பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 479

அறநெறித்தீபம்

பொய்யகற்றி மெய்புகலும் போதரடி போற்றுதலும்
வையகத்தோ ரென்றுமிகு வாழ்த்தி சுகமேற்றுதலுந்
துய்யனென் சீவனெலாந் தொண்டுநிலை யாற்றுதலும்
உய்யுமுடல் வாக்குமனக்காப்பதனின் பலனாகும்.

34. கிழமெய்ப் படவாழ்

கிழமெய் - அறிவு முதிர்ந்தோன், பட - என்று சொல்லும்படியாக, வாழ் - உன் வாழ்க்கையை சீர்பெறச் செய்யும் என்பதாம்.

அறிவு மிகுத்த ஞானிகளையே கிழவரென்றும் கிழமெய் என்றும் கிழமெய்யரென்றும், மூத்தோரென்றும், முத்தரென்றும், அறநூற்கள் முறையிடுகின்றபடியால் நமது ஞானத்தாயும் கிழமெய்ப்படும் வாழ்க்கையால் முத்தனாகக் கடவாயென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

கிழமெய் என்பது முதிர்ந்தோர், மூத்தோர் மிக்கோரென்னும் பொருட்களின் ஆதாரங் கொண்டு புத்தபிரானையும் கிழவனென்றே வழங்கி வந்தார்கள்.

சூளாமணி

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை / போதியங் கிழவனை பூமிசை யொதிங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதிங்கிய / சேதியென் செல்வனின் றிருவடி வணங்கினம்.

மேருமந்திரபுராணம்

மண்ணினுக்கிறை மெய்ப்பூண்டான்
மன்னனை சயந்தனென்றே
திண்மிர சரைந்து பின்..
சிறப்பொடு (இங்கு சிலவரிகள் தெளிவில்லை)

குடிவாரம் - நிலவாரம் என்பதும், குடிக்கிழமெய் - நிலக்கிழமெய் என்பதும், ஓர் பலனைக் குறித்த மொழிகளாகும். அப்பலன் பிரிதி பலனைக் கருதாது ஈயும் பரோபகாரப் பலனாயுளதேல் அத்தேகியை கிழவன், மூர்த்தோன், மூப்பன் என்னும் சிறப்புப் பெயரால் அழைத்து வந்தார்கள்.

இதை அனுசரித்து நமது ஞானத்தாயும் உனது வாழ்க்கையில் கிழமெய்ப்பட வாழ்கவென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

35. கீழ்மெயகற்று

சீழ் - தாழ்ந்த செயலுக்குரிய, மெய் - தேகி என்று சொல்லுதற் கிடங்கொடாது, அகற்று - நீங்கி நில்லென்பதாம்.

அதாவது உனது உருவை மற்றொருவன் கண்டவுடன் ஆ இவன் வஞ்சகன், குடிகெடுப்போன், பொருளாசை மிகுத்தோன், கள்ளன், கொலையாளி, குடியன், வியபசார மிகுத்தோன், பொய்யனென்னும் கீழ்மகன் இவனென உன்னை மற்றொருவன் அகற்றுதற் கிடங்கொடாது நீயே அக்கீழ்மகன் செயற்களை அகற்றும் என்னும் கருத்தை பின்னிட்டு கீழ்மெயகற்றும் என்று முன்னிட்டுக் கூறியுள்ளாள்.

கீழ்மக்கள் மேன்மக்களென்னும் பெயர்கள் இத்தகையச் செயல்களால் தோற்றியவைகளேயாம்.

வளையாபதி - தீவினையச்சம்

கள்ளன் மின் களவாயின யாவையுங்
கொள்ளன்மின் கொலைகூட்டி வருமற
மெள்ளன் மின்னில ரெண்ணியாரையு
நள்ளன்மின்பிறபெண்ணோடு நண்ணன்மின்

மேருமந்தரபுராணம்

பொய், கொலை, காமம் புலை சூது கள்ளகற்றி
மெய்யறத் திசையினோடு பொருளினை வரைந்துமேனி
நையினும் வதங்கணையா வகையினா நாகராசன்
சய்யமா சய்யமத்தின் றலைநின்றார் போலச் சென்றார்.

36. குணமது கைவிடேல்

குணம் உமக்கு தோற்றிய சுகம் அது - அதினாலாய தென்றறிந்து