பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 551

மெய்கெட எழுதி பொய்தேகமென்னும் பொருளை ஏற்றுவருகின்றார்கள். இதுபோலவே நன்மெயென்னும் தெய்வப்பெயரை மறந்து நன்மையென்னும் ஏவற்பொருளை ஏற்று ஏவல் மொழியை வழங்கி ஏவலட்சரத்தை வரைந்து வருகின்றார்கள் . இத்தகையாய் பொருள்கெட்டு வழங்குமொழிகளை பூர்வத்தினின்று புலவர்கள் யாவரும் வரைந்து வருகின்றார்கள். அவற்றை தற்காலம் மாற்றப் போமோவென்னில் புத்தன்மமாம் மெய்யறங்கெட வழங்கு மொழிகள் யாவையுந் திருத்தி நல்லறத்தில் ஒழுகவேண்டுமென்பதே நமது கருத்தாம்.

ஈதன்றி புறப்பொருட்காட்சி எம்மட்டுண்டோ அம்மட்டகற்றி அகப்பொருட் காட்சியாம் உண்மெயில் அன்பை வளர்த்தி நன்மெய்க் கடைபிடிப்பான் வேண்டி நாதன் வகுத்துள்ள தமிழினது மெய்ப்பாட்டியலே போதுஞ் சான்றாம்.

4:29, டிசம்பர் 28, 1910

18.அகஸ்தியர், நாயனார், ஒளவையார்

வினா : அகஸ்தியர், நாயனார், ஒளவையார் இவர்கள் மூவரும் எக்கூட்டத்தைச் சார்ந்தவர்கள் நூலாதாரத்துடன் விளக்கி அடியேனை ஆதரிக்க வேண்டுகிறேன்.

ஏ. நாராயணசாமி, ஓரத்தூர்

விடை : அகஸ்தியர், நாயனார், ஒளவையார் இம்மூவரும் பௌத்த தன்மத்தைச்சார்ந்த திராவிட குலத்தவர்களும் சாக்கைய வம்மிஷ வரிசையோர்களுமேயாம்.

இதற்குப் பகரமாய் வானசோதிகளின் கணிதங்களைக்கொண்டே வருங்காலம், போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சாக்கையர், வள்ளுவர், நிமித்தகரென்னும் வம்மிஷ வரிசையிற் தோன்றிய புத்தபிரானென்னும் அவலோகிதர் பால் திராவிடமென்னுந் தமிழ்பாஷையை அகஸ்தியர் கற்று தென்னாடெங்கும் பரவச்செய்திருக்கின்றார்.

வீரசோழியம்

ஆயுங்குணத்தவலோகிதன் பக்கலகத்தியன்கேட்
டேயும்புவனிக் கியம்பிய தண்டமிழீங்குரைக்க.

பதஞ்சலிமா முனிவர்

பாருங்கீர்திசையிலையர் சட்டமுநி பானுமாமலையிலாகினார்
பன்னதென்றிசையிலே யிருந்து தமிழ் பாஷையோதின னகத்தியன்.

அவலோகிதரென்னும் புத்தபிரானிடம் தமிழினைக் கற்று தென்னாடெங்கும் அத்தமிழினைப் பரவச்செய்த அகஸ்த்தியர் தான் இயற்றி யுள்ள தமிழ் நூற்கள் யாவற்றிற்கும் காப்பாக புத்தபிரானையே வினாய கரென்றும், கணநாயகரென்றும், திவாகரரென்றும் சிந்தித்திருக்கின்றார்.

அகஸ்தியர் பரிபாஷைத்திரட்டு

காப்பு

பரமஞானோதயத்துப் பரஞ்சுட ருலகுக் கெல்லாந்
திரமதா யுதித்தஞான திவாகரன் திருநாள் போற்றி
வரமதாம் வகாரயோக மறைப்புநீற் பாடையெல்லாம்
முருகமழ் தமிழாற் செய்து முடிக்கமும் மொழியான் காப்பே.

என ஞானதிவாகரராம் புத்தபிரானையே காப்புக்கு முன்னெடுக்குங் கடவுளாக சிந்தித்து தனது நூலை முடித்திருக்கின்றார்.

திருவள்ளுவநாயனார்

தானியற்றிய முப்பாலாகும் திரிக்குறளை வரையும் முகப்பில் கடவுள் வாழ்த்து காப்பாம் பத்துபாடலிலும் புத்தபிரானையே சிந்தித்திருக்கின்றார்.

பகவனென்னும் பெயரை சிலர் பொதுப்பெயரெனக் கூறுவாறும் உண்டு. உலகெங்குமுள்ள மக்களின் அஞ்ஞான இருளை அகற்றி மெஞ்ஞான முதயமுறச் செய்தவர் புத்தர் ஒருவரேயன்றி வேறொ ருவரில்லாததாலும், அப்பகவனென்னும்