பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

584 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.) உண்மெய் புறமெய்யென்றும், அந்தரங்கம் பயிரங்கமென்றும், பரிநிருவாண காலத்தில் விளங்குபவற்றின் வகைதெரிந்து நீதிநெறி ஒழுக்கத்தில் நிலைப்பவர்களே இவ்வுலகத்தை சிறப்படையச்செய்து தாங்களும் சிறப்புற்று உலாவுவார்கள் என்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மக்கள் பஞ்சஸ்கந்தத்தால் ஒருமெய் அமைந்திருப்பினும் ஆசாபாசப் பற்றறுத்து உள்ளமைந்த ஆற்றலால் புளியம்பழம்போலும் ஓடுபோலும் புழுப்போலும் விட்டில் போலுமுள்ள இருமெயின் பிரிவை உண்மெய், புறமெய் என்றும், அந்தரங்கம், பயிரங்கமென்றும், அழியாக்கை, அழியாயாக்கைகளை இருமெய் என வழங்கி வந்தவற்றை பரிநிருவாணமுற்ற இருபிறப்பாளர் வரைந்தவைகளாயினும் மற்றுமுள்ளோர் உலாவும் உடலென்றும் ஊழ்க்காக்கும் உடலென்றும் இருமெயாக வழங்கியவற்றை ஞானக்குறளாக்கியோளாகும் அவ்வை "உணர்வாவ தெல்லாம் உடம்பின்பயனே உணர்கவுணர் உடையா" என்றும், வெள்ளி பொன்மேனிய தொக்கும் வினையுடைய உள்ளுடம்பினாய ஒளி" என்று கூறியவற்றிற்குப் பகரமாக சூளாமணி ஆக்கியோன் தோலாமொழி தேவர் "ஒருவனதிரண்டு யாக்கை யூன்பயினரம் பின்யாத்த, உருவமும்புகழுமொன்றாங் கவற்றினூழ்காத்து வந்து, மருவிய உருவமிங்கே மறைந்துபோ மற்றயாக்கை, திருவமர்ந்துலகமேத்தச் சிறந்த பின்னிற்குமன்றே " என்றும் நன்னூலாக்கியோன் பவணந்திமுனிவர் "ஒற்றுமெ நயத்தினென்றெனத் தோன்றினும், வேற்றுமெ நயத்தின் வேறேயுடலுயிர்" என்றும், அறநெறிச்சார வாக்கியோன் முனைப்பாடியார் "தன்னொக்குந்தெய்வம் பிறிதில்லை தான்றன்னை, எழுத்தெண்ணே நோக்கி (இருமெயுங்) கண்டாங், கருட்கண்ணேநிற்பதறிவு" என்றும், சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் “உள்பொருளிதுவென உணர்தன்ஞானமாந், தெள்ளிதிநப்பொருடெளிதல் காட்சியாம், விள்வர (விருமெயும்) விளங்கத் தன்னுளே, யொள்ளிதில் தரித்தலை ஒழுக்கமென்பவே" என்றுங் கூறியுள்ள சார்புநூற்களாலும் இருபிறப்பால் உண்டாம் இரு மெவகைதெரிந்து அறம்புரிதலே உலகிற்குந் தனக்கும் சிறப்பென்பது விரிவு.

4.உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்புக்கோர் வித்து.

(ப.) உரனென்னும் - அறிவென்னும், தோட்டியான் - கதவினைகொண்டு, ஓரைந்தும் - மெய், வாய், கண், மூக்கு, செவி யென்னும் ஐந்தினையும், காப்பான் - அடைப்போன், வரனென்னும் - தண்மெயாம், வைப்புக்கோர் - பெருமெ பெருதற்கோர், வித்து - ஞானவிதைக்கொப்பாவானென்பது பதம்.

(பொ.) தனது அறிவையே கதவாகக்கொண்டு ஐம்புலன்களை அடைப்போன் பற்றற்று சாந்தசொரூபியாதற்கு ஓர் வித்தென்னப்படுவான்.

(க.) இரசோகுணம் தமோகுணம் இரண்டும் அற்று சத்துவகுணமாம் பிரம்மநிலை விரிதற்கு விதையாவது யாதெனில் ஐம்புலனை அடக்கும் அறிவென்பதுவே கருத்து.

(வி.) மெய்யுணர்ச்சியின் அவாவினையும், கண்பார்வையின் அவா வினையும், மூக்கால் முகர்ந்த அவாவினையும், நாவினால் உருசித்த அவாவினையும், செவியினாற்கேட்ட அவாவினையும் பற்றிச்செல்லும் ஐந்துவாயல்களே கேட்டின்வழியென்று அறிந்து அவ்வாயல்களை அடக்கும் அறிவென்னுங் கதவினைகொண்டடைத்து வரனென்னும் பிரம்மமாம் சாந்தத்தை நிறப்பும் முத்திக்கு வித்தென்பது விரிவு.

5.ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்க்கோமா
னிந்திரனே சாலுங் கரி.

(ப.) ஐந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் வழிகளைந்தினையும், அவித்தான் - அடக்கினவனது, ஆற்றல் - சுகநிலையை சொல்லவேண்டின், அகல் - அகண்ட, விசும்புளார்க்கு - வானுலகோர்க்கு கோமான் - அரசனாக விளங்கும், இந்திரனே - புத்தபிரானே, சாலும் - போதுமான, கரி - சாட்சியென்பது பதம்.