பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542 / அயோத்திதாசர் சிந்தனைகள்

யாக்கை நிலையாமெய்

கோள்வலைப் பட்டுஞ் சாவாங் கொலைக்களங் குறித்துச்சென்றே
மீளினு மீளக்கண்டு மீட்சியொன்றானு மில்லா
நாளடி யிடுத லொன்று நம்முயிர் பருகுங் கூற்றின்
வாளின்வாய் தலைவைப்பார்க்குச் செல்கின்றோம் வெல்கின்றோமே.

தூயதன்மெய்

எனதென சிந்தித்தற்றன்னுடலது பற்றுக்காமேற்
றினைப்பெய்து புனகம்போல சிறிததும் பற்றாதாகி
வினையொழியத் தினைமாசற்று மீண்டிடி லுலகவின்பப்
புனலினைக் கழுவியாற்றி புந்தியி லுரைது மென்பார்.

இறைமாட்சி

சீற்றம் செற்று பொய் நீக்கிச் செங்கோலினாற்
கூற்றங் களைந்து கொடுக்க வெனுந்துணை
மாற்றமேன வின்றான்றடு மாற்றத்துத்
தோற்றந் தன்மெயுங் காமுறத் தோன்றினான்

.

குற்றங்கடிதல்

மண்ணுளார் தம்மெய்ப்போல்வார் மாற்றதேயன்று வாய்மெய்
நண்ணினாற் றிறத்துங் குற்றம் குற்றமே நல்லவாகா
விண்ணுளார் புகழ்தற்கொத்த விழுமியா நெற்றிபோழ்ந்த
கண்ணுளான் கண்டத்தன்மேற் கறையையார் கறையென்றென்பார்.

இடுக்கணிழீயாமெய்

வேரிக்கமழ் தாரரசன் விடு கென்ற போழ்துந்
தாரித்தலாகா வகையாற் கொலைச்சூழ்ந்த பின்னும்
பூரித்தல் வாடுதலென் றிவற்றால் பொலிவின்றி நின்றான்
பாரித்தலெல்லாம் வினையின் பயனென்ன வல்லான்.

அன்பர்களே! அழியா தன்ம நூற்களை வெளியிட்டு ஆதரிப்பதே ஆனந்த தன்மமாதலின், அந்த தன்மத்திற்கு ஆதிமூலனாம் அறன்செயலை முற்றும் ஆய்ந்து அறஹத்துநிலை பெற விரும்புவோர் சத்தியதன்ம நூற்களை சகலருக்கும் பரவச்செய்ய வேண்டுகிறோம்.

3:47, மே 4, 1910

10. வள்ளுவர் காலம்

வினா : இம் மே மாதம் 2ல் வெளிவந்த சுதேசமித்திரன் பத்திரிகை ஐந்தாம் பாரம் இரண்டாவது கலத்தில் திருவள்ளுவரைப் பற்றிய சில குறிப்பு களென்னு முகப்பிட்டு “நல்கூர் வேள்வியார் பாட்டில் வடதிசையைநோக்கி நப்பின்னை பிராட்டியை மணந்த கண்ணபிரானை உத்தர மதுரைக்கு அச்சு (ஆதாரம்) என்றும், தெய்வப்புலவர் கடைச்சங்கத்தார் காலத்துக்கு இருநூறு முந்நூறாண்டுகட்கு முன்னவராக நிறுத்தலே பொருத்தமாகத் தோன்றுகிற தென்றும் நம்காலத்துள்ள பெரிய புலவரொருவர் வாக்கை இராமர் காலத்தில் இருந்த ஒருவர் கூற்றாக வைத்துப் பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய் எனின் அது சிறவாதென்பது பிரத்தியட்சமாமென்றும், திருவள்ளுவனார் தம் நூலை வியாழம் வெள்ளி இவர்களின் நூலாதாரங்கொண்டு செய்துள்ளது போற் போக்குக் காட்டி வரைந்துள்ளது கண்டு மிக்க வியப்புற்றேன். ஆதலின் பத்திராதிபர் கருணைபாவித்து அன்னோர் கருத்து யாதார்த்த சரித்திரத்தைப் பொருந்துமா பொருந்தாவா என்பதை அடியேனுக்குத் தெரிவிக்கும்படி வேண்டுகிறேன்.

வீ. தணிகாசலம், இரங்கூன்

விடை : இத்தேசத்துள் கண்ணபிரானென்று ஒருவர் பிறந்திருந்தார் என்னும் சரித்திராதாரங்களேனும், செப்பேடுகளேனும், சிலாசாசனங்களேனும் ஒன்றுங்கிடையாது. ஆதலின் திருவள்ளுவர் மாலையிலுள்ள நல்கூர் வேள்வியார் பாடலைக்கொண்டேனும் ஓர் நூலாதாரந் தேடிக் கொள்ளும் வழி திறந்திருக்கின்றார்கள். ஆயினும் அன்னோர் கூற்றே திருவள்ளுவர்