பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சம்பந்தமுற்றிருப்பினும் வடமொழியைப் பாணினியார் ஜனகர்முதலானோரிடமும் தென்மொழியை அகஸ்தியர், திருமூலர் முதலானோரிடம் ஈய்ந்து பரவியதில் பாணினியாரும் ஜனகரும் வடதேசத்திருந்தே மகடபாஷை யினின்றுதித்த சகடபாஷை மொழிகளைப் பிரபலமாகப் பரவச்செய்ததால் அவற்றிற்கு வடமொழியென்றும் அகஸ்தியருந் திருமூலரும் தென்தேசம் வந்து மகடபாஷையினின்றுதித்த திராவிடபாஷைமொழிகளைப் பிரபலமாகப் பரவச்செய்ததால் இவற்றிற்குத் தென்மொழியென்றும் பேதந் தோன்றியதேயன்றி மற்றும் அட்சரங்களிலும் மொழிகளிலும் ஒலிகளிலும் சரித்திரங்களிலும் ஒலிபற்றிய பெயர்களிலும் அதனதன் செயல்களிலும் பொருந்தியே நிற்கும். அதாவது வடமொழியில் மக்களுக்குரிய செயலைப்பற்றியுந் தொழிலைப்பற்றியும் பிராமணன் க்ஷத்திரியன், வைசியன், சூத்திரனென்றும்: தென்மொழியில் அந்தணன், அரசன், வணிகன், வேளாளனென்றும் வழங்கிவந்துள்ளார்கள்.

ஈதன்றி மக்களும் ஐந்து இந்திரியங்களை வென்ற திரமுடையோரை வடமொழியில் ஐந்திரர் என்றும், அம்மொழியை தென்மொழியில் இந்திரர் என்றும் வழங்கி திரிக்குறளில் “பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீரொழுக்கும், நெறிநின்றார் நீடுவாழ்வர்” என்னுமொழியை சிரமேற்கொண்டு ஆதியில் ஐந்து இந்திரியங்களைவென்ற இந்திரனென்னும் புத்தரையே பிரபலமாகத் தொழுதும், இந்திரவிழாக்களைக்கொண்டாடியும் வந்தபடியால், இத்தேசமக்கள் யாவரையும் இந்தியர்களென்றும், இத்தேசத்தை இந்தியதேசமென்றும் நாளதுவரையில் வழங்கியும் வருகின்றார்கள்.

வடமொழியுந் தென்மொழியும் இந்திரராம் புத்தபிரானால் ஏககாலத்தில் தோன்றியதாயினும் தென்மொழியைமட்டிலும் தனிமெயாக உருப்பட எழுதினும் எழுதலாம்.

விதி

வீரசோழியம் “மதத்திற்பொலிவும் வட சொற்கிடப்புந் தமிழ்மரபு, முதத்திற்பொலியேழை சொற்களின்குற்றமு மோங்குவினைப், பதத்திர்சிதைவு மறிந்தேமுடிக்கப்பன் னூராயிரம் விதத்திற்பொலியும் புகழவலோகிதன் மெய்த்தமிழே”

மொழி என்னுந் தமிழ் சொற்களில் வேற்றுமெ எட்டும், திணை இரண்டும், பால் ஐந்தும், வழுக்கள் ஏழும், மாறுதல் எட்டும், காலம் மூன்றும், இடம் மூன்றும், அடி இரண்டுங் கண்டெழுதுவதே சொற்களின் சிறப்பாகுமெனத் தமிழினை ஈன்று வளர்த்த தாதாக்களாகும் சமணமுனிவர்களின் கருத்தாதலின் தற்காலம் இக்கருத்தை மேற்கொண்டு தமிழினைக் கேடறவளர்க்கவும் மேலும் மேலும் அதனை சிறப்புற விளங்கவைக்கவுந் தோன்றிய கருணைதங்கிய பிரிட்டிஷ் துரைத்தனத்தார் இலட்ச ரூபாய் செலவிட்டு வெளியிடுந் தென்மொழி நிகண்டினை மிக்க ஆராய்ந்து வெளியிடுவார்களென்று நம்புகிறோம்.

காரணமோவென்னில் தென்மொழியிலுள்ள வடமொழி கிடப்பை விளங்கக்கூறினும் மகமதியர்காலத்தில் கலந்துள்ள அதாலத்க்கோர்ட், அமீனா, சுபீனா, வக்காலத், கொத்தவால், ஜமீன்தார், தாசில்தார், மிட்டாதார், மிராசுதார் என்னுமொழிகளும், போர்ட்சுகீயர்காலத்தில் கலந்துள்ள, நாத்தா, விவீக்கா கலகலா என்னு மொழிகளும், ஐரோப்பியர் காலத்திற் கலந்துள்ள தீனபுட்டி, கோப்பை, புட்டி, இன்னும் பலவகைமொழிகளுங் கலந்தே வழங்கி வருகின்ற படியால் இவைகள் யாவற்றையும் அந்தந்தபாஷைகளின் மூலோற்பவங்கண்டு நீக்கவேண்டியவற்றை நீக்கியுஞ் சேர்க்கவேண்டியவற்றை சேர்த்தும் பல்பெயர்பொருளை விளக்கவேண்டிய கஷ்டங்கள் அதிகமிருக்கின்றபடியால் பெருநிகண்டினை வெளியிடுதற்கு இலக்கண இலக்கியங்கற்ற வித்வான்கள் உதவிமட்டிலும் போதியதன்று. ஓடதிகளின் உட் பொருளாய்ந்தவர்களும், சோதிடத்தின் உட் பொருளாய்ந்தவர்களும், ஞானவாக்கிய சாதனங்களின் உட்பொருளாய்ந்தவர்களுங் கலந்தே ஆராய்ந்து பதிப்பது மேலாம். ஆதனின்