிலாக்கியமே சிலாக்கியமென்று வணங்கி சாரணர்கதி வேண்டுமாறு சங்கறநிறையோனை நோக்கி சாது உலகத்தில் மங்களமென்னும் வார்த்தையாதை குறிக்கும் அதன் பலனென்னை அவற்றை விளக்கவேண்டுமென்றார்கள்.

அநாதபிந்தக வாச்சிரம சங்கத்தோர் யாவரும் ஒன்றைக்காணினும் கேட்பினும் அதன் குணாகுணங்களையும் பலன்களையும் தேறவிசாரித்து தங்களுக்கேனும் தங்கள் தேசவாசிகளுக்கேனுந் துக்க நிவர்த்துக்கேதுவாய் சுசவிருத்தி தருமாயின் அவற்றை ஏற்பதும் யாதாமொரு சுகவிருத்தியுங் காணாதாயின் அம்மொழிகளை ஏற்காமலும் விவேகமிக்க நடப்பவர்களாதலின் அவர்கள் வினாவுக்கிதங்கிய மாதவநாதன் மகாமங்களத்தை விளக்கவாரம்பித்தார்.

சமணீர்காள் உலகமாக்கள் தங்கள் தங்கள் இல்லங்களில் வாழைக்கமுகு பலா முதலியவைகளை நாட்டி சகலவாத்தியங்களும் முழங்க சிலர் துக்கத்திலும், சிலர் ஆனந்தத்திலும், சிலர் சுகதுக்கக்கலப்பிலும் இருந்து வரும் செயலை மங்களகாலமென்றும் மங்களகரமென்றும் கூறுவார்கள்.

அஃது அகுஸல கர்மங்களாகும் அதாவது பாம்பின் வாய்ப்பட்டத்தேரை எறும்பை பிடித்துண்பதற்கு ஒக்கும்.

குஸலகன்மங்களாவது யாதெனில் ஒரு குடும்பத்தில் சதியும் பதியுமாகிய இருவர் மனம் ஒன்றாகவும் களங்கமற்ற நெஞ்சினராகவுமிருந்து இல்லற தருமத்தை நல்லறமாக நடாத்தி சருவ சீவர்களுக்கும் உபகாரிகளாக விளங்கி சத்தியதன்மத்தில் நடப்பார்களாயின் அச்செயலையே மகாமங்களமென்று கூறப்படும்.

மற்றுமோர் குடும்பத்தில் சதியும் பதியும் மனமொற்று வாழ்வதுடன் தங்கள் மாமன் மாமி மாதுலன் மாதுலி தனையன் தனைவி முதலிய பந்துமித்திரர் கூடிவாழும் வாழ்க்கையில் யாதாமோர் வன்னெஞ்சமுமின்றி நன்னெஞ்ச முடையவர்களாய் தங்களுக்குக் கிடைக்கும் பொருளை தங்களை அடுத்த பந்துமித்திரர்களுக்கும் அளித்து தாங்களும் அனுபவித்து களங்கமற்ற வானந்தத்தில் வாழ்தல் மகாமங்களமென்று கூறப்படும்.