பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

436 / அயோத்திதாசர் சிந்தனைகள்


97. பௌத்தசோதிரர்களுக்கு அறிவிப்பு

சீவக சிந்தாமணி

மாசித்திங்கள் மாசினமுன்னமடிவெய்த / வூசித்துன்ன மூசியவாடையுடையாகப்
பேசிப்பாவாய்பின்னுமிருக்கையைகலேந்தக் / கூசிகூசி நிற்பர் கொடுத்துண்டறியாதார்.

எமதரிய பௌத்தசோதிரர்களே! ஜகத்குருவும் உலகரட்சகருமாகிய நமது ஒப்பிலாது அப்பன் சித்தார்த்தியாம் சக்கிரவர்த்தித் திருமகன் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காடு என்னும் நான்கு வகை துக்கங்கள் மக்களுக்குள்ளதையும் அதற்கு எதிரிடையாய சுகவழி ஏதேனும் உண்டோ என்று அக்காலத்திருந்த அறு சங்கத்தோர்களை தருவித்து விசாரிணைப்புரிந்தும் விளங்காததினால் தனது சக்கிரவர்த்திபீடத்தையும் அரிய மனைவியையும் ஏகபுத்திரனையும் விடுத்து சிரமயிரை அறுத்தெரிந்து திருக்கரத்தில் ஓடெடுத்து பிச்சாண்டியாக வெளிதோன்றிய மாசிமாதப் பௌர்ணமிநாள் 1913ஸ்ரீ பிப்ரவரிமீ 21உக்குச் சரியாய மாசிமீ 10உ சுக்கிரவாரம் வருகிறபடியால் ஒவ்வோர் பௌத்தர்களும் பெண்டு பிள்ளைகளுடன் நீராடி சுத்தவாடையணிந்து சுத்தபுசிப்பை புசித்து தங்களால் இயன்றமட்டும் ஓர் ஏழைக்கு அன்னமிட்டு அம்மகாராஜன் துறவையும் அவர் அதிதீவிரத்தையுங் கொண்டாடும்படி வேண்டுகிறோம்.

அன்பே ஓருருவாகத் தோன்றி சிவன் என்னும் பெயர் பெற்றுள்ளோன் அப்பௌர்ணமி இரவு முழுவதும் விழித்திருந்து துறவடைந்தபடியால் பௌத்த சங்கத்தோர்கள் யாவரும் அன்றிரவு முழுவதும் விழித்திருந்து துறவினது சுக சாதனங்களைத் தேறவிசாரிப்பதுடன் “சத்தாரி ஆகமபதனி” யென்னும் 'ச, ரி, க, ம, ப, த,னி, என ஏழு வாழிசையுடன் பாடி ஆனந்தங்கொண்டாடும் நாளை சிவராத்திரி என்றுங் கொண்டாடி வந்தார்கள். சகஸ்திரநாமங்களில் சிவனென்னும் பெயரும் புத்தருக்குரியதே என்பதை வடமொழியில் வரைந்துள்ள “இரத்தின காண்டகம்” என்னும் நூலிற் பரக்கக்காணலாம். சூளாமணி, அறநெறிச்சாரம் மற்றுமுள்ள தென்மொழி நூற்களிலும் விளங்கக்காணலாம்.

தற்காலம் அச்சிவனென்னும் பெயரையே ஆதாரமாகக்கொண்டும் புத்தரது செயல்களையே மூலமாகக்கொண்டும் நூதன மதங்களை ஏற்படுத்திக் கொண்டு மதக்கடைகள் பரப்பி அதனாற் சீவிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள். அத்தகையோர் பொய்ப்புராணப் போதங்களையும் பொருளறியாது செய்துவருஞ் செயல்களையும் நோக்காது சத்தியசரித்திரத்தைப் பின்பற்றி ஜகத்து இரட்சகனைக் கொண்டாடும்படி வேண்டுகிறோம்.

- 6:37; பிப்ரவரி 19, 1913 -

98. புராண சங்கை

வினா: ஐயா! இத்தேசத்துள் பெரியசாதிகளென ஏற்படுத்திக் கொண்டுள்ளோர் தாங்கள் வளர்க்கும் நாயினுக்கும் இழிவாகத் தீண்டக்கூடா தென அகற்றிவைத்துள்ள சில வித்துவான்கள் தோன்றி பெரியசாதியோருக் குரியப் பெரியபுராணத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தங்கள் புராணமென நடித்துத் தாளமத்தளமடித்து பிரசங்கிக்க ஆரம்பிக்கின்றவர்களை அப்புராணங்கள் மட்டும் இவர்களைத் தீண்டிக்கொள்ளுமா, அருகில் சேர்க்குமா, புராணமென்பதற்குப் பொருளென்னை. பெரியபுராணம் எக்காலத்தில் தோன்றியிருக்கலாம். அது நடந்த சரித்திரமா நடவா பொய்கதையா அதனை அடியேனுக்கு விளக்கித் தெளிவிக்கும்படி வேண்டுந் தங்களடிமை.

வீ. முத்துகிருஷ்ணன், மதுரை

விடை: அதாவது ஓர் மனிதன் பௌத்த குருவை அடுத்து பஞ்ச சீலோபதேசம் பெற்றுக் கொள்ளுவானாயின் அன்று முதல் அவன் பௌத்தனென்று அழைக்கப்படுவான். மற்றொருவன் கிறிஸ்தவ குருவை அடுத்து ஞானஸ்னானமென்னும் ஓர் தீட்சையைப் பெற்றுக்கொள்ளுவானாயின் அவன் அன்று முதல் கிறிஸ்தவனென்று அழைக்கப்படுவான். இன்னொருவன் மகம்மது