பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 543

மயிலையிற் பிறந்தனரென்பதை மாற்றி மதுரையிற் பிறந்தார் என்பதும் ஓர் சார்பேயாம்.

இரண்டாவது முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச்சங்கமென்னும் மொழிகளே முற்றும் மாறாயிருப்பது கொண்டு பன்னீராயிர புத்தசங்கங்கள் இருந்த மதுரையில் இந்த மூன்று சங்கங்களிருந்த விவரத்தை கனந்தங்கிய ஆர்ச்சலாஜிக்கல் சர்வேயர் காணாத விவரந் தோன்றவில்லை. இம்மூன்று சங்கங்கள் இருந்ததாக ஏற்கினும் கடைச் சங்கத்திற்கு இருநூறு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர் திருவள்ளுவர் என்று கூறியுள்ளக் கூற்றால் கடைச்சங்கத்திற்கு திருவள்ளுவர் சென்றதும் அவரது குறளை சங்கப்பலகையில் வைத்ததும் பொய்யென்றே திட்டமாக விளங்குகிறபடியால் சங்கசரித்திரங்களைக் கொண்டே சங்கைகளுள்ளது என்பதைத் திட்டமாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

மூன்றாவது புத்தபிரான் தோன்றிய நெடுங் காலங்களுக்குப்பின் இராமர் தோன்றியுள்ளாரென்று வஷிஷ்டர் கூறியுள்ள இஸ்மிருதிகளில் ஒன்றாம் வாஷிஷ்டங் கூறுவதுமின்றி அநுமார் இலங்காதீவஞ் சென்றிருந்தபோது அங்குள்ள ஓர் கோபுரத்தின் மீதுட்கார்ந்து ஈது புத்த மடமென்று கூறியதாக வடமொழியிலுள்ள வால்மீக ராமாயணங் கூறுகின்றது. இத்தகைய நூலாதாரங்களை அன்னோர் கண்டிருப்பாராயின் இராமர் திருவள்ளுவருக்கு முந்தியவரா பிந்தியவரா என்பதும் பொய்யிற் புலவன் பொருளுரை தேறாயென்னும் மொழி சிறப்புறுமா உறாவாவென்றும் உணர்ந்து கூறுவர். அந்நூற்களையும் புத்தரது காலவரைகளையும் அறியாதவராதலின் அம்மொழி சிறவாதென்று கூறிவிட்டார்.

நான்காவது வியாழம், வெள்ளி இவர்களின் நூலாதாரங்கொண்டு திருவள்ளுவர் தனது குறளை இயற்றியுள்ளாரென்பது திருவள்ளுவர் மாலையிற் கூறியுள்ள செய்யுட்களுக்கு முற்றும் மாறாகவே முடியும். இதுகாருந் தோன்றா வியாழம் வெள்ளி இவர்களின் நூற்கள் முற்கால சரித்திரங்களில் இல்லாது முரண்பட்டு தற்காலந்தோன்றியுள்ளபடியால் திருவள்ளுவர் குறள் ஆதாரங் கொண்டே வியாழம், வெள்ளி, பிரகஸ்பதி, சுக்கிரன், சாணாக்கியர் அர்த்த சாஸ்திரம் யாவுந்தோன்றியுள்ளதென்பது அதன் தோற்ற காலங்கொண்டே சொல்லாமலே விளங்கும்.

ஆதிபகவனாம் புத்தபிரான் ஓதியுள்ள திரிபீட வாக்கியங்களாம் திரிபேத வாக்கியங்களைத் தழுவி முதலாம் பிடகத்திற்கு வழி நூலாந் திரிக்குறளை திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகையில் அவற்றை மறைப்பது முழு பூசுணைக்காயை பிடிசாதத்தால் மறைப்பதற்கொக்கும். ஆதலின் நமதன்பர் இனியாதாரமற்ற சரித்திரங்களையும் இயல்புக்கு விரோதச்செயல்களையும் உடனுக்குடன் நம்பாது தேறவிசாரித்துத் தெளியும்படி வேண்டுகிறோம்.

3:49, மே 18, 1910

11. திருவள்ளுவர் யார்?

வள்ளுவரென்பது செயல்பற்றியப் பெயர்.

முன்கலை திவாகரம்

வள்ளுவர், சாக்கையரெனும் பெயர் மன்னர்க் / குள்படு கருமத் தலைவர்க் கொக்கும்.

இத்தகையக் கருமச்செயல்களை பௌத்தமார்க்க அரசர்களுக்கும் குடிகளுக்குமே நடாத்திவந்தவர்களும் வள்ளுவர்களேயாம்.

சீவகசிந்தாமணி

பூத்த கொங்குபொற் பொன்சுமந்துளா / ராய்ச்சியர் நலக்காசெறூணனான்
கோத்த நித்திலக் கோதைமார்பினான் / வாய்த்த வன்னிரை வள்ளுவன்சொனான்.

மந்திரத்தரசன் வல்லே நிமித்தகன் வருக வென்ன
வந்தரத் தோடுகோளிற் சாதக மவனுஞ் செய்தான்
னிந்திர திருவிலேய்ப்பக் குலவிய புருவத்தாட்கு
வந்தடை பான்மை மண்மே லிராசமா புரத்ததென்றான்.