பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வருகிறவர்களுக்கும் போதித்து தாழ்ச்சியடையச்செய்து தருமங்களையும் மாறுபடுத்தி விட்டார்கள்.

- 1:15; செப்டம்பர் 25, 1907 –

அதாவது அரசு திருவென்றும் போதி பண்டிகை என்றும் கொண்டாடி வந்த பௌத்தர்கள் அரசமரத்தை எவ்விடத்தில் காண்கின்றார்களோ அங்கு சாக்கைய முநிவரை சிந்தித்து நீதிநெறியினின்று சுகவாழ்க்கைப் பெற்றுவருவதை புத்த தன்மத்திற்குச் சத்துருக்களாகிய பராயசாதியார் கண்டு அவற்றை மாறுபடுத்திக் கெடுக்கவேண்டும் என்னும் பொறாமெயால் விவேகமற்றக் குடிகளை நெருங்கி நீங்களரசமரத்தடியில் சிந்திக்கும் முனியாண்டவனுக்கு ஆடேனுங் கோழியேனும் பலிகொடுத்து கள், சாராயம், அபினி, கஞ்சா, சுருட்டு முதலியவைகளை வைத்துப் படைப்பீர்களானால் உங்கள் கோரிக்கை நிறைவேறும். அவ்வகை செய்யாமல் வெறுமனே சிந்திப்பதால் யாதுபயனும் அடைய மாட்டீர்கள் என்று மான்தோலைப் போர்த்திருக்குங் குக்கலைப்போன்று பெரியமனிதன் எனச் சொல்லிக்கொண்டு திரியும் மிலேச்சர்கள் வார்த்தையை கல்வியற்றக் குடிகள் நம்பி அரச திருவின் ஆழ்ந்த சீலத்தை மறந்து கள்ளருந்துங் களவாணியில் நிறைந்து கேட்டுக்குப் போகும் வாசலைத் திறந்து கொண்டார்கள்.

அது பால் அம்மன் விழாவென்றும், வேம்பு திருவென்றும் கொண்டாடுங்கால் கிராமத்தில் வாழுங்குடிகள் ஒவ்வொருவரும் பத்துநாள் வரையில் கொலை, களவு, காமம், கள்ளருந்தல் பொய் முதலிய பஞ்சபாதகங் களை அற்றிருக்க வேண்டுமென்னும் காப்புக் கட்டி ஒன்பதுநாள் வரையில் அம்மன் உற்சாகமும் அறநெறியுமூட்டி பத்தாநாள் கிராமக்குடிகளில் வீட்டிற்கு ஒருவர் புதுப்பானைகளும் அரிசி முதலியவைகளையுங்கொண்டு போய் அம்மன் பீடத்திடம் பொங்கல் வைத்து வாழையிலைகளைப் பரப்பி எல்லோர் பொங்கிய சாதங்களையுங் கும்பமிட்டு ஆறியப்பின் ஏழைகளைப் பசிதீர உண்பிக்கச் செய்து ஆனந்தகோஷத்துடன் அவரவர்களில்லங்களில் சேர்ந்து சுகவாழ்க்கை யுற்று இருப்பதைக் காணும் பராயசாதியோர் இவ்வொழுக்கத்தைக் கெடுக்க வேண்டுமென்னும் பொறா மெயினால் தங்களால் ஏற்படுத்திக் கொண்ட கசிமல சாதிக் கட்டுகளினால் ஒருவர் பொங்கலை ஒருவருடன் சேர்க்க விடாமலும், சாதங்களை ஒன்றாகக் கொட்ட விடாமலும் ஆடுகளையும், மாடுகளையும் கோழிகளையும் பலி கொடுக்கும்படி செய்து நல்லொழுக்கங்களை மாற்றிவிட்டார்கள்.

அம்மன் உற்சாகத்திற் செய்யும் நல்லொழுக்க தானங்கள் தீயோழுக்க நிலைக்கு மாற்றுவதற்கு ஆதாரம் யாதெனில்:

அம்பிகையம்மன் நிருவாணத்திற்கு நெடுங்காலங்களுக்குப் பின் மதுரையில் கோவிலன் மனைவி கன்னகை என்பவளின் சிலம்பினால் நேரிட்ட துன்பத்திற்கு ஆற்றாமல் அவள் ஒரு புரத்து மார்பைத் திரிகியெடுத்து உதிரத்துடன் அரண்மனைமேல் வீசிய சாபத்தினால் பத்தினி விரதகோடம் பற்றிப் பாழ்நேரிட்டகாலமும் அக்கோபாவேஷந்தணிய ஆயிரமனிதர்களை பலியளித்தகாலமும் ஆடிமாதம் ஆகையால் அக்காலத்தில் கன்னகா பத்தினியை வருஷந் தோரும் சிந்திப்பவர்கள் மனிதபலியைத் தவிர்த்து ஆடுமாடுகளை பலிகொடுப்பது வழக்கமாயிருந்தது. அவ்வழக்கத்தைக் கந்தி நெடுநிதியாகும் அவ்வையின் சுத்த தன்மத்திற் சேர்த்து பாழாக்கிவிட்டார்கள்.

சிலப்பதிகாரம்

கோமுறையறைந்த கொற்றவேந்தன் / றான்முறைபிழைத்த தகுதியுங்கேணீர்
ஆடி திங்கள் பேரிருள் பக்கத் / தழல்சோகுட்டத் தட்டமிஞான்று
வெள்ளிவாரத் தொள்ளெரியுண்ண / வுரைசால் மதுரையோ டரசுகேடு ருமெனு.
நிறங்கிளரருவிப் பரம்பின் றாழ்வரை / நறுஞ்சினை வேங்கை நன்னிழற்கீழோர்
தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே / தொண்டதந்தொடுமின் சிறுபரைதொடு மின்
கோடுவாய் வைம்மின் யெடுமணியியக்குமின் / குறிஞ்சிபாடு மின் னறும்புகையெடு மின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின் / பாவலும் பரவுமின் விரவுமலர்தூவுமின்
ஒருமுலை யிழந்த நங்கைக்கு / பெருமலை துஞ்சாது வளஞ்சுரக்கெனவே.

புத்ததன்மத்தை மாறுபடுத்தி மிலேச்சவதன்மத்தை நாட்டிய பராய சாதியோர்