பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரியத்துடன் நிறைவேற்றி அதன்படி நில்லுங்கள். கண்டசத்திய நிலையை மட்டும் ஒருவருக்கொருவர் ஒன்றாக சம்பாஷித்துக் கொள்ளுங்கள். அதன்பின் இரண்டாவது சத்தியத்தை இடைவிடாது விசாரியுங்கள். சகோதிரர்களில் ஒருவர் நான்குவித சத்தியங்களைப் பூர்த்தி செய்துவருபவராவது இருப்பார்களாகில் அவரை அணுகி ஒன்றாக சம்பாஷித்து அவரைப்போல் ஒவ்வொருவரும் கடைத்தேறுவதற்காக ஒன்றாக சென்று விசாரிணைப் புரியுங்கள். ஒவ்வொருவர்களிடமும் எழும் ரூப ஆசைகளை யாவரும் ஒன்றாக நின்றுவிலக்குங்கள். எழும்பிய ரூப ஆசைகளை விசாரணையால் தடுத்துவிடுங்கள். இனி எழா வண்ணம் ஜாக்கிரதையாயிருங்கள். ஒவ்வொருவரிலும் பரிசுத்த ஞானம் விளங்குமென யாவரும் ஒன்றாக நினைந்து அவர்களில் பெரியோன் எப்போது தோன்றுவாரென சதா ஒவ்வொருவரும் ஒன்றாக சிந்தித்துக்கொண்டிருங்கள். அப்படி தோன்றுவாராயின் அவரையே ஒரு உதாரணமாக வைத்துக்கொண்டு ஒவ்வொருவரும் ஒன்றாகவே சதா விசாரணையுள்ளவர்களாயிருங்கள்.

முத்திபேறு பெருமளவும் சற்றும் சலியாது விடாமுயற்சியாயிருந்து முடிக்கவேண்டிய பிரயாணத்தை முடித்துவிட்டு சேரவேண்டிய இடமாம் நிப்பாணத்தில் யாவரும் ஒன்றாகசேர பிரயத்தனப்படுங்கள்.

ஓ! சகோதிரர்களே! சத்தியதன்மத்தையே உடையாகக்கொண்ட சகோதிரர்கள் வேறு தொழில் புரியாதிருங்கள். பல விஷயங்களில் தலையிடாதிருங்கள். பொருள் சேகரிக்கவேண்டிய யாதேனும் தொழில்களைப் புரியாதிருங்கள். பிரயோசனமற்ற சம்பாஷணைகளைச் செய்யாதிருங்கள்.

சோம்பலுக்கு இடந்தராது சதா முயற்சியுடையவர்களாயிருங்கள். பாப அவாக்கள் அடிக்கடி உங்களை ஏமாற்றவரும் அக்கால் ததாகதர் எந்தெந்த அவாக்களை எந்தெந்த தியானத்தால் சுத்தீகரித்தனரென போதித்துள்ள தியானங்களை யூகித்து தியானியுங்கள்.

சகோதிரர்களில் ஒருவர் நிப்பாணமார்க்கத்திற்கு முதற்படியாம் ஸ்ரோதாபதி மார்க்கத்தில் சித்திபெறுவாறாகில் அவ்வளவுடன் திருப்தியடையாது அதற்குமேற்பட்ட ஸகிர்தாகாமி மார்க்கத்தையும் பெற முயற்சியாம் தியானத்திலிருக்கட்டும் இரண்டாம் மார்க்கமாம் ஸகிர்தாகாமி மார்க்கத்தில் சித்திபெற்றவுடன் மூன்றாம் மார்க்கமாம் அநாகாமி மார்க்கத்தை நாடிதியானிக்கட்டும். அநாகாமி மார்க்கத்தில் சித்திபெற்றவுடன் நான்காம் மார்க்கமாம் அறஹத்து மார்க்கத்தை நாடி தியானித்து நிப்பாணமாம் பரிசுத்தநிலையை அடையும்வரையும் விடாமுயற்சியுடன் முடிக்கும்படி தூண்டுங்கள், இதயத்தை சுத்திசெய்வதே உங்களது தொழிலென நினையுங்கள், பாபகன்மங்களுக்கு அஞ்சுங்கள், மனசுருசுருப்புள்ளவர்களாயிருங்கள், வீரியமுள்ளவர்களாயிருங்கள், சத்தியத்தையே துணையாகத் துணைக் கொள்ளுங்கள், சீலம், ஸமாதி, பிரக்ஞாவென்னும் மார்க்க சத்தியத்திலடங்கிய அஷ்டாங்கமார்க்கத்தின் உண்மெய்களைக்கண்டறிந்து தியானசித்திபெற்று நிப்பாணசுகத்தை அடையுங்கள்.

ஓ! சகோதிரர்களே! சகோதிரர்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்களாகவும், மனோசுத்தம், வாக்குசுத்தம், காயசுத்தமுள்ளவர்களாயும் அந்தரங்கத்திலேனும், பஹிரங்கத்திலேனும் யாதொரு குற்றமும் செய்யாதிருப்பவர்களாகவும், உட்காரும்போதும், எழுந்திருக்கும்போதும் நடக்கும் போதும் அன்புமயமாக உட்காருங்கள், அன்புமயமாக எழுந்திருங்கள் அன்புமயமாகவே நடவுங்கள். உட்காரும் போதும், எழுந்திருக்கும்போதும், நடக்கும் போதும் பற்றுக்களை அறுக்கும் விஷயத்திலேயே சிந்தனை உடையவர்களாய் உட்காருங்கள். பற்றுக்களை அறுக்கும் விஷயத்திலேயே சிந்தனை உடையவர்களாய் எழுந்திருங்கள். பற்றுக்களை அறுக்கும் விஷயத்திலேயே சிந்தனை உடையவர்களாய் நடவுங்கள். சகோதிரர்கள் இவ்விதமாக அந்தரங்கத்திலும், பஹிரங்கத்திலும் தினேதினே இடைவிடாது சாதனத்தாலும் புத்த தர்ஸனம் காணும் வரையில் புத்த ஒளியை உங்களில் பெறும்வரையில்